
இதற்கு முந்தய பதிவை படிக்காதவங்க படிச்சிட்டு வாங்க.. தில் இருந்தா.. ஹி.. ஹி.. முந்தய பதிவில் சஸ்பென்ஸ் வைக்கும் எண்ணம் இல்லை. இடம் பற்றாத காரணத்தால் அதை பாதியிலேயே முடிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு.
அந்த பெண்ணிடம் கல்யாணம் பற்றி, காதல் பற்றி அறிவுரை சொன்னதும்.. கடைசியாக நடந்த உரையாடல்..
அந்த பெண்: ராஜா என்னை ரெண்டாவதா திருமணம் பண்றதை எதிர்க்குறீங்களா..
நான்: அப்போ புருஷன விட்டுட்டு வரியா?
அந்த பெண்: அது முடியாது. ரெண்டு பேருமே வேணும். (இதுதான் அவள் நினைப்பது)
நான்: நீ குழப்பத்துல இருக்க.. அதனால அவனையும் சேர்த்து குழப்புற. இரண்டாவதா கல்யாணம் பண்ணலாம். தப்பு இல்ல. ஆனா அதுக்கு முதல் புருஷன் குடிகாரன், கொடுமைக்காரன், இல்லை சந்தேகப்பட்டே சாகடிக்கிறவன் இப்டி ஏதாவது ஒண்ணு பண்ணனும். அட்லீஸ்ட் உனக்கு பிடிக்காமயாவது இருக்கணும். எதுவுமே இல்லாத பட்சத்தில், அவனை விட்டுபோக நீ நெனக்கிறது சரி இல்லை. உன் புருஷன் உன்னை கட்டியத தவிர வேற என்ன தப்பு பண்ணாரு. இந்த விஷயம் தெரிஞ்ச அவர் துடிச்சி போக மாட்டாரா? உனக்கும், உனக்கு பிறக்கப் போற குழந்தைக்கும் தான சம்பாதிக்க போய் இருக்காரு. ராஜா இன்னிக்கு இந்த படம் பார்த்துட்டு, 2 பேரை காதலிச்சி பார்க்குறவன் நாளைக்கு வேற படம் பார்த்து உன்னை விட்டுட்டு போயிட்டான்னா என்ன பண்ணுவ?
அந்த பெண்: அதான் அக்கா எனக்கும் சந்தேகமா இருக்கு. அதனால தான் நேத்து சண்டை போட்டுட்டு வந்தேன். ஆனா இன்னிக்கு கோபம் இல்லை. அவன் எப்படி இருந்தாலும் எனக்கு பிடிக்கும்.
நான்: சரி உன் இஷ்டம். நல்ல வாழ்க்கை கிடைச்சும் அருமை புரியாம கெடுத்துக்க போற. அவ்ளோ தான். இனி இது விஷயமா என்கிட்டே வராதிங்க. இதுக்கு பேர் மட்டும் காதல்னு சொல்லிட்டு திரியாத.. காதலுக்கே கேவலம்.. good bye.
ராஜாவிடம் நான்: (அந்த பொண்ணு மனசுல உள்ளதை முழுவதும் சொல்லி) கல்யாணம் ஆன பிறகு தொல்லை பண்ண கூடாதுடா. அவளுக்கு ரெண்டு பேருமே வேணுமாம்டா. புரிஞ்சிக்கோ. உனக்கு வேற பொண்ணு கிடைக்கும். அவளை மறந்துடு. அந்த பொண்ணோட புருஷன் வந்தபின் பொண்டாட்டி இப்டி என்று பேச்சு வந்தால் தாங்க மாட்டார்டா.. பாவம்டா அவரு. அதோட இன்னிக்கு தன் புருஷன் வெளிநாடு போயிட்டான்னு மாறிட்டா. நாளைக்கு நீயும் வெளிநாடு போவ.. நெனப்பு வச்சிக்கோ.
ராஜா: அதை பத்தி எனக்கு கவலை இல்லை. யார் என்ன சொன்னாலும் கட்டுனா அவளை தான் கட்டுவேன். இல்லேன்னா கல்யாணமே வேண்டாம்.
நான்: ரொம்ப சந்தோசம்.. எக்கேடும் கேட்டு போங்க. இனி இது விஷயமா நான் ஏதும் தலையிட மாட்டேன்.. அக்கானு சொல்லிட்டு, தொலைபேசியில் தொல்லை பண்ணாத. good bye.
அதன்பின் அவங்க அம்மா 15 நாள் கழித்து தொலைபேசியில் அழைத்தார்கள். அவனை பற்றி புலம்பினார்கள். இன்னமும் அப்டியே தான் அலையிறானாம் அவள் பின்னாடி.
இங்கு அவளால் அவன் கெட்டானா? அவனால் அவள் கெட்டாளா? ஒன்று மட்டும் நிச்சயம். இவர்களால் அந்த பெண்ணின் புருஷன் வாழ்க்கை போனது. வெளிநாடு செல்லும் சில ஆண்களின் வாழ்க்கை இப்டி கூட கேட்டு போகுதுங்க. பாவம்..
காதல் தப்பு இல்லை. விண்ணைத் தாண்டி வருவாயாவில் த்ரிஷா மாதிரி காதல் இருந்தும், ஏத்துக்கவும் முடியாம, மறுக்கவும் முடியாம இருக்குறது கூட காதல் தான்.. இது காதலா? எனக்கு புரியல.