
3 முறை அறுவை சிகிச்சை செய்து
மகள் படும் துன்பத்தை
காண சகிக்காத
என் தந்தை..
தன்னை தொலைத்து
என்னை உயிர்ப்பித்து
சென்றார்..
அவரின் பாசம்
பிரம்மனை கலைத்ததோ.. என்னவோ..
என் தங்கை வயிற்றில் அன்றே
கருவானது.. உருவானது..
எங்கள் சந்தோஷத்தை
நிலைக்க செய்தது என்
தங்கை(க) மகன் வருகை..
தந்தையை இழந்து சிரித்தவர் உண்டோ..
நாங்கள் சிரித்தோம்..
தந்தையை இழந்து மகிழ்ந்தவர் உண்டோ..
நாங்கள் மகிழ்ந்தோம்..
அதையும் கண்டு பொறுக்காதோர்
"இதுவா உங்க அப்பா ச்சே" என
முகம் சுழித்தனர்..
யாதும் அறியா
என் தங்கையின்
2 வயது முதல் குழந்தையை
"வாடா.. தம்பியை பார்க்கலாம்"
என அழைத்து சென்றோம்..
தன் தம்பியை கண்ட அந்த மழலை
குழந்தையை பார்த்ததும்
மழலை மொழியில் சொன்னது..
"ஐ! தாத்தா.." என்று..
குழந்தையும் தெய்வமும் ஒன்று
என்பது இது தானோ?
எங்கள் தந்தை வந்ததை
உணர்த்த வந்த
எங்கள் சுவாதியும்..
தந்தையாகவே வந்த
எங்கள் தர்ஷனும்..
தெய்வமன்றி வேறென்ன?
நாளை தர்ஷனுக்கு
இரண்டாம் வருட பிறந்த நாள்..
வாழ்த்துகிறோம் எங்கள் செல்வத்தை..
(பி.கு) என் profile-ல இருக்குற புகைப்படத்தில் உள்ளது சுவாதி.. செல்லமா "சின்னக்குட்டி".. இந்த பதிவுல இருக்குற புகைப்படத்தில் உள்ளது தர்ஷன். அப்பான்னு தான் கூப்பிடுவோம்..
26 comments:
Valthukal!!!!!
மெய் சிலிரிக்க வைக்கும் உணர்வுகள். பகிர்வுக்கு நன்றி.
நெகிழ வைக்கும் கவிதைக்கு வாழ்த்துகளும்
தர்ஷனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளும்
வாழ்த்துகளும்
வாழ்த்துக்கள்
தர்ஷன் செல்லத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களும் அன்பும்....
தந்தையின் நினைவுகளில் வ(டி)ந்த கவிதை...
நெகிழ்ச்சியாவும் இருக்கு...
நெகிழ வைத்த உணர்வு பூர்வமான கவிதை...
தந்தை என்று சொல்லி விட்டீர்கள்... எங்கே வாழ்த்துவது...... எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்....
அப்பாவுக்கு (தர்ஷன்) என் பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லிடுங்க திவ்யா
தர்ஷனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்....
இனிய பிறந்தநாள் வாழ்துக்கள்
:) பிறந்தநாள் வாழ்த்துக்கள்... :)
அப்பாவுக்கு வாழ்த்துக்கள்...
தர்ஷனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
நெகிழவைக்கும் கவிதை....
அருமை...
தர்ஷனுக்கு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
தந்தையுமானவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Many More Happy Returns to your father....
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
//குழந்தையும் தெய்வமும் ஒன்று
என்பது இது தானோ?//
அதேதான்.
குழந்தைச் செல்லத்திற்கு வாழ்த்துக்கள்.
gosh! beautiful tht was.. wishing him a very happy b'day!
இரண்டு குழந்தைச் செல்வங்களுக்கும் வாழ்த்துக்கள்.
செல்லகுட்டிக்கு (அப்பாவுக்கும்)என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
Happy B-Day to Darshan....
happy birthday to darshan :).............
அப்பா ஆகுவதை விட
தாத்தா ஆகும்போது
கிடைக்கும் சந்தோசம் மிக அதிகம்
அவர்களே குழந்தைகளாய்
பிறப்பதனால்தான்
அந்த சந்தோசம் மிக மிக அதிகமாகிறது
அப்பாவுக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்திய நெஞ்சங்களுக்கும் வருகைக்கும் நன்றி..
நன்றி பிரதீப்..
நன்றி கிருஷ்ணா..
நன்றி புபட்டியன்..
நன்றி கவிக்கிழவன்..
நன்றி ஜெய்லானி..
நன்றி ப்ரியமுடன் வசந்த்..
நன்றி பிள்ளையாண்டான்..
நன்றி புலவன் புலிகேசி..
நன்றி சங்கவி..
நன்றி உலவு.காம்..
நன்றி சிவாஜி சங்கர்..
நன்றி கண்ணகி..
நன்றி கண்ணா..
நன்றி Maharajan..
நன்றி வால்பையன்..
நன்றி kalees..
நன்றி அப்துல்லா..
நன்றி பாலாசி..
நன்றி matangi mawley..
நன்றி பித்தனின் வாக்கு..
நன்றி பிரியா..
நன்றி குமார்..
நன்றி சரஜ்..
நன்றி சுகந்தன்..
Happy Birthday to Darshan.
Post a Comment