
சாதாரணமாக (ஒரு பெண்ணாக இருந்தும்) எனக்கு நாடகம் பிடிக்காது.. அதிகமாக அழ மட்டுமே வைப்பதால்.. நான் சாப்பிட எப்போதும் இரவு 10 மணிக்கு தான் போவேன்.. என்னுடன் என்னவரும் சாப்பிடும் போது (அவருக்கும் நாடகம் பிடிக்காது என்பதால்) ஜோக்ஸ் சேனல் தான் பார்ப்பது வழக்கம்.. இன்னிக்கு என் நேரம் என்னவருக்கு night shift. என் அத்தை நாடகம் பார்க்கும் போது சாப்பிட போய் விட்டேன்.
சன் டிவியில் 10 மணிக்கு ஒரு நாடகம் பார்க்க நேர்ந்தது.. ஒரு பெண் வெளியில் நின்று பழைய பேப்பர் வாங்கும் நபரிடம் பேசிக் கொண்டு இருக்கிறாள்.. அதை உள்ளிருந்து பார்த்த அவளோட புருஷன் அந்த நபரிடம் "என்ன பேசிகிட்டு இருந்த என் பொண்டாட்டிகிட்டன்னு கேட்டு.. கூடவே உன்னை தப்பா நினைக்கல.. அவ மோசமானவன்னு" சொல்றான்.. கடவுள் புண்ணியத்துல கேபிள் cut .. நான் தெரியாம தான் கேட்குறேன்.. 4 வருஷம், 5 வருஷம்ன்னு சீரியல் எடுக்குறீங்க.. கடைசி 2 நாளுல அந்த கொடுமைக்கார புருஷன் திருந்துற மாதிரிகாட்டுறீங்க..
4 ,5 வருஷம் பார்த்தது மக்கள் மனசுல பதியுமா?
2 நாள் பார்த்தது மக்கள் மனசுல பதியுமா?
நாங்க (நான் இல்லைங்க. என்னை மாதிரி வீட்டுல இருக்குற பெண்கள்.. வேலை கிடைக்காம, வேற பொழுது போக்கு இல்லாம இருக்கும் ஆண்கள்..) உங்ககிட்ட என்ன எதிர்பார்த்து டிவி முன்னாடி உட்காருறோம் தெரியுமா? அவன், அவனுக்கு வீட்ல ஆயிரம் பிரச்சனை அதை மறக்க தான் உட்காருறோம்.. அதை விட பெரிய கொடுமையை பார்க்க நேர்ந்தால் எப்படிங்க? அழுதால் தான் பார்ப்போம்னு நாங்க சொல்லல.. வேற வழி இல்லாம பார்க்கிறோம்.. யாராவது, எந்த குடும்பமாவது சந்தோஷமா இருக்குற மாதிரி காட்டினால் தானே பார்ப்பவர்களின் மனசும் லேசாகும்.. இப்படி கூட வாழலாம்ன்னு தோணும்.
நீங்க அழறத பார்த்து, அழவே இவ்வளோ பேர் இருக்கும் போது நீங்க சிரிச்சா சிரிக்காமலா போய்டுவாங்க.. அதுக்காக மொக்க ஜோக்லாம் போட்டு சாகடிக்க வேண்டாம்.. N .S .K . மாதிரி சிரிப்போட சிந்தனையையும் சேர்த்து கொடுங்க.. ஒரு புருஷன் பொண்டாட்டிய எப்படி வச்சிக்கணும்னு எடுங்க.. ஒரு தந்தை எப்படி இருக்கணும்ன்னு உதாரணம் காட்டுங்க.. ஒரு குழந்தை எப்படி வளரணும்னு காட்டுங்க.. கண்டிப்பா நல்ல ரிசல்ட் கிடைக்கும்..
ஏதோ சொல்லணும்னு தோணுச்சி.. தப்பா ரைட்டான்னு வோட்டுகளிலும் பின்னூட்டத்துலயும் சொல்லுங்க.. ரொம்ப திட்டிடாதிங்க.. ஏனெனில் இதான் நான் எழுதின முதல்.. முதல்.. முதல்.. (பாருங்க எப்படி சொல்றதுன்னு கூட தெரியாம முழிக்கிறேன்).. "சீரியல் பற்றிய கருத்துன்னே" வச்சிக்கலாம்.. நன்றி..
22 comments:
நானும் அந்த நாடகம் முதல்ல பார்த்தேன்..இப்போ நிறுத்திட்டேன்..அழகான நாயகிய நாடகத்துல போட்டுட்டு இப்படி வீணடிக்கிறாங்களேன்னு தான் கஷ்டமா இருக்கு :)
நன்றி நண்பா.. வீணடிக்கப்படுவது நாயகி மட்டும் அல்ல.. நம் நேரமும்..
எவ்வளவோ பயனுள்ளதாக செலவிட வேண்டிய நேரங்கள்.. அடுத்தவர் அழுகையை பார்ப்பதிலேயே போய் விடுகின்றது..
//N .S .K . மாதிரி சிரிப்போட சிந்தனையையும் சேர்த்து கொடுங்க.. ஒரு புருஷன் பொண்டாட்டிய எப்படி வச்சிக்கணும்னு எடுங்க.. ஒரு தந்தை எப்படி இருக்கணும்ன்னு உதாரணம் காட்டுங்க.. ஒரு குழந்தை எப்படி வளரணும்னு காட்டுங்க.. //
அது சரி!!!...TRB rating,sponser இப்பிடி பல மேட்டர் இருக்கு மேடம்.
//**4 ,5 வருஷம் பார்த்தது மக்கள் மனசுல பதியுமா?
2 நாள் பார்த்தது மக்கள் மனசுல பதியுமா?**//
நம்ம ஊர்ல பாதிவிஷயம் இப்படித்தாங்க இருக்கு...
கவிதையோட நிறுத்தாம இப்படி நல்ல விஷயங்களையும் எழுதுங்க....
இப்பல்லாம் வியாபாரம்தான் பாக்குறானுங்க. எவனும் மக்களுக்காக எடுப்பதில்லை.
என்ன தோழி.. கொஞ்ச நாளா பதிவையே காணோம்....இன்னைக்கு பார்த்தா டேஷ்போர்டுல மூணு பதிவு இருக்கு..
கலக்குங்க....
அந்த சீரியல் மேட்டர் என்னன்னு தெரியாததால மீ த எஸ்கேப்பு.....
திவ்யா ஆமாம் பா நேரம் தான் வீணாகுது தினம் செலெக்டடா ஒரு சீரியல் தான் அதுவும் அடுப்பில் வேலை பார்த்து கொண்டே. அதே நிறைய வேலை கெட்டு போகுது. காலையில் இருந்து அம்மணிகள் எப்படி தான் பார்க்கிறார்களோ?
இப்ப சிரிக்க நிறைய ஜோக் போடுகீறார்கள். அத பார்த்தாலாவது வாய் விட்டு சிரித்து ஏதோ மனபாரமெல்லாம் குறையலாம்.
நாலந்து வருஷமா ஒரு சீரியல தொடர்ந்துபோட்டு அதில் நடிக்கிறவர்களும் பெருத்து விடுகிறார்கள் இரண்டு குழந்தய பெற்றும் விடுகிறார்கள். அத உட்கார்ந்து பார்த்து பார்த்து நம்ம அம்மணிகளும் பெருத்து விடுகிறார்கள்
அரங்கப்பெருமாள் said..
"அது சரி!!!...TRB rating,sponser இப்பிடி பல மேட்டர் இருக்கு மேடம்."
நண்பா.. நல்லது சொன்னாலும் TRB rate ஏறும். மக்கள் எவ்வளவு விரும்புறாங்க என்பதை பொருத்து தான இந்த rate, விளம்பரம்லாம்..
இதுக்கே எவ்ளோ திணற வேண்டியது போச்சி. வரிசையா வர மாட்டேங்குது..
இருந்தாலும் முயற்சி பண்றேன். நன்றி ராம்.
மக்கள்கிட்டயும் தப்பு இருக்கு எதை எடுத்தாலும் போய் பார்க்கிறார்கள்..
வர்மாக்கலை கத்துக்க போனேன் நண்பா.. கத்துகிட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்னு இருக்கேன்.
அதான் கொஞ்சம் பிஸி.. இனி free தான்.. அந்த சீரியல நானே அவ்ளோ தான் பார்த்தேன்..
நீங்க சொன்னதுல தப்பே இல்லிங்க
செருப்ப கழட்டி அந்த டைரக்டரையும் இத்தகைய தொடரை ஒளிபரப்பும் டீவியையும்.
ஹா ஹா ஹா.. சரியாக சொன்னீர்கள்..
நன்றி jaleela..
நன்றி வரதராஜலு..
// அதை விட பெரிய கொடுமையை பார்க்க நேர்ந்தால் எப்படிங்க //
டீ வீ சீரியல்களின் வியபார தந்திரமே இதுதாம்மா. அய்யே அந்தப் பெண்ணுக்கு எவ்வளவு கஷ்டம், இதுக்கு நம்ம எவ்வளவே பரவாயில்லை என்று தோணும்படி எடுத்தால் அந்த சீரியல் வெற்றி.
// கடைசி 2 நாளுல அந்த கொடுமைக்கார புருஷன் திருந்துற மாதிரிகாட்டுறீங்க //
இதுவேதான் திரைப்படங்களிலும் கடைசிவரை வில்லன், குடி, பப், அயிட்டம் கேர்ள்ஸ் என இருந்து கடைசியில் இறந்து விடுவான். படம் பார்ப்பவர்கள் வில்லனின் சுகத்தைத்தான் பார்ப்பார்கள், இறுதியில் அவனின் கொடுமையான மரணத்தை மறந்து விடுவார்கள். பசங்க கெட்டுப் போவதும் இதுன்னால்தான்.
நல்ல கட்டுரை. இனிமேல் உங்களை கருத்துக் காஞ்சனா என்று அழைக்கலாம் போல.
நன்றி.
எல்லோரும் வர வேண்டிய கோபம்தான்! உங்களுக்கு சீரியல் மேல வர்ற கோபம் எனக்கு ரியாலிட்டி ஷோன்னு போடுற மொக்க மேல வருது..
அதை பற்றி.. http://kalakalkalai.blogspot.com/2009/12/6.html
நன்றி பித்தன்.. சில சமயம் காண்பிப்பது ஆறுதல்.. எப்பொழுதும் காண்பிப்பது எரிச்சல்.. அதன் எழுதுனேன் நண்பா..
வாங்க கலையரசன். படிச்சிட்டேன் கலையரசன்.. பின்னூட்டமும் இட்டாச்சி..
Good article, but this article have to reach the directors who make that kind of serial. Then it will be more effctive.
இன்னுமா ஜனங்க சீரியல நம்புது? டிவிக்கு குட் பை சொல்லிட்டு பிளாக்குக்கு வாங்க..
ஒ திவ்யா
ஏன் திவ்யா
இப்டி திவ்யா
ஐ திவ்யா சமூக அக்கறைலாம் படுது....
குட் போஸ்ட்...!
நானும் இந்த மாதிரி அழுங்காச்சிலாம் பாக்குறதில்லீங்கோ
thank u sathish.. wish u a happy pongal..
வருகைக்கு நன்றி ரிஷபன்.. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
வாங்க அண்ணா. பாட்டுலாம் வருது.. ம்ம்ம்.. நன்றி.
நன்றி வசந்த்..
நன்றி புலவன் புலிகேசி..
எங்க பகுதியில ஒரு அம்மா, நல்லா கவனிச்சுகிட்டே மகன், மருமகளை இந்த சீரியல் பார்த்ததால சந்தேகம் வந்து ஒரு மாதிரியா பேச ஆரம்பிக்க, அவங்க தனிக்குடித்தனம் போய்ட்டாங்க. இப்படி கூட பிரச்சனை வருது.
vijay tv nadagam konjam better nu sonaanga try pani paarthutu eluthunga
நீங்க கார்டூண் சேனல் எல்லாம் பாக்கமாட்டீங்களா.அய்யோ பாவம்.........
Post a Comment