இதை தவிர வேற யோசிக்கவே தெரியாதான்னு பார்த்தா, தெரியுமேன்னு காட்டுகிற மாதிரி ஒரு சில நல்ல படங்களும் வந்துகிட்டு தான் இருக்கு. இங்க இருக்குற இயக்குனர்கள் எல்லாம் ஒழுங்கா கதையை மட்டும் யோசிச்சி (கதாநாயகர்களை நெனக்காம) கதை எழுதுனா, அது கண்டிப்பா நல்ல படமா தான் இருக்கும்னு நெனக்கிறேன்.
எந்த ரசிகன் இந்த படத்துல வர்ற நாயகி புடவை கட்டிக்க கூடாதுன்னு சொல்றான்னு தெரியல..? இல்லை எவனாவது "அந்த நடிகை அரைகுறையா வந்தாதான் பார்ப்பேன்னு" சொல்றானா? "பில்லா" நயன்தாரா மாதிரியும் "சிங்கம்" அனுஷ்கா (என் இதயம் பாடலில்) மாதிரியும் உடை போடும் அவசியம் என்ன? இப்படி இருந்தா தான் படம் ஓடும்னு சொன்னா. "அங்காடி தெரு" ஏன் ஹிட் ஆச்சி? "காதல்" ஏன் ஹிட் ஆச்சி?
படத்துக்கு தேவை பன்ச் டயலாக்கும், அரைகுறை உடையும் தேவையில்லை நல்ல கதை என்று சொல்லும் படங்கள் தானே இவை? ஒரு நடிகன் கதையை மாற்றி, தனக்கு பஞ்ச டயலக் பேச வசதி பண்ணிக்க முடியுதுன்னா அவனே, அந்த இயக்குனர்கிட்ட பேசி நடிகையை நல்ல விதமா உடை உடுத்த செய்யலாம் இல்லையா?

தமிழ் சினிமா உலகத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகணும்னு பேசுற இவங்களோட படம் கவர்ச்சி இல்லாம இருக்குமா? இல்லையெனில் ஆடை குறைப்பு விஷயத்துல தான் அடுத்த கட்டத்துக்கு போக சொல்றாங்களா? புரியலைங்க.
அரைகுறையாய் பார்த்து, பார்த்து சலிச்சி போச்சி.. புடவை, தாவணி போட்டு நடிக்க சொல்லலைங்க.. போடுற ட்ரெஸ்ஸ கொஞ்சம் ஒழுங்கா போடுங்கன்னு தான் சொல்றேன்.. அதே "சிங்கம்" படத்துல படம் முழுக்க கதாநாயகி "சுடி" தான் போட்டுட்டு வராங்க. அது எவ்ளோ அழகா இருக்கு. pant, t-shirt கூட போடலாம். அசிங்கமா இல்லாம போட்டா சரிதான். அக்கம் பக்கத்து நாட்டுக்காரங்க உலகமே பார்க்கிற மாதிரி படம் எடுக்க முயற்சி செய்றாங்க. நாம இப்போ தான் கொஞ்சம், கொஞ்சமா முயற்சி பண்றோம். ஆயிரத்தில் ஒருவன், இராவணன், மதராச பட்டினம் மாதிரி இன்னும் சில படங்கள்..

இதுல ஒரே ஒரு குறை தான் எவனும், "வாவாவாடாடாடாடா..." ன்னு கத்தல. ஆனால் அந்த படத்த ஒரு முறை பார்ப்பதற்கு பதிலா மதராச பட்டினத்தை பலமுறை பார்க்கலாம். "மதராச பட்டினம்" படத்த பார்த்துட்டு எவனும் சீரியஸா இருக்கான்னு sms வராது. அதுக்கு நான் கேரன்ட்டி. தியேட்டர்க்கு போய் படத்த பாருங்க. இந்த மாதிரி படங்களை நாம ஆதரிச்சா தான் தமிழ் சினிமா உலகம் அடுத்து கட்டத்துக்கு நகரும். தப்பா இருந்தா பின்னூட்டத்துல சொல்லுங்க.
டிஸ்கி: சிங்கத்துக்கும், அசிங்கத்துக்கும் ஒரு எழுத்து தாங்க வித்தியாசம். ஒரு படம், "சிங்கம் ஆவதும் அசிங்கம் ஆவதும்" இயக்குனர்கள், நடிகர்கள் கைல தான் இருக்கு. (கடைசில என்னையும் டயலக் பேச வச்சிட்டீங்களே. என்ன கொடுமை சார் இது?)
37 comments:
திவ்யா சரியாதான் சொல்லி இருக்கிங்க. நான் கூட நேற்றுதான் மதராச பட்டினம் பார்த்தேன், பிடிச்சிருக்கு!
என்ன டயலாகெல்லாம் பேச ஆரம்பிச்சிட்டீங்க:)
நல்ல விமர்சனம்..
விருது வெயிட்டிங்>>>>http://bluehillstree.blogspot.com/2010/05/blog-post_25.html
குட்.. நல்லதொரு விமர்சனம்..!
நன்றி பிரியா.. நானும் நேற்று தன பார்த்தேன்.
நன்றி இர்ஷத்.. விருதுக்கும் நன்றி.
நன்றி உண்மைத் தமிழன்.
ரொம்ப நல்ல இருக்கு டிஸ்கி: அதைவிட சூப்பர்
இதெல்லாம் நடக்கிற கதை மாதிரி தெரியல.பட் உங்க ஆசை நல்லாருக்கு
யார் ரஜினியும் கமலுமா..? அவர்கள் இப்போது தான் மாஸ் ஹீரோக்கள்.. ஆனால் அவர்கள் வளர்ந்ததே அந்த கவர்ச்சியை உபயோகப் படுத்தி தான்.. என்ன தான் நடிப்புத் திறமை இருந்தாலும் இது போன்ற விஷயங்கள் இல்லாமல் அவர்கள் படம் இருந்ததில்லை... ஒன்றிரண்டு தப்பித்திருக்கலாம்..
குழந்தைத் தனமான ஆசை.. அதனால் தான் அதில் அநியாயத்திற்கு நியாயம் இருக்கிறது..
மற்றபடி நல்ல கதையுள்ள படங்களை ரசிகர்கள் ஆதரிக்கும் காலம் வந்து விட்டது.. முன்னெல்லாம் ரசிகர்கள் தனது தலைவன் என்ன நடித்தாலும் கை தட்டுவான். ஆனால் இப்போது வெளிப்படையாக திரை அரங்கிலேயே வைத்து கிழித்து விடுகிறான்.. அந்த அளவுக்கு முன்னேறி விட்டனர்.. அதனால் தான் இப்போது குறைந்த செலவு படங்கள் வர ஆரம்பித்து விட்டன.. அனால் கொஞ்சம் வன்முறை அதிகமானது போல ஒரு உணர்வு. இடையில் நமது பழைய மாஸ் ஹீரோக்கள் வந்து குட்டையைக் குழப்பாமல் இருந்தால் சரியே..
இதுக்கு போய் எவனோ நெகட்டிவ் ஓட்டு குத்தி இருக்கானே????
நல்ல விமர்சனம்.
அப்டி போடு..
ஏனுங் அம்மிணி இம்புட்டு கோவம்?
மதராச பட்டிணம் [அடத்துக்கு எழுதுன விமர்சனம் மாதிரி இருக்கு?
அட ஏங்க நீங்க தமிழ் சினிமாவும் கவர்ச்சியும் பிரிக்க முடியாதது.. நகரங்களை சேர்ந்த A க்ளாஸ் ரசிகர்கள், கிராமங்களை சேர்ந்த B & C க்ளாஸ் ரசிகர்கள் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்தி செய்யவேண்டியிருக்கிறதே...
Che ungalukku padatha rasikkave theriyalai :)
anushka,nayans ellam appadi ippadi "thiramai" kaatturathala than pala mokkai padangal one week aavathu oduthu illaina athuvum therathu.
Kingfisher calanderla nayan amsama pose kudukkuthu, atha onnu kettu vachiruken, kadaikaran tharanu solli irukkam paappom!
நீங்க சொல்றதுதான் சரிதான்...
இப்போ கொஞ்சம் ட்ரென்ட் மாறிகிட்டு வருது. நல்லது.
சில படங்கள் படங்களை ரசிப்பதாலும்... சில படங்கள் நடிகர் நடிகைகளை ரசிப்பதாலும் மட்டுமே வியாபார ரீதியில் வெற்றி பெறுகின்றன. :-)
தியேட்டர்க்கு போய் படத்த பாருங்க.."//
இதுதான் கஷ்டம்.. நல்ல விமர்சனம்.
ரொம்ப ... கோபமும் ஆசையும் படுறீங்க ...
இப்ப நிறைய நல்ல படங்கள் வருது. அதுனால மகிழுங்கள்.
நீங்க சொல்றது வாஸ்தவமான ஒன்று. ஆனா அரைகுறை ஆடைகள் இல்லாம படம் எடுக்க இயக்குனர்கள் ரெடி. ஆனா படத்தை வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் வரமாட்டாங்க. இதுதான் நிதர்சனம். நாற்பது கோடி மக்களை திருப்திபடுத்துறதுக்கு முன்னாடி நாற்பது விநியோகஸ்தர்களை நீங்க திருப்திபடுத்தியாகணும். அவங்களுக்கு கவர்ச்சி இல்லைன்னா நீங்க எவ்ளோதான் க்ளாசா படம் எடுத்தாலும் அது வெளிய வராது. (உதாரணம் : நந்தலாலா). ஒரு படம் ரிலீஸானதான் அது நல்லபடமா இல்லை மோசமான படமான்னு ரசிகர்கள் தீர்மானிக்க முடியும். ஆனா அது ரிலீஸாகுறதை தீர்மானிக்கிறது விநியோகஸ்தர்கள்தான். கட்டாயம் அவங்களை திருப்திப்டுத்தியே ஆகணும். இல்லைன்னா உங்க படம் அவ்ளோ சீக்கிரம் வெளிய வரவே வராது. இதுக்கு சமீபத்திய பலிகடாதான் இயக்குனர் மிஷ்கின்.காரணம் அதுல கவர்ச்சி இல்லை. எந்த விநியோகஸ்தரும் அதை வாங்கலை. களவாணி படத்துக்கு தியேட்டர் கிடைச்சதை விட, துரோகம், அந்தரங்கம் படங்களுக்கு கிடைச்ச தியேட்டர்கள் எண்ணிக்கை அதிகம். அங்காடித்தெரு படம் பத்தி சொல்லி இருந்தீங்க. அந்தப்படம் ஒரு வருஷமா பெட்டிக்குள்ள முடங்கிக்கிடந்த கதை யாருக்கு தெரியும்? யாருமே அந்தப்படத்தை வாங்க முன் வரலை. அந்தப்படத்தை ரிலீஸ் பண்றதுக்குள்ளே தயாரிப்பாளர் எவ்ளோ பாடுபட்டிருப்பார் தெரியுமா? திரும்பவும் அவர் அங்காடித்தெரு மாதிரி ஒரு படம் நிச்சயமா எடுக்க மாட்டார். மொதல்ல இவங்க திருந்தணும்.
திவ்யா சரியாதான் சொல்லி இருக்கிங்க...
நல்ல விமர்சனம்.
வலைப்பூ நான்கையும் ஒன்றாக்கியாச்சுங்க...
http://www.vayalaan.blogspot.com
//திவ்யாஹரி says:
July 21, 2010 12:21 PM
பதிவர்களாகிய எங்களுக்கு உங்களால் தெரிய வந்த இந்த செய்தி போல.. மீதி உள்ள நடுத்தர மக்களுக்கும் புரிய வைக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரு பதிவில் குறிப்பிடுங்கள் நண்பா.. குஷ்பு பேசுறதை எதிர்க்கும் நீதிபதிகள் இதை ஏன் எதிர்க்கவில்லை.. இது பற்றி ஏதும் தெரியாமல் இருக்கிறார்களா? இல்லைதெரியாதவர்கள் போல இருக்கிறார்களா?//
திவ்யா நீங்கள் இது போன்ற விடயங்கள் பற்றி நிறையப் படித்து ஒரு புரிதலுக்கு வந்து பின்னர் அதை உங்கள் சுற்றத்தாரிடம் எடுத்துக் கூறுங்கள். அதற்கு என்ன உதவி வேண்டுமோ நான் செய்கிறேன். போபால் குறித்து நீங்கள் பதிவெழுதினால் நன்றாக இருக்கும். அதற்கான புத்தகங்களையும், விளக்கங்களையும் அடுத்த முறை ஊர் வரும் போது உங்களுக்கு கொடுக்கிறேன். புரிந்து எழுதுங்கள். அடுத்தவர்களுக்கு எடுத்து சொல்லுங்கள்.
///நல்ல பகிர்வு தோழி..நன்றி///
திவ்யா
உங்கள் ஆதங்கம் புரிகிறது.....
அடுத்தவர்கள் படங்களில் நாயகிகள் உடை உடுத்துவதை பற்றி ரஜினியும், கமலும் எடுத்து சொல்ல வேண்டும் என்று நீங்கள் சொல்வது குழந்தை தனமான வாதம் இல்லையோ??
பஞ்ச் டயலாக் பேசி, கழுத்து பகுதியிலிருந்து அருவாள் எடுத்து, காட்டு கத்தல் கத்தி எடுக்கப்படும் படங்களிலெல்லாம் இப்போது ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்கள் நடிப்பதில்லை என்பதே ஒரு பெரிய ஆறுதல் தானே... அவர்கள் நடிக்காமல் போனதாலேயே, அடுத்த வரிசை நடிகர்கள் அது போன்ற படங்களில் நடித்து வருகின்றனர்...
தொடர் தோல்வி தந்தாலும், தன் அடுத்த படத்திற்கு வெறும் சட்டையையும், டைட்டிலையும் மட்டும் மாற்றி நடிக்கும் பல நடிகர்கள் இங்குண்டு...
அது போன்ற படங்களை மக்கள் புறக்கணித்தால் மட்டுமே, நல்ல படங்கள் தொடர்ந்து வெளிவர வழிவகுக்கும்....
நல்லா எழுதியிருக்கீங்க... ஒரு சில இடங்களை தவிர....
நல்லா எழுதியிருக்கீங்க... ஆனால் பலதரப்பட்ட ரசனைகள் நிறைந்த சமூகத்தில குறைந்தபட்ச லாபத்தை எதிர்நோக்கி தரத்தில் காம்பரமைஸ் செய்து வரும் படங்களை பார்க்கவும் ஆட்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்
கமல்ஹாசனும் நடித்து உள்ளார் கவர்ச்சி இல்லமால் உதாரங்கள்- தேவர் மகன், நம்மவர், அன்பே சிவம், உன்னை போல் ஒருவன், Daisy
ரஜினியும்- ராகவேந்திரா, முள்ளும் மலரும், கை கொடுக்கும் kai
kamal's chankayan, unnaal mudium tambi, salangai oli, magaa nadhi
ஆபாசத்திற்க்கு முழுக்காரணம் முதுகெலும்பில்லா இயக்குனர்களே..இடுப்பைக்காட்டி ஆடும் சிம்ரனை பிதாமகனில் முழுக்க மறைத்து ஆடவிட்டார் பாலா.
பாலாஜி சக்திவேல்,
அமீர்,வ்சந்தபாலன்,சற்க்குணம்..இவர்களது படங்களில் ஆபாசம் இல்லாமல் ஜெயித்தவர்கள்..
இவர்களது பாணி திரை உலகம் பின்பற்றினால் உங்கள் கவலை தீரும்
நல்லா எழுதியிருக்கீங்க...தோழி
நல்ல படங்கள் பற்றி அவர்களுக்கு என்ன கவலை.. காசு பார்க்கணும் என்கிற புத்தியில் கலை வியாபாரம்.. அதனால்தான் இன்று தியேட்டர்கள் தொலைந்து திருட்டு டிவிடிகளாய் விட்டது..
apadi patha anaithum thavaru annam pola nalavana ondu theyavai kazhidal nalladu
You told that bull shit
But
Some people wait a lifetime for a moment like this.
Everything changes but beauty remains
Something so tender
You can't explain
Well You may be dreaming but till You awake
Can we make this dream last forever
Nobody says
You wanna know that people will catch this when they fall
So let me suggest you this
Some people wait a lifetime for a moment like this
Some people search forever, oh yeah
So leave it as is for those
Some people wait a lifetime for a moment like this...
take your own decision teach your followers good things left others
simple...
உள்ளேன் மேடம் , நான் ரொம்ப லேட்டோ ???
அனாலும் அந்த சிங்கம் மேட்டர் சூப்பர்
ஏதாவது சொல்லலாமுனு வந்தேன்..
ஆனா...இப்ப பயமாயிருக்கு..
வரட்டுங்களா...
hey
nanthan firstu...கடைசில என்னையும் டயலக் பேச வச்சிட்டீங்களே. என்ன கொடுமை சார் ..super kalakitenga akka..
திவ்யா, எப்படி இருக்கீங்க? கொஞ்ச நாள் வரல்ல.. அதுக்குள்ள நிறைய எழுதி இருக்கீங்க. தொடர்ந்து கலக்குங்க.
சரியாதான் சொல்லி இருக்கிங்க
அதிக வேலைப்பளுவா? ப்ளாக் பக்கம் காணோம், புது போஸ்ட் எழுதுங்க, நன்றி.
LONG TIME NO SEE?
வணக்கம் அருமையான தகவல்களை வெளியிட்டுவரும்
உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் ,வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .நன்றி பகிர்வுக்கு......
how are divya?. hari eppadi irukkar. orange palath thol vathakk kulampu panni koduthiya?.
eppadi irunkinga?. hariyai ketathaka kooravum.
nan cinema parthu rendu varusam aakuthu?.
so no comments.
wish you happy new year to you and your family
Post a Comment