Tuesday, July 20, 2010

ரஜினி, கமல் இதை செய்வார்களா?..

நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடித்தாலே போதும், எந்த நடிகரும் நடிப்பில் கலக்கலாம்.. பன்ச் டயலாக் பேசி, நடித்து, தற்பெருமை பேசிக்கிற படம் தான் இப்போ அதிகமா வருது. ஒன்னு அவனே "நான் நெருப்பு சீண்டாதன்னு" சொல்லிக்கிறான். இல்லேன்னா வில்லன் "அவன் சாணக்கியன்டா, சத்திரியன்டா"ன்னு கத்துறான். இதையும் விட்டா "ஏய்... ஏஏய்ய்... ஏஏஏய்ய்ய்..."ன்னு கத்தியே முழு படத்தையும் ஒட்டிடுரானுங்க.

இதை தவிர வேற யோசிக்கவே தெரியாதான்னு பார்த்தா, தெரியுமேன்னு காட்டுகிற மாதிரி ஒரு சில நல்ல படங்களும் வந்துகிட்டு தான் இருக்கு. இங் இருக்குற இயக்குனர்கள் எல்லாம் ஒழுங்கா கதையை மட்டும் யோசிச்சி (கதாநாயகர்களை நெனக்காம) கதை எழுதுனா, அது கண்டிப்பா நல்ல படமா தான் இருக்கும்னு நெனக்கிறேன்.

எந்த ரசிகன் இந்த படத்துல வர்ற நாயகி புடவை கட்டிக்க கூடாதுன்னு சொல்றான்னு தெரியல..? இல்லை எவனாவது "அந்த நடிகை ரைகுறையா வந்தாதான் பார்ப்பேன்னு" சொல்றானா? "பில்லா" நயன்தாரா மாதிரியும் "சிங்கம்" அனுஷ்கா (என் இதயம் பாடலில்) மாதிரியும் உடை போடும் அவசியம் என்ன? இப்படி இருந்தா தான் படம் ஓடும்னு சொன்னா. "அங்காடி தெரு" ஏன் ஹிட் ஆச்சி? "காதல்" ஏன் ஹிட் ஆச்சி?


படத்துக்கு தேவை பன்ச் டயலாக்கும், அரைகுறை உடையும் தேவையில்லை நல்ல கதை என்று சொல்லும் படங்கள் தானே இவை? ஒரு நடிகன் கதையை மாற்றி, தனக்கு பஞ்ச டயலக் பேச வசதி பண்ணிக்க முடியுதுன்னா அவனே, அந்த இயக்குனர்கிட்ட பேசி நடிகையை நல்ல விதமா உடை உடுத்த செய்யலாம் இல்லையா?ரஜினி, கமல் சொன்னா தமிழ்நாடு
முழுதும் எல்லா ரசிகர்களும் கேட்குறாங்கன்னு பெருமையா சொல்லிக்கிறோம். அவங்க இல்லன்னா சினிமா உலகம் என்ன ஆகும்னு தெரியலன்னு மேடைல எல்லாரும் சொல்றாங்க. இவ்ளோ வாய்ஸ் உள்ளவங்க ன் கூட நடிக்கிற நடிகை உடையை ஒழுங்கா உடுத்தணும்னு ஏன் சொல்ல மாட்றாங்க?

தமிழ் சினிமா
உலகத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகணும்னு பேசுற இவங்களோட படம் கவர்ச்சி இல்லாம இருக்குமா? இல்லையெனில் ஆடை குறைப்பு விஷயத்துல தான் அடுத்த கட்டத்துக்கு போக சொல்றாங்களா? புரியலைங்.

அரைகுறையாய் பார்த்து, பார்த்து சலிச்சி போச்சி.. புடவை, தாவணி போட்டு நடிக்க சொல்லலைங்க.. போடுற ட்ரெஸ்ஸ கொஞ்சம் ஒழுங்கா போடுங்கன்னு தான் சொல்றேன்.. அதே "சிங்கம்" படத்துல படம் முழுக்க கதாநாயகி "சுடி" தான் போட்டுட்டு வராங்க. அது எவ்ளோ அழகா இருக்கு. pant, t-shirt கூட போடலாம். அசிங்கமா இல்லாம போட்டா
சரிதான். அக்கம் பக்கத்து நாட்டுக்காரங்க உலகமே பார்க்கிற மாதிரி படம் எடுக்க முயற்சி செய்றாங்க. நாம இப்போ தான் கொஞ்சம், கொஞ்சமா முயற்சி பண்றோம். ஆயிரத்தில் ஒருவன், இராவணன், மதராச பட்டினம் மாதிரி இன்னும் சில படங்கள்..
மதராச பட்டினம் படம் பார்த்தேன். ரொம்ப நல்ல காதல் கதை. அதை அழகா சொல்லியிருக்கிற இயக்குனருக்கு பாராட்டுக்கள். வெளிப்படுத்திய ஏமி, ஆர்யாவுக்கு பாராட்டுக்கள். பழைய படத்துல எல்லாம் எத்தனை பேர் இருந்தாலும், அவங்க எல்லாருமே கதைக்கு ஏதாவது ஒரு விதத்தில் பயன்படுவார்கள். அதை போன்று இந்த படத்துலயும் எல்லாரையும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இதுல ஒரே ஒரு குறை தான் எவனும், "வாவாவாடாடாடாடா..." ன்னு கத்தல. ஆனால் அந்த படத்த ஒரு முறை பார்
ப்பதற்கு பதிலா மதராச பட்டினத்தை பலமுறை பார்க்கலாம். "மதராச பட்டினம்" படத்த பார்த்துட்டு எவனும் சீரியஸா இருக்கான்னு sms வராது. அதுக்கு நான் கேரன்ட்டி. தியேட்டர்க்கு போய் படத்த பாருங்க. இந்த மாதிரி படங்களை நாம ஆதரிச்சா தான் தமிழ் சினிமா உலகம் அடுத்து கட்டத்துக்கு நகரும். தப்பா இருந்தா பின்னூட்டத்துல சொல்லுங்க.

டிஸ்கி
: சிங்கத்துக்கும், அசிங்கத்துக்கும் ஒரு எழுத்து தாங்க வித்தியாசம். ஒரு படம், "சிங்கம் ஆவதும் அசிங்கம் ஆவதும்" இயக்குனர்ள், நடிகர்ள் கைல தான் இருக்கு. (கடைசில என்னையும் டயலக் பேச வச்சிட்டீங்களே. என்ன கொடுமை சார் இது?)

Thursday, July 8, 2010

ஜெய்லானி விருது..


மறுபடியும் விருது கொடுத்த ஜெய்லானிக்கு நன்றிகள் பல.. கண்டிப்பா அடுத்த விருது வாங்கும் அளவுக்கு இனி முயற்சி செய்வேன். இந்த விருதை என் நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்க விரும்புகிறேன்.. என் இனிய நண்பர்கள் அனைவரும் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.. (ஜெய்லானி.. உங்களை மாதிரி எல்லாருடைய பெயரையும் எழுதி.. லிங்க் கொடுத்து.. டைம் தான் வேஸ்ட்? எப்படி என் ஐடியா?) நீங்களும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..

Tuesday, July 6, 2010

அனைவரும் நலமா?


வணக்கம் நண்பர்களே..

அனைவரும் நலமா? இவ்வளவு நாட்கள் நேரமின்மை காரணமாக பதிவெழுத முடியவில்லை.. இனி (நேரம் கிடைக்கும் பொழுது) தொடர்ந்து எழுதுவேன்.. முன்பு போல உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவிப்பீர்கள் என்று நம்புகிறேன்.. ..


உங்கள்
தோழி.. திவ்யாஹரி..