Tuesday, May 1, 2012

உண்மையாக கஷ்டப்படுபவர்கள் யார்?


ஒரே நேரத்தில் என்னுடைய இரண்டு கைக்கடிகாரமும் காணமல் போய்விட்டது. ஒன்று எங்க அப்பா வாங்கி தந்தது. இன்னொன்று என் கணவர் ஹரி வாங்கி தந்தது. எங்க அப்பா வாங்கி தந்த கைக்கடிகாரம் கிடைத்து விட்டது. ஹரி வாங்கி கொடுத்தது கிடைக்கல. எங்க அப்பா எனக்கு வாங்கி கொடுத்த கைக்கடிகாரம் கிடைத்ததும் நான் என் ஹரிகிட்ட பேசியவை தான் இந்த பதிவு.

நான்: அப்பாடா.. அப்பா வாங்கி கொடுத்த வாட்ச் கிடைச்சிடுச்சி. எங்க அப்பா கஷ்டப்பட்டு உழைச்ச காசு. நல்லவேலை கிடைச்சிடுச்சி..
ஹரி: (கிண்டலாக) அப்ப நான் மட்டும் என்ன கொள்ளை அடிச்சிட்டா வந்தேன்? நானும் ஆபீஸ்க்கு போய் கஷ்டப்பட்டு தான் சம்பாதிக்கிறேன்..
நான்: இருந்தாலும் எங்க அப்பா குழந்தைங்ககிட்ட கத்திக் கத்தி, (ஆசிரியர்) தொண்டைத் தண்ணி வற்ற கஷ்டப்பட்டு சம்பாதிச்சது.
ஹரி: அப்படி பார்த்தா உங்க அப்பா எல்லாரையும் திட்டித் திட்டி சம்பாதிச்சாங்க.. நான் எல்லார்கிட்டயும் திட்டு வாங்கி (TNEB/JE) சம்பாதிக்கிறேன்!!! இப்போ சொல்லு யார் வேலை கஷ்டம்???
நான்: உங்க நிலைமை கொஞ்சம் பாவம்தான்ப்பா..

5 comments:

DHANS said...

rompa kastam thaan, etthanai per saapam ellam vanthu irukkum

Nathanjagk said...

ஜாவா பாடம் விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருந்த கம்ப்யூட்டர் வகுப்பில், ஆசிரியர்.."சீக்கிரம் ப்ரோக்ராம் எழுதிட்டு லேப்புக்கு ஓடுங்க, பவர் எப்போ வேணாலும் போயிடும்.. இந்த ஈபிக்காரன்களை..." என்பதை முடிக்கும் முன்பே, பரிதாபமாக, ''ஸார், ப்ளீஸ்.. அப்பா ஈபிலதான் இருக்கார்'' என்றதும் மொத்த வகுப்பும் சிரித்தது.

அப்பாவுக்கு மின்சாரக் கண்ணா என்ற செல்லப் பெயர் வழங்கியிருந்தேன் அப்போது!

மின்சாரக் கண்ணன்கள் முழிபிதுங்கும் காலமாகிவிட்டிருக்கிறது இப்போது. நல்லவேளை அப்பா இப்போ ரிட்டையர் ஆகிவிட்டார் :))

இருந்தாலும்.. மற்ற இலாக்காகாரர்களையும் மரியாதையுடன் அழைக்கும் பாங்கைத் தந்துவிட்டது எனலாம். Your Minsara Kanna has hit something in me!

Shiva said...

Nanum TNEB JE than. Ungal kanavar enge velai seikirar divya ?

Shiva said...

Nanum TNEB JE than. Ungal kanavar enge velai seikirar divya ?

இராஜராஜேஸ்வரி said...

மற்றொரு வாட்ச்சும் கிடைத்த மிறகு இப்படியே சொல்லுங்கள்..!

Post a Comment