நான்...
எழுமுன் நீ எழுந்து உன்
சின்னச் சின்ன சீண்டல்களில் எனை
எழச் செய்வாய்... - நான்
அடுப்பறை சென்று திணறும் போது
நீ உதவி செய்வாய்... - நான்
உண்ணும் உணவினில் கொஞ்சம்
தரச் சொல்லி கொஞ்சலில் கெஞ்சுவாய்...
பின்...
என் முழு மனமின்றி அலுவலகத்திற்கு
இஷ்டப்பட்டு அனுப்பி கஷ்டத்தில்
என்னையே நொந்து கொள்வேன்..
உன் அழகான கண்ணினால்
எனை அழகாக பருகி உன் பிரிய
மனைவியை பிரிந்து செல்வாய் ...
இங்கு உன் குரல் கேட்க ஆர்வமாய்
நான் இருக்க, என் நினைவாய்...
நீ அங்கு எனக்காக... - உன்
telephone-ஐ ring செய்வாய்..
நான் உன் குரலை ரசித்துக் கொண்டு...
உன் முத்தங்களை ருசித்துக் கொண்டு இருப்பேன்..
உந்தன்...
மாலை வரவிற்காக மதியம் 3.00
மணியிலிருந்து காத்திருக்க தொடங்குவேன்..
எனக்காக 10 முழம் முல்லை வாங்க
கடைக்குச் சென்று களைத்து வருவாய்...
அந்த மலரை சூடி அறையெங்கும்
மணத்தை பரவச்செய்து, உன் மனதினில்
இடம் பிடிப்பேன்...
உயிரே...
வாழ்வினில் காதல் செய்யாமல்,
காதலையே வாழ்வாக தந்த,
நீ கிடைக்க என்ன தவம் செய்தேனோ!!!...
34 comments:
வரம்தான் கிடைச்சிடுச்சுல்ல அப்புறம் என்ன கவலை? கொண்டாடுங்க...
//கலைத்து வருவாய்...//
களைத்து
//உயிரே...
வாழ்வினில் காதல் செய்யாமல்,
காதலையே வாழ்வாக தந்த,
நீ கிடைக்க என்ன தவம் செய்தேனோ!!!... //
ம்....
வரிகளில் காதல் பொங்கி வழிகிறது..
ஹரிக்கு நீங்கதான் முதல்ல ப்ரோபோஸ் செஞ்சிங்களோ....
அண்ணாமலையான் said...
"வரம்தான் கிடைச்சிடுச்சுல்ல அப்புறம் என்ன கவலை? கொண்டாடுங்க..."
கவலையே இல்லை நண்பா.. சந்தோஷமா தான் இருக்கேன்.. தினந்தோறும் தீபாவளி தான்.. பின்னூட்டதிற்கு நன்றி...
பார்க்காமல் publish பண்ணிட்டேன்.. கவனத்திற்கு கொண்டு வந்ததிற்கு நன்றி நண்பா... ஹரி தான் ப்ரப்போஸ் பண்ணங்க கண்ணா.. பின்னூட்டதிற்கு நன்றி நண்பா...
ஒரு அழகான அன்பு தம்பதியரை பார்த்த திருப்தி.நானும்,என் மனைவியும் இப்படிதான்.மிக்க மகிழ்ச்சி;கவிதையும் ரசிக்கும்படி இருந்தது திவ்யா.
சந்தோஷமான சந்தோஷம் உங்க பதிவ(ல), மகிழ்ச்சியான வாழ்க்கைய பாத்து.. நீடூழி வாழ்க...
இன்னும் தமிழ்மணம் மற்றும் தமிழிஷில் இணைக்க வில்லையா.? இணைத்து ஓட்டு பட்டையையும் நிறுவி விடுங்கள். நாங்கள் உங்களுக்கு வாக்களிக்க ஏதுவாகவும், உங்கள் இடுகையை இன்னும் பல பேர் பார்க்கவும் உதவும்
கலக்கல் அக்கா !!
நீங்கள் கிடைக்க ஹரி என்ன செய்தாரோ??? ஹரிக்கு வாழ்த்துக்கள்..
வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி பூங்குன்றன்.. உங்கள் மனைவி எங்க இருக்காங்க..
அண்ணாமலையான் said...
சந்தோஷமான சந்தோஷம் உங்க பதிவ(ல), மகிழ்ச்சியான வாழ்க்கைய பாத்து.. நீடூழி வாழ்க...
மிக்க நன்றி நண்பா...
கண்ணா.. said...
இன்னும் தமிழ்மணம் மற்றும் தமிழிஷில் இணைக்க வில்லையா.? இணைத்து ஓட்டு பட்டையையும் நிறுவி விடுங்கள். நாங்கள் உங்களுக்கு வாக்களிக்க ஏதுவாகவும், உங்கள் இடுகையை இன்னும் பல பேர் பார்க்கவும் உதவும்
நான் இத்தலத்திற்கு புதிது நண்பா.. புலவன் புலிகேசி நண்பரிடம் தான் ஆலோசனை கேட்க வேண்டும்.. தங்கள் உதவினாலும் ஏற்று கொள்கிறேன்..
Bhuvanesh said...
கலக்கல் அக்கா !!
thanks thambi.வருகைக்கும் நன்றி.
புலவன் புலிகேசி said...
நீங்கள் கிடைக்க ஹரி என்ன செய்தாரோ??? ஹரிக்கு வாழ்த்துக்கள்..
அப்படிலாம் இல்லை.. நான் தான் lucky..
ஹரி உங்கள் வாழ்த்திற்கு நன்றி சொல்ல சொன்னார்கள் நண்பா.
பின்னூட்டத்திற்கு நன்றி நண்பா..
அருமை திவ்யா ஹரி
thenammailakshmanan said...
அருமை திவ்யா ஹரி
நன்றி அக்கா..
// எனக்காக 10 முழம் முல்லை வாங்க
கடைக்குச் சென்று களைத்து வருவாய்... //
எல்லாம் சரியான ஆசைகள், ஆனால் பத்து முழம் கொஞ்சம் ஓவர். ஏன் மல்லிகை பிடிக்காத?.
நல்ல கவிதை, இல்லறத்தைச் சொல் அறமாக படைத்துள்ளீர்கள். நன்றி திவ்யாஹரி.
பாவம் ஹரி தினமும் பத்து முழம் என்றால் முழி பிதுங்கி விடுவார்.
கொடுத்து வைத்த மகராசன். ஆனால் இருப்பது உங்கள் அன்புச் சிறையில். ஹா ஹா.
பித்தனின் வாக்கு said...
// எனக்காக 10 முழம் முல்லை வாங்க
கடைக்குச் சென்று களைத்து வருவாய்... //
எல்லாம் சரியான ஆசைகள், ஆனால் பத்து முழம் கொஞ்சம் ஓவர். ஏன் மல்லிகை பிடிக்காத?
முல்லை தான் பிடிக்கும் எனக்கு..
பெண்கள் தலை நிறைய பூ வைத்தால் தான் நண்பரே அழகு..
10 முழம் அதிகம் தான்.. கவிதைக்காக குறைவாக சொல்லாமல் நிறைவாக சொன்னேன்..
அதுமட்டும் இல்லாமல்.. கணவன் 2,3 முழம் வாங்கி கொடுத்தாலும் 10 முழம் என்று சொல்வது பெண்களின் இயல்பு..
நீங்கள் அறிந்திருப்பீர்கள்..
தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே..
பின்னூட்டத்திற்கும் நன்றி..
//உயிரே...
வாழ்வினில் காதல் செய்யாமல்,
காதலையே வாழ்வாக தந்த,
நீ கிடைக்க என்ன தவம் செய்தேனோ!!!...
கவிதை ரெம்ப நல்லாயிருக்கு.
வளர்க உங்கள் காதல்.
(ஆகா.... அம்மணி இப்படி எல்லாம் உங்கள் கணவரை ஐஸ் வைக்காதீங்க . )
kunthavai said...
(ஆகா.... அம்மணி இப்படி எல்லாம் உங்கள் கணவரை ஐஸ் வைக்காதீங்க.)
பின்னூட்டதிற்கு நன்றி தோழி.
நீங்கள் சொல்வது சரி தான்.. நான் வச்ச ஐஸ்ல என் கணவருக்கு ஜுரம் வந்து விட்டது.. இனி கொஞ்சம் குறைச்சிக்கனும்.
ஒட்டு போட்டவர்கள் அனைவருக்கும் நன்றி..
கலக்கல் கவிதை
//காதலையே வாழ்வாக தந்த,
நீ கிடைக்க என்ன தவம் செய்தேனோ!!!...//
தவமின்றி கிடைத்த வரமது.நல்லக் கவிதைதான். சிறு வேண்டுகோள் ஆங்கில தவிர்க்கப் பாருங்கள்.
காதலை கைப்பிடித்தவர்களுக்கு முழம் பத்தல்ல நூறு கூட சந்தோஷம்தான்.. சரிதானே?
வாழ்வினில் காதல் செய்யாமல்,
காதலையே வாழ்வாக தந்த,
நீ கிடைக்க என்ன தவம் செய்தேனோ!!!.
very nice line ma
ungal kavithai mihavum alagaha irukirathu. wish you u gud luck
நன்றி சின்ன அம்மிணி.
அரங்கப்பெருமாள் said...
தவமின்றி கிடைத்த வரமது.சிறு வேண்டுகோள் ஆங்கில தவிர்க்கப் பாருங்கள்.
உண்மை தான் நண்பா.. மன்னிக்கவும். இனி தமிழிலேயே எழுதுகிறேன் நண்பா..தொடர்ந்து பின்னூட்டமிடுங்கள். நன்றி.
அண்ணாமலையான் said...
காதலை கைப்பிடித்தவர்களுக்கு முழம் பத்தல்ல நூறு கூட சந்தோஷம்தான்.. சரிதானே?
உண்மை நண்பா.. உங்கள் பின்னூட்டங்கள் என்னை ஊக்குவிக்கின்றன.. நன்றி நண்பா..
umamaheswari said...
ungal kavithai mihavum alagaha irukirathu. wish you u gud luck
நன்றி தோழி.. தொடர்ந்து பின்னூட்டமிடுங்கள்..
// பெண்கள் தலை நிறைய பூ வைத்தால் தான் நண்பரே அழகு.. //
உண்மைதான். அதுகூட காதோரம் சரிந்த முடியும் தொங்கும் ஜிமிக்கியும் கொள்ளை அழகு. ஆனால் இப்போது பார்ப்பது அரிது.
ஆமாம் அதுவும் சரி தான்.. நாகரிகம் என்ற பெயரில் மற்றவர்கள் மாறிவிட்டார்கள்..
Post a Comment