Monday, December 28, 2009

காதல் என்பது..


தோழியே..
காதலை அறிவது எளிதல்ல..

உன் - அவன் கண்கள் மோதிக்கொள்ள
ஆவல் பிறக்கும்..

உன் - அவன் கைகள் மோதிக்கொள்ள
காமம் பிறக்கும்..

உன் அவன் சுவாசம் மோதிக்கொள்ள
சொர்க்கம் பிறக்கும்..

இதுவெல்லாம் விளையாமல் இருந்தால்தான்
(உண்மைக்) காதல் பிறக்கும்.

20 comments:

அண்ணாமலையான் said...

எல்லம் சரி... அப்படி காதல் பிறந்து என்ன செய்வாங்களாம்..?

திவ்யாஹரி said...

உங்களுக்கு பதில் சொல்ற அளவுக்கு நான் படிக்கலங்க.. ஹி ஹி ஹி விட்டுடுங்க.. நான் பாவம்..

அண்ணாமலையான் said...

சரி.. சரி.... போனாப்போது...

திவ்யாஹரி said...

மிக்க நன்றி அண்ணா..

Paleo God said...

பிரிவுகளிலும் காதல்
பிறக்கும் நினைவுக்குழந்தையாய்
உங்களில் வளரும்.. அன்புச்சோறூட்டி
அதனை வளர்ப்பீர் நட்புப் பெயர்
சூட்டி அனாதை ஆக்கும் வரை...

-------------------------------------
உங்க கவிதையை பார்த்த உடனே எனக்கு தோன்றியது ::) எனது பக்கத்தில் வெளியிடுவதை விட இது உங்களுக்குத்தான் சொந்தம்.. இதற்கு உங்கள் கவிதையே தாய். சிறப்பாய் எழுதி வளர வாழ்த்துக்கள்.

Ps:பின்னூட்டத்திற்கு வந்து கவிதையாய் வெளியிட்டது தவறெனில் மன்னிக்க..:))

திவ்யாஹரி said...

என்ன நண்பா இப்படி சொல்லிட்டிங்க.. நீங்க எல்லாம் பின்னூட்டமிடுவதே பெரிது எனக்கு.. மன்னிப்பு எல்லாம் கேட்குறிங்க.. உங்க கவிதை மிகவும் அருமை.. நன்றி நண்பா.. தொடர்ந்து பின்னூட்டம் இடுங்கள்..

Thenammai Lakshmanan said...

நல்ல கவிதை திவ்யா ஹரி

புத்தாண்டு வாழ்த்துக்கள்

புலவன் புலிகேசி said...

//இதுவெல்லாம் விளையாமல் இருந்தால்தான்
(உண்மைக்) காதல் பிறக்கும்//

ம் உண்மைதான். நல்ல கவிதை. வாழ்த்துக்கள் திவ்யா

Priya said...

ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க‌!

அரங்கப்பெருமாள் said...

தெ(பு)ரியாத இடம்.மாட்டிக்கிட்டு தொலஞ்சு போயிடுவோம் அப்பிடின்னு ஒரு பயம். அதனாலதான் சொல்லுறேன்(நம்புறேன்), உண்மையைச் சொல்லுறீங்க.

பித்தனின் வாக்கு said...

ஆகா ஏன் நிறுத்திட்டிங்க.
உடல்கள் மோத சந்ததி பிறக்கும்,அப்புறம்
மண்டைகள் மோத சண்டை பிறக்கும்,
இவர்கள் அப்பாகள் மோத சாதிக்கலவரம் பிறக்கும்.
சாதிகள் மோத சாவுகள் பிறக்கும்
சாவுக்குப் பின்னர் சாந்தி பிறக்கும்
என்று எழுதி முடிக்கலாம்.
இம்ம் சும்மா ஒரு காலக்கலுக்குத்தான்.... உண்மையில் உங்கள் சிந்தனை அருமை. நன்றி.

க‌ரிச‌ல்கார‌ன் said...

ந‌ல்லா எழுத‌றிங்க‌.கொஞ்ச‌ம் பெரிய க‌விதை முய‌ற்சி ப‌ண்ணுங்க‌

திவ்யாஹரி said...

thenammailakshmanan said...

நல்ல கவிதை திவ்யா ஹரி
புத்தாண்டு வாழ்த்துக்கள்

நன்றி தோழி உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

திவ்யாஹரி said...

மிக்க நன்றி புலவரே..

திவ்யாஹரி said...

மிக்க நன்றி பிரியா..

திவ்யாஹரி said...

அரங்கப்பெருமாள் said...

தெ(பு)ரியாத இடம்.மாட்டிக்கிட்டு தொலஞ்சு போயிடுவோம் அப்பிடின்னு ஒரு பயம். அதனாலதான் சொல்லுறேன்(நம்புறேன்), உண்மையைச் சொல்லுறீங்க.

நன்றி நண்பா..

திவ்யாஹரி said...

பித்தனின் வாக்கு said...

ஆகா ஏன் நிறுத்திட்டிங்க.

படிக்கிறவங்க நெனச்சி விட்டுட்டேன் நண்பா..

திவ்யாஹரி said...

க‌ரிச‌ல்கார‌ன் said...

ந‌ல்லா எழுத‌றிங்க‌.கொஞ்ச‌ம் பெரிய க‌விதை முய‌ற்சி ப‌ண்ணுங்க‌

புலம்பல்கள் அளவு இருந்தா போதுமா நண்பா.. சரக்கு அவ்ளோ தான் இருக்கு.. ஹி ஹி.

மிக்க நன்றி நண்பா.

Anonymous said...

//இதுவெல்லாம் விளையாமல் இருந்தால்தான்
(உண்மைக்) காதல் பிறக்கும்//
மெய்யாலுமே புரியலபா....
என்ன மாதிரி பால் டப்பாக்கு
ஒரு வெளக்க உரை குடுங்களேன்....

திவ்யாஹரி said...

அண்ணாமலையான் அண்ணனுக்கு அளித்த பதில் தான் உங்களுக்கும்..

"உங்களுக்கு பதில் சொல்ற அளவுக்கு நான் படிக்கலங்க.. ஹி ஹி ஹி விட்டுடுங்க.. நான் பாவம்.." நன்றி நண்பா..

Post a Comment