Tuesday, December 29, 2009

அறிவாயா கண்மணியே..


மணமாகி.. 4 மாதங்கள்
ஆனதும் ஒரு நாள்..
மயக்கமானேன்..

வயிற்றை படம் பிடித்தும்..
தகுந்த பரிசோதனை செய்தும்
அறிவித்தார்கள் தாயாக
போகிறாய் என்று..

சந்தோஷத்தை உன்
தந்தையிடம் சொல்லாமல்
இனிப்பு வாங்கி வரச் சொன்னேன்..
உன் வரவை இனிப்போடு சொல்ல..

அதற்குள் வந்த மருத்துவர்
எனக்கு கருக்குழாய் கர்ப்பமென
அறுவைக்கு ஏற்பாடு செய்தார்..

வாங்கி வந்த இனிப்போடு..
"எதற்கும் நிர்வாகம்
பொறுப்பல்ல" எனவெழுதி
கையெழுத்திட்டார் உன் தந்தை..

சில மணிநேரத்தில்
உன்னை கொன்று..
என்னை உயிர்ப்பித்தார்கள்..

நீ கருவறை வராமல்
கருக்குழாயில் நின்று
தற்கொலை செய்தாயோ?

இல்லை, என் தந்தை
என் வலி காணப்
பொறுக்காமல் இறந்தாரே.. அவரை
கொல்ல வந்தாயோ ?

பாட்டி ஆகப்போகும் ஆசையில்
இருந்த என் அன்னை இன்று
ஆறுதல் சொல்ல ஆளில்லாமல்..

உன் வரவின் நோக்கம் எதுவாகினும்
நீ கலைந்தது என்னவோ ஒருமுறை தான்..
உன்னால் நான் கவலையுற்றது
பலமுறை என்பதை
நீ அறிவாயா -என் கண்மணியே..


(பி.கு) இது கவிதையில்லை.. என் புலம்பல்.. அவ்வளவே..
மனதின் பாரம் குறைக்க இதில் பதிவு செய்தேன்..

22 comments:

Paleo God said...

எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அருள் புரிவான். கவலை படாதீர்கள் சகோதரி. அடுத்த முறை கவனமாய் இருங்கள் தகுந்த மருத்துவ கவனிப்புகளுடன்.

கண்ணா.. said...

அன்பு சகோதரி,

என்ன சொல்ல என்று ஒன்றும் புரியவில்லை....


வலி புரிகிறது...


இறைவனை பிரார்த்திக்கிறேன்...

Priya said...
This comment has been removed by a blog administrator.
சிநேகிதன் அக்பர் said...

உங்கள் வேதனையில் நானும் பங்கெடுக்கிறேன்.

இறைவன் உங்களுக்கு மன ஆறுதலையும், மகிழ்ச்சியையும் கொடுப்பானாக.

அரங்கப்பெருமாள் said...

//என் புலம்பல்.. அவ்வளவே..
மனதின் பாரம் குறைக்க//
We have faced similar situation and are able to understand your feelings. But we can say this.
1. DON'T WORRY.
2. BE HAPPY.
3. ALWAYS CONSULT DOCTOR.
4. (S)HE** IS IMPORTANT.
5. YOU WILL BE BLESSED VERY SOON , I am Sure.

**SHE - Divya , HE - Hari ( hope, i am right)

புலவன் புலிகேசி said...

என்ன சொல்ல...வருத்தம் வேண்டாம்...அவ்வளவே

என் நடை பாதையில்(ராம்) said...

வார்த்தைகள் இல்லை.... வயதும் இல்லை... மன்னிக்கவும்.

Anonymous said...

from the fourth para it was possible to guess that this could hardly be a product of fiction.

the loss of your father cannot be compensated
but thank god for you are alive and
you have got a wonderful husband. quite soon you would be blessed with a cute baby that wipes away all sorrows as passing clouds.

கமலேஷ் said...

நடப்பது எல்லாம் நல்லதுக்கே ....மனசு கஷ்டபடாம இருங்க...இந்த புது வருசத்துல உங்களுக்கு எல்லாமே நல்லதுதான் நடக்கும்....

ஸ்ரீராம். said...

இயற்கையின் சதி. நல்லவை நடக்க ஆண்டவனை வேண்டுகிறேன்...

திவ்யாஹரி said...

சந்தோஷத்தில் பங்கு எடுத்துகொள்ளுங்கள் நண்பர்களே..
வேதனைக்கு உங்கள் ஆறுதலான வார்த்தைகளே போதும்..

நன்றி பலாப்பட்டறை சகோதரா..
நன்றி கண்ணா..
நன்றி பிரியா..
நன்றி அக்பர்..
நன்றி அரங்கப்பெருமாள்..
நன்றி புலிகேசி..
நன்றி ராம்..
நன்றி வார்த்தை..
நன்றி கமலேஷ்..
நன்றி ஸ்ரீராம்..
நன்றி வசந்த்..

சிவாஜி சங்கர் said...

உம் புலம்பலுக்கு இறை செவிசாய்க்கும் என ஆறுதல் வார்த்தை மட்டுமே எம்மிடம் தோழி

திவ்யாஹரி said...

நன்றி நண்பா..

ரிஷபன் said...

என்ன சொல்வதென்று புரியவில்லை.. மனசு தேம்புகிறது..

க.பாலாசி said...

வருத்தமான விசயம்தான். நமக்கு பின்னே உள்ளவர் கோடி, நினைத்துப்பார்த்து நிம்மதி நாடுன்னு யாரோ பாடி வச்சிருக்காங்க. அதுமாதிரி உங்களைவிட மிக வருந்ததக்க மனவலிகளை உடையோரை எனது அலுவலகத்திலேயே சந்திக்கிறேன். நடந்தது நன்மைகென்று நினைத்து மனதை ஆறுதல்படுத்துவோம்.

Anonymous said...

திவ்யா, ஒரு நிமிஷம் என்ன சொல்வதென்றே புரியவில்லை.
நானும் அந்த பாதையை கடந்து வந்திருப்பதால் எனக்கு உங்கள் வேதனை புரிகிறது.
இருந்தாலும் கவலைபடாதிர்கள்.
தைரியமாக இருங்கள். மனதை சந்தோஷமாக வைத்துகொள்ளுங்கள். இந்த புது வருடத்தில் எல்லாம் நல்லதாகவே நடக்கும்.

திவ்யாஹரி said...

நன்றி ரிஷபன்
நன்றி பாலாசி
நன்றி தோழி..

வலிகளை விளக்கி சொல்ல எனக்கு தெரியவில்லை.. கவிதையாக சொல்ல இதுவே போதும் என்று குறைத்தே சொல்லி இருக்கிறேன்.. விளக்கமாக எழுத தெரியாததும் ஒரு காரணம்.. அறுவை சிகிச்சை நடந்ததே 3 முறை.. அதில் ஒருமுறை மயக்க மறந்து கொடுக்காமலே செய்தார்கள்.. பணம் தின்னும் மருத்துவர்கள் உள்ளவரை.. எங்களின் மனம் ஆறாது..

saravan said...

வருத்தமாக இருக்கிறது தோழி....
வேறு வார்த்தைகள் இல்லை.

திவ்யாஹரி said...

vanga saravan.

goma said...

காலன் தந்த கவலையை அந்தக் காலம்தான் போக்க முடியும்.
விரைவில் உங்கள் குறை தீர்க்க, மழலை ஒன்று வர வாழ்த்துகிறேன்

Anonymous said...

நீங்கள் வருந்த வேண்டாம் திவ்யா..

கடவுளுக்கு நினைப்பு
உங்களுக்கு ஒரு ஆண் குழந்தையும்
உங்கள் கணவருக்கு ஒரு பெண் குழந்தையை கொடுத்துவிட்டார் என ..
அதனால் தான் தாமதம்
நல்லதே நடக்கும் .....

Suresh S R said...

எங்களுக்கும் இதே அனுபவம் கிடைத்தது. ரொம்ப கொடுமை.........

Post a Comment