Tuesday, January 19, 2010

ஆண்கள் என்றாலே இப்படித்தானோ?


திருமணம் ஆனதும் ஆண்கள் எல்லாம் இப்படி தான் மாறி விடுவார்களோ என்று நொந்து போனாள். வாழ்க்கையே முடிந்து போனது போல இருந்தது அவளுக்கு.. திருமணமாகி 5 நாட்கள் தான் ஆகிறது.. அதற்குள்ளேயே..

3 வருடமாக காதலித்த தர்ஷனுக்கும் கீதாவுக்கும் திருமணம் இனிதே நடந்தது. கூடவே வீடு குடி புகுதலும்.. விசேஷங்கள் முடிந்தாலும், வீட்டில் சில வேலைகள் நடந்து கொண்டு இருந்தது.. வேலை ஆட்கள் ஜென்னல் கதவுக்கு தாழ்ப்பாள் வைத்துக் கொண்டு இருந்தார்கள். கீதாவின் ரூமிலும் வேலை நடந்தது. ஆனால் ரூமினுள் வராமல் ஜென்னல் திறந்து வைத்துக் கொண்டு, வெளியில் இருந்து வேலை செய்தார்கள்.

திருமணம் முடிந்து, அன்று தான் தர்ஷன் அலுவலகம் செல்லும் நாள். அருகில் கீதாவை அழைத்து அலுவலகம் செல்வதை சொல்லிவிட்டு ரூம் கதவை மூட வேண்டாம் என சொல்லி விட்டு சென்றான் தர்ஷன். கீதாவுக்கு புரியவில்லை என்றாலும், சரி என்று சொல்லி மூடி விட்டாள்.

சிறிது நேரத்தில்.. ஜென்னலில் ஆட்கள் வேலை செய்வதால் தான் மூட வேண்டாமென சொல்கிறாரோ என்றும், அவ்வளவு நம்பிக்கை இல்லாமலா இருக்கிறார் என்றும், அவளுக்கு நினைப்பு தோன்றியது? உடன் கண்கள் கலங்கின. திருமணம் ஆனதும் ஆண்கள் எல்லாம் இப்படி தான் மாறி விடுவார்களோ என்று நொந்து போனாள். வாழ்க்கையே முடிந்து போனது போல இருந்தது அவளுக்கு..

உடனே அழுகையை கட்டுப்படுத்தியவள் அவனை இது தான் காதலா என்று 4 கேள்வி கேட்க நினைத்து.. அவனுடைய செல்லுக்கு அழைத்தாள்.. இயல்பாக பேசிய அவனிடம், கோபமாக.. "ஏன் அப்படி சொல்லிட்டு போனீங்கன்னு" கேட்டாள். சலனமின்றி அவன் சொன்னான்.. "வீட்டினுள் இருக்கும் மற்றவர்கள் உன்னை தப்பாக நினைத்து விட கூடாதென்று சொன்னேன்."

அவள் தன் தவறை உணர்ந்து, மன்னிப்புக் கேட்டதைக் கூட சொல்லவும் வேண்டுமா?


(பி.கு) கதை இல்லை.. கதை மாதிரி..(இது என் முதல் முயற்சி.. அதனால ரொம்ப திட்டிடாதிங்க..)

21 comments:

சரண் said...

நன்று

வெற்றி said...

கதை சாரி கதை மாதிரி நல்லா இருக்குங்க..

தலைப்பு பெண்கள் என்றாலே இப்படித்தானோ ன்னு இருக்கனுமுங்க :))

திவ்யாஹரி said...

நன்றி சரண்..

நன்றி வெற்றி..
ஏன் இந்த name வச்சேன்னு சொல்லுங்க பார்க்கலாம்?

சினிமா புலவன் said...

திட்ட ஒன்னும் இல்லீங்க..நல்லா இருக்கு.

ரிஷபன் said...

மனைவி மேல இருந்த கரிசனத்தின் வெளிப்பாடு..

திவ்யாஹரி said...

நன்றி சினிமா புலவன்..
நன்றி ரிஷபன்..

ஸ்ரீராம். said...

பொண்ணுங்களே அவசரக் குடுக்கைப்பா...புதுசுதானே புரிஞ்சிப்பாங்க...

வெற்றி said...

//ஏன் இந்த name வச்சேன்னு சொல்லுங்க பார்க்கலாம்?//

நான் இப்படி கேக்கனும்னு தான?:)))

திவ்யாஹரி said...

நன்றி ஸ்ரீராம்..
பெண்களை திட்டாதிங்க.. அங்கே போகாத, இங்கே போகாதன்னு பெண்கள் ஆண்களை பார்த்து சொன்னா ஆண்கள் கூட சந்தேகமா என்று தான் கேட்பார்கள்.. இது இயல்பு.. பெண்களே நான் சொல்வது சரிதானே?

திவ்யாஹரி said...

நோ.. நோ.. ஆண்கள் எல்லாம், நான் ஏதோ அவங்கள திட்டுறதா நெனச்சி பார்ப்பார்கள் அல்லவா? .. அதான்.. ஒரு பப்லிசிட்டிக்காக தான்.. ஹி ஹி ஹி..

அண்ணாமலையான் said...

அடா அடா அடா உச்சி மண்டையில அறிவு என்ன பிரகாசமா எரியுது?

திவ்யாஹரி said...

அடா அடா அடா உச்சி மண்டையில அறிவு என்ன பிரகாசமா எரியுது?

வேட்டைக்காரன்ல நீங்க தான் பாட்டு எழுதுனீங்களா அண்ணா? உங்க பின்னூட்டத்த பார்த்தா அப்படி தான் தெரியுது.. நன்றி அண்ணா..

S Maharajan said...

Nallairuku valthukal

க.பாலாசி said...

முதல் முயற்சியே நன்றாக இருக்கிறது...தொடருங்கள்...

கமலேஷ் said...

ஆரம்ப முயற்சியாக இருந்தாலும்...சொல்லும் விதத்தில் மிகவும் தெளிவு தெரிகிறது தோழி...உங்களுடய மற்ற கவிதைகளையும் படித்தேன்...மிக நன்றாக எழுதி உள்ளீர்கள்....இந்த கதைக்கான முயற்சியும் வெற்றிதான் தொடருங்கள்....தொடர்ந்து எழுத எழத இன்னும் பக்குவப் படும்...உங்களின் பயணத்திற்கு வாழ்த்துக்கள்...

திவ்யாஹரி said...

நன்றி மகாராஜன்
நன்றி பாலாசி
நன்றி கமலேஷ்

உங்களின் பின்னூட்டங்கள் எனக்கு ஊக்கமளிக்கிறது.. அனைவருக்கும் மிக்க நன்றி.. எனக்கு வோட்டு முக்கியமில்லை. பின்னூட்டம் தான் வேண்டும்.. தொடர்ந்து பின்னூட்டம் இடுங்கள்.. அது தான் என்னை எழுத தூண்டுகிறது.. எனக்கு அதுவே போதும் நண்பர்களே.. நன்றிகள் பல..

Jaleela said...

நல்லதொரு பகிர்வு, சிறு கதைபோல் கொண்டு விஷியத்தை எடுத்து சொல்லி இருக்கீங்க திவ்யா.

ஜெஸ்வந்தி said...

நன்றாக வந்திருக்கிறது. முதல் முயற்சி என்பதால் பாராட்டப் படவேண்டியது. தொடருங்கள்.

திவ்யாஹரி said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்..
நன்றி jaleela..
நன்றி ஜெஸ்வந்தி..

kunthavai said...

ஆகா இப்படி எல்லாம் பயப்படக்கூடாது. நாங்கெல்லாம் எப்படி தைரியாமா எழுதுறோம்(ஹி...ஹி ...) .

திவ்யாஹரி said...

உங்களை மாதிரி எல்லாம் எழுத வராது அக்கா.. நன்றி அக்கா..

Post a Comment