Wednesday, January 27, 2010

சின்ன வலையுலக வாக்கெடுப்பு... ஹி..ஹி..


நேத்து குடியரசு தினம் என்று எல்லாருக்கும் தெரியும்.. எல்லாரும் வாழ்த்துக் கூட சொல்லி மகிழ்ச்சியை பரிமாறிக்கிட்டோம்.. சின்ன வயசுல சட்டையில் தேசியக்கொடி குத்தி, இனிப்பு சாப்பிட்டு கொண்டாடுனது எல்லாம் எனக்கு நெனப்பு வந்துச்சி. நேத்தும் வீட்ல தான் இருந்தேன்.. (வெட்டி officer தானே).

போட்டிருந்த night suit மேலே கொடி குத்தி இருந்தேன்.. வாசலுக்கு அத்தை கூப்பிட்டாங்கன்னு போனபோது, பக்கத்து வீட்டு அக்கா, "என்ன சின்ன புள்ள மாதிரி இன்னும் கொடி குத்திக்கிட்டு இருக்க?" என்று கேட்டார்கள்.. நான் உடனே "எந்த வயசா இருந்தா என்ன அக்கா? இன்னிக்கு கொடி குத்திக்கிறது நாம, நம்ம தேசியக்கொடிக்கு மரியாதை செய்யிறதா அர்த்தம். மத்த நாளுல குத்திகிட்டா தான் யாராவது ஏதாவது கேட்பாங்க. இன்னிக்கு குத்திகிட்டா தப்பு இல்ல. ஒவ்வொரு இந்தியரும் குடியரசு தினத்தை கொண்டாடுவாங்க. நீங்க இந்தியன் தானே குத்திக்கோங்கன்னு ஒரு கொடிய குத்தி விட்டு அனுப்புனேன்.

அப்போ தான் ஒரு சந்தேகம் வந்துச்சி..

எத்தனை பேரு நேத்து தேசியக்கொடிய நெஞ்சில சுமந்துகிட்டு கொண்டாடுனாங்கனு தெரிஞ்சிக்க ஆசைப்படுறேன்?

நேத்து தேசியக்கொடி நெஞ்சில குத்திகிட்டவங்க மட்டும் எனக்கு ஓட்டு போட்டா போதும். (இந்த பதிப்புக்கு மட்டும் தான் இந்த கண்டிஷன்).


உங்க ஓட்டை வச்சி எத்தன பேரு நெஞ்சில சுமந்துகிட்டு கொண்டாடுனீங்கன்னு நான் தெரிஞ்சிக்கிறேன்.. நன்றிங்க.

17 comments:

வெற்றி said...

நான் கொடி குத்தவில்லை..ஆனால் எப்பொழுதும் பர்சில் கொடி வைத்திருப்பேன்..நான் வோட்டு போடலாமா?

jailani said...

வோட்டு வேண்டாமுன்னு கேட்டு வாங்க்கூடிய ஒரே ஆள் நீங்கதாங்க. நல்லவேளை பிண்னூட்டம் வேண்டாமுன்னு சொல்லலியே....

அண்ணாமலையான் said...

”தேசியக்கொடி நெஞ்சில குத்திகிட்டவங்க மட்டும்” யாருமே இருக்க மாட்டாங்க, சட்டைல குத்திக்கிட்டவங்க வேனா இருக்கலாம்.. (உங்களுக்கு இருக்கற தேசிய உணர்வுக்கு, இந்தியா பார்டர்ல ஒரு வேலை காலி இருக்காம் போறீங்களா?)

Murugavel said...
This comment has been removed by the author.
புலவன் புலிகேசி said...

எங்க மனசுல இந்திய உணர்வு முழுமையா இருக்கு. கொடி குத்தி காட்டனும்னு இல்ல. இன்னும் இந்தியா குடியரசாகலங்க. குடியரசுன்னா "மக்களே மக்களால் மக்களுக்காக ஆட்சி செய்வது" இங்க மத்திய முதல் மாநிலம் வரை "குடும்பமே குடும்பத்தால் குடும்பத்திற்காக ஆட்சி" செய்யும் போது இது எப்படி குடியரசாகும்?

நட்புடன் ஜமால் said...

இந்தியாவில் இல்லீங்கோ - கொடியாக இல்லைன்னாலும் மனதில் இந்தியன் என்ற சந்தோஷம் என்றும் இருக்கும்.

என் நடை பாதையில்(ராம்) said...

நான் கொடி குத்தவில்லை... இப்போது தான் மனதில் குத்துகிறது...

பித்தனின் வாக்கு said...

இந்த தேசியக் கொடி குத்தறது மாதிரி எல்லாம் எனக்கு தெரியாது. முட்டாய் கொடுத்தீங்கனா வாங்கி வாயில் போட்டுட்டு சமர்த்தா போய்விடுவேம். மத்தபடி வந்ததே மோதிரம் சொல்ற ஆள் நான் இல்லைங்க. மனதில் பாரதத்தையும், எண்ணங்களில் தேசியத்தையும் சுமர்ந்து பேசி ஆனால் அதுக்கு ஒன்னும் செய்ய இயலாத சராசரி நடுத்தர வர்க்கத்தில் நானும் ஒருவன்.
லீவு வுட்டாங்களா நல்லா வயிறு முட்ட சாப்பிட்டு தூங்கனமா இல்லாம எதுக்கு நமக்கு தேவை இல்லாத வேலை எல்லாம்.
நன்றி திவ்யா ஹரி. ஒவ்வெரு ஆண்டு குடியரசு தின இரானுவ அணிவகுப்பை கண்டிப்பாக உக்காந்து பார்ப்பேன், இந்த முறை சிங்கையில் இருப்பதால் பார்க்க முடியவில்லை என்ற வருத்தம் உள்ளது.

பித்தனின் வாக்கு said...

புலவன் புலிகேசி அவர்களே இந்தியா குடியரசு இல்லையா? நான் குடியரசுக்காக ஒரு பதிவு போட்டுள்ளேன். படியுங்கள் புரியும்.

Sivaji Sankar said...

//என் நடை பாதையில்(ராம்) said...

நான் கொடி குத்தவில்லை... இப்போது தான் மனதில் குத்துகிறது...// same குத்தல்

செ.சரவணக்குமார் said...

உங்களைப் போலவே தான் நானும் சுதந்திர தினம், குடியரசு தினங்களிலில் கொடியை சட்டையில் அணிந்து கொள்வேன். தற்போது அயல் நாட்டில் இருப்பதால் இயலவில்லை. நல்ல பகிர்வு.

ஸ்ரீராம். said...

சட்டைல குத்தலை. நெஞ்சுல குத்தி இருந்தோம்க...அதனால ஓட்டுப் போட வேண்டியதுதான்...அது மட்டும் இல்லாம கொடி பத்தி ஒரு பதிவே எங்கள் ப்ளாக்ல எழுதிட்டோம்ல...

kggouthaman said...

Same as what sriram said.
I too had the National flag in my heart. So voted in both the areas.

திவ்யாஹரி said...

நண்பர்களே.. எத்தனை பேரு சட்டையில குத்தி இருந்தீங்கனு சும்மா தெரிஞ்சிகத்தான் கேட்டேன். நம்மோட தேசிய உணர்வை ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதத்துல வெளிப்படுதுறோம் என்பதே உண்மை. நன்றி..

வெற்றி
jailani
அண்ணாமலையான்
புலவன் புலிகேசி
நட்புடன் ஜமால்
ராம்
பித்தனின் வாக்கு
சிவாஜி சங்கர்
சே. சரவணக்குமார்
ஸ்ரீராம்
kgகௌதமன்

ரிஷபன் said...

கொடி குத்தல.. ஆனா ஒரு நிகழ்ச்சில கலந்துகிட்டு தேசிய கீதம் கூடவே பாடி.. பிளீஸ்.. வோட் போட்டுடறேனே..

குடந்தை அன்புமணி said...

நானும் கொடி குத்திக்கலை. எனக்கு அன்னைக்குத்தான் கல்யாண நாளா அதைக் கொண்டாடவே நேரம் சரியா இருந்ததுங்க...

தமிழ் உதயம் said...

ஆக்கப்பூர்வமான பதிவு. வேட்டைக்காரனுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை பதிவுலகம் குடியரசு தினத்துக்கு தராதது வேதனை தான். திவ்யாஹரிக்கு நன்றி.

Post a Comment