Thursday, January 21, 2010

ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல..


ஆயிரத்தில ஒருவன் பார்த்தேன்ங்க.. நல்லா இருந்துச்சி. செல்வராகவன் (இயக்குனர்) என்ன சொல்ல வர்றார்னு எனக்கு புரிஞ்சிது.. ஆனா மத்த பதிவர்கள் மாதிரி, எனக்கும் சில சந்தேகம் கேட்கணும் இயக்குனர்கிட்ட.


எதுக்காக படத்துல இவ்வளவு வெளிப்படையான வசனங்கள்.. (கார்த்தி, ரீமா சென் கிட்டயும் ஆண்ட்ரியா கிட்டயும் பேசுற மாதிரியான வசனங்கள் தான் சொல்றேன்..)

எல்லா வலைத்தளங்களிலும், "நல்லா இருக்கு போய் பாருங்க.. செல்வராகவன் முயற்சிக்கு அது தான் நாம செய்ற மரியாதைன்னுலாம் கூட எழுதி இருந்தாங்க.."

அதை நம்பி இன்னிக்கே போகணும்.. அதுவும் இப்போவே.. போயே தீரணும்ன்னு அடம் பிடிச்சி.. போனேன்.. படம் ஆரம்பிச்சதும் கார்த்தி, கதாநாயகிகள் கிட்ட பேசுறதை பார்த்ததுமே என்னடா இதுன்னு தோணுச்சி. இவ்ளோ பேர் இருக்காங்க.. நமக்கு மட்டும் என்னன்னு என்னை நானே சமாதான படுத்திக் கொண்டு கண்டுக்காம படம் பார்த்தேன்.. இடைவேளை அப்போ தான் என் கணவர் ஒரு விஷயம் சொன்னார்.. (அவரும் அப்போ தான் கவனிச்சிருக்கார்) அங்கே நான் மட்டும் தான் பொண்ணு.. எல்லாரும் ஆண்கள்.. ஒரு லேடீஸ் கூட இல்ல..


அவ்ளோ நேரம் வரைக்கும் கொஞ்சமா சவுண்ட் விட்ட பசங்க இடைவேளைக்கு அப்புறம் அதிகமா சவுண்ட் விட்டுட்டு இருந்தாங்க.. (இல்லை எனக்கு தான் அப்படி தோணுச்சோ என்னவோ?) எல்லாரும் நார்மலா சிரிச்சது கூட என்னை கேலி பண்ணுவது போல இருந்தது.. அதுக்கு காரணம் படத்தின் காட்சிகள்.. நல்ல கதை.. அதை நல்ல விதமா சொல்ற திறமைலாம் இருந்தும் ஏன் நீங்களும் இப்படி..


"புரியவில்லை என்றால் கூட ஹிட் கொடுங்கன்னு" உங்களுக்கு பதிலா இங்கே எல்லாரும் (பல பதிவர்கள்) கேட்டுட்டு இருக்காங்க.. கண்டிப்பா அவர்களுக்கெல்லாம் (உங்க அந்த மாதிரியான காட்சிகள்ல) விருப்பம் இருக்காதுன்னு நம்புறேன்.. இருந்தாலுமே இவ்ளோ பகிரங்கமா எதிர்பார்க்க மாட்டாங்கன்னு நம்புறேன்.. ஏனெனில் அவர்களுக்கும் குழந்தைகள் இருக்கும்.. அதுவும் பார்க்கும்..


எனக்கு நேற்று ஆறுதலாக இருந்தது ஒரு முஸ்லிம் பெண்ணும் படம் பார்க்க வந்திருந்தது தான்.. அவர் இரண்டாம் வகுப்பில் இருந்திருக்கிறார்.. அவர்கள் கூட முகத்தை மறைத்து தான் இருந்தார்கள்.. நான் என்ன பண்ண..?


நல்ல படம் என்று சந்தோசப் படக் கூட விடவில்லை உங்களின் அந்த காட்சிகள்.. படம் முடிந்து வெளியில் வரும் போது படம் பார்த்த நிறைவை விட, இந்த படம் பார்க்க தியேட்டர்க்கு வந்துட்டோமேன்னு தான் தோணுச்சி.. "நீ மட்டும் தான் இப்படி நெனக்கிற மத்தவங்க அப்படிலாம் நெனக்க மாட்டங்கன்னு" என் கணவர் ஆறுதல் சொல்லிக் கொண்டு வந்தார்.. அவர் காதில் விழும் படியே அந்த முஸ்லிம் பெண், தன் கணவரிடம்.. "என்னை திட்டுனீங்களே.. அங்கே பாருங்க ஒரு பெண் என்று என்னை காட்டி சொன்னார்" (அவரும் என்னை மாதிரி படம் பார்க்க அடம் பிடித்திருப்பாரோ என்னவோ..)அந்த பெண்ணுக்கு நான் ஆறுதல் போல.. எனக்கு மட்டும் தான் தோணுதுன்னு நெனச்சது உண்மை இல்லை என்று உணர்ந்தேன்..

கடவுளே.. எல்லா பதிவர்களும் பசங்களுக்காகவே விமர்சனம் போட்டிருக்கீங்களே.. எங்கள கொஞ்சம் நெனச்சி பார்க்க கூடாதா?

மதிப்பிற்குரிய இயக்குனரே.. எங்களுக்கும் ரசனை உண்டு.. எங்களுக்கும் சரித்திரம் தெரியும்.. தமிழ் தெரியும்.. நாங்களும் படம் பார்ப்போம்.. பல ஆண்களுக்கு புரியாத உங்கள் படம் பல பெண்களுக்கு புரிந்திருக்க வாய்ப்புள்ளது. ஆண்களுக்கு மட்டும்னு படம் எடுக்காமல் இனி பெண்களுக்காகவும் யோசிச்சி படம் எடுங்க.. மத்த படி நல்ல படம். நல்ல கதை.. நல்ல முயற்சி. உண்மையாவே இந்த படம் எல்லாரும் பார்க்க வேண்டியது.. இதுக்காக கண்டிப்பா நாம பெருமை பட்டுக்கலாம்.. தப்பா சொல்லிருந்தா பின்னூட்டத்துல புரிய வைங்க.. புரிஞ்சிக்கிறேன்.. நன்றி!!


(பி.கு) தயவு செய்து 15 +, 18 + படம் பார்க்கலாம்னு விமர்சனம் செய்வதை விடுங்க.. 'உன்மேல ஆசை தான்' பாட்டு முடிந்ததும் அவர்களின் நடவடிக்கை பார்த்து, சிரிக்கிறேனா பயப்படுகிறேனான்னு எனக்கே தெரியல.. அப்புறம்.. ஒவ்வொருவரும்தன் தலையை தானே வெட்டி கொள்வது (வன்முறை தானே), அதையும் பார்த்து பயம் தான் வருகிறது.. மன திடம் உள்ளவர்கள் பார்க்கலாம்னு எழுதுங்கள்.. கர்பிணிகள் பார்க்க வேண்டாம்னும் எழுதுங்கள்.. உங்களுக்கு புண்ணியமா போகும்..

33 comments:

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

உங்களுடைய உணர்வுகள் புரிகிறது..

வலைகளில் எழுதுபவர்களில் 99 சதவிகிதத்தினர் இளைஞர்கள் என்பதால் அனைவரும் அந்த சில்லரைத்தனமான சீக்குகளில் சிக்குண்டு கிடக்கிறார்கள்..!

தனியே பார்க்க வேண்டியதை பொதுவில் வைத்தால் இப்படித்தான்.. அதனை ஏற்க முடியாதவர்களும் இருக்கிறார்களே என்பதை யாரும் உணர்வதில்லை..!

தமிழகம் முழுக்கவே இது ஆம்பளைங்களுக்கான படம்னு சொல்லாம சொல்லிட்டாங்க.. படமே அப்படித்தானே இருக்கு..!

இனி வலையிலேகூட நிறைய பேர் வசனங்களையும், காட்சிகளையும் குறிப்பிட்டு எழுதியிருந்தார்களே.. நீங்கள் இன்னும் கொஞ்சம் கூர்ந்து கவனித்திருக்கிலாம்..!

கொண்டாட்டமே முக்கியம் என்கிற விசிலடிச்சான் குஞ்சுகள் இருக்கின்றவரையில் தமிழ் சினிமாவில் இவை போன்றவைற்றை தவிர்ப்பது முடியவே முடியாது..!

கண்ணா.. said...

ஹா..ஹா...நான் படித்த மிகசிறந்த விமர்சனம் இதுதான்...


ஆயிரத்தில் ஓருவன் படம் அதுவும் குறிப்பாக இரண்டாம் பாகம் உங்களுக்கு இது மாதிரி தோணவைத்ததில் ஏதும் ஆச்சர்யமில்லை..


ஆனா எனக்கு இரண்டாம் பாகம்தான் மிகவும் பிடித்திருந்தது.


நீங்க இன்னுமா பதிவுலத்தை நம்பிட்டு இருக்கீங்க...அய்யோ....அய்யோ....

திவ்யாஹரி said...

சரியாக சொன்னீர்கள்.. முயற்சிக்குமரியாதையை செய்யணும்னு நெனச்சது தான் தவறாகி விட்டது.. தங்கள் பின்னூட்டத்திற்கும், வருகைக்கும் நன்றி நண்பா..

கண்ணா.. said...

அவர்களின் கடும் முயற்சிக்கு கண்டிப்பாக மரியாதை செய்ய வேண்டும்.

ஆனால் இது பெண்களை எத்தனை தூரம் கவரும் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.


எனக்கு படம் மிகவும் பிடித்தது.

வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற படங்களில் ராஜாவை பார்த்தற்கும் இதில் ராஜாவை பார்த்தற்கும் நிறைய வித்தியாசம் தெரிந்தது. இது போன்ற பல விஷயங்கள் என்னை மிகவும் கவர்ந்தது.

எனக்கு உங்கள் விமர்சனம் பிடித்தற்கு காரணமும் இது போன்ற வித்தியாசம்தான்.

திவ்யாஹரி said...

kanna..

முழு படமும், எனக்கும் பிடிக்கும் தான்.. நம் வலைத் தோழிகளை கூட கேட்டு பாருங்கள் எல்லாருக்கும் பிடிக்கும். தனியாக அமர்ந்து பார்த்தால்.. ஆனால் அவ்ளோ பேருக்கு மத்தியில் பார்க்க நேர்ந்ததே என் வேதனை.. கண்டிப்பா இது போன்ற படம் வெற்றி பெற ஆண்கள் மட்டுமே போதாது.. பெண்களும் வேண்டும்..

திவ்யாஹரி said...

உங்கள் பாராட்டுக்கும் பின்னூட்டத்திற்கும்..
நன்றி கண்ணா..

பிள்ளையாண்டான் said...

இயல்பாக படம் எடுக்கிறேன் என்ற போர்வையில் வன்முறை காட்சிகள் இடம் பெறுவது வாடிக்கையாகிவிட்டது. தவிர்த்திருக்கலாம். தவிர்த்திருக்க வேண்டும். தணிக்கைத் துறைதான் கவனிக்க வேண்டும்.

மற்றபடி, வரம்பு மீறிய காதல்(???) காட்சிகளை பெண்கள் விரும்ப மாட்டார்கள் என்று சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. நான், என்னுடைய பெண் நண்பர்கள் பலரிடமும், தயங்கி, தயங்கி சில காட்சிகள் கொஞ்சம் மோசம் என்று சொன்ன பொழுது, பலரும் மிகவும் பிடித்திருப்பதாக சொன்னார்கள்.

நீங்கள் குறிப்பிடும் வசனங்கள் எல்லாம், எல்லோருடைய வீட்டு வரவேற்பரைக்கே வந்து வெகு நாட்களாகிவிட்டது. குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்க பழகிவிட்டோம்.

அண்ணாமலையான் said...

no comments

திவ்யாஹரி said...

நன்றி பிள்ளையாண்டான்.. இது என் கருத்து.. அவ்வளவே.. என்னதான் குடும்பத்துடன் பார்க்க பழகினாலும் நம் 4,5 வயது குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு நம்மால் கூச்சமின்றி பதில் சொல்ல முடிவதில்லை.

திவ்யாஹரி said...

அண்ணா.. இது உங்களுக்கே நல்லா இருக்கா? ஒவ்வொரு பதிப்பு வெளியிடும் போதும் உங்க வித்தியாசமான பின்னூட்டதிற்காக காத்திருப்பேன் தான்.. இல்லை என்று சொல்லவில்லை. இவ்வளவு வித்தியாசத்தை எதிர் பார்க்கவில்லை. ஏதாவதுசொல்லிட்டு போங்க அண்ணா..

கண்மணி said...

//எங்களுக்கும் ரசனை உண்டு.. எங்களுக்கும் சரித்திரம் தெரியும்.. தமிழ் தெரியும்.. நாங்களும் படம் பார்ப்போம்.. பல ஆண்களுக்கு புரியாத உங்கள் படம் பல பெண்களுக்கு புரிந்திருக்க வாய்ப்புள்ளது. ஆண்களுக்கு மட்டும்னு படம் எடுக்காமல் இனி பெண்களுக்காகவும் யோசிச்சி படம் எடுங்க//

இதுவரை எந்த சினிமா இயக்குனர் பெண்கள் இரசனைக்கு என படம் எடுத்திருக்காங்க:((

கண்மணி said...

வித்தியாசமான விமர்சனம்.பல நல்ல ??? படங்கள் கூட தியேட்டரில் பார்க்க தயக்கம் தருது.கமர்ஷியல் கண்ணோட்டம் வருமானம் அவர்களுக்கு

ஸ்ரீராம். said...

வித்யாசமான பார்வையில் விமர்சனம். படங்கள் அடுத்த கட்டம் அடுத்த கட்டம் என்று போய்க் கொண்டிருக்கின்றன...இன்னும் என்னென்ன பகிரங்கமாகப் போகிறதோ..?
முன்னொரு காலத்தில் History of the world என்ற ஆங்கிலப் படம் பார்த்த போது இதே போல ஒரே ஒரு பெண் மட்டும் தியேட்டர் வந்திருந்து கஷ்டப்பட்டார்.

Sangkavi said...

உங்க சினிமா விமர்ச்சனம் நல்லா இருக்குங்க... தொடர்ந்து எழுதுங்க...

அமுதா கிருஷ்ணா said...

விமர்சனம் படித்து விட்டு படம் போனால், நமக்கென்று படம் பற்றிய ஒரு கருத்து இல்லாமல் போகுது..ஒரு த்ரில்லிங் இல்லாமலும் போய் விடுகிறது. படிக்காமல் போனால் இப்படி தர்மசங்கடத்தில் நெளிய வேண்டியுள்ளது. படமே பார்க்காமல் இருந்து விடலாம் போல. ஆங்கில படங்களை காப்பி அடித்தால் இப்படி பச்சை, பச்சையாக வசனம் இருக்க வேண்டும் என்று இயக்குநர் நினைப்பது தான் கொடுமை.

Rajeswari said...

உங்கள் கருத்து புரிகிறது திவ்யா....

வெற்றி said...

எந்த தியேட்டர்ல படம் பார்த்தீங்க...கொஞ்சம் பெரிய தியேட்டர்ல படம் பார்த்தா இந்த மாதிரி crowd nuisance இருக்காது..family audience நிறைய பேரு வருவாங்க...

Vaidheeswaran S. said...

என் வேண்டுகோள்:
கருப்பு நிற பின்னணியில் பச்சை எழுத்துகள் கண்ணை உறுத்துகிறது. வேறு வெப்சைட் ஐ பார்க்கும் போதும் சிறிது நேரம் கண்களில் உங்கள் ப்ளாக் இன் தோற்றம் தெரிகிறது. தயவு செய்து இதனை மாற்றவும்.

Anonymous said...

// அவர்கள் கூட முகத்தை மறைத்து தான் இருந்தார்கள்.. நான் என்ன பண்ண..?//

அவங்க தான் நற்குடியினர். நீங்க ஏன் இது மாதிரி படத்துக்கெல்லாம் போறீங்க?

Overall, your review is good.

Mohan said...

தமிழில் வந்த செல்வ ராகவனுடைய அனைத்து படங்களுமே,18+ படங்கள்தான்.அதனால்,நீங்கள் படம் பார்க்க செல்வதற்கு முன்னாடியே கொஞ்சம் யோசித்திருந்திருக்கலாம்.

புலவன் புலிகேசி said...

அப்பா சொன்னாங்க. நீங்களும் ஹரியும் படத்துக்கு வந்தீங்கன்னு..ரொம்ப பாதிக்கப்பட்டுருக்கீங்க..சில வசனங்கள் தேவையற்றது தான். ஆனால் நம் ரசிகர்கள் சில யதார்த்தன்கலையும் தவறான நோக்கிலேயே பார்ப்பதுதான் கொடுமை.....

திவ்யாஹரி said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்
நன்றி கண்மணி..
நன்றி ஸ்ரீராம்..
நன்றி சங்கவி..
நன்றி அமுத..
நன்றி ராஜேஸ்வரி..

திவ்யாஹரி said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்
நன்றி அமுதா கிருஷ்ணா..
நன்றி வைதீஸ்வரன்..

வெற்றி said ..
எந்த தியேட்டர்ல படம் பார்த்தீங்க...கொஞ்சம் பெரிய தியேட்டர்ல படம் பார்த்தா இந்த மாதிரி crowd nuisance இருக்காது..family audience நிறைய பேரு வருவாங்க...

எங்க ஊர் பியர்லஸ் தான்.. பெரிய தியேட்டர் தான்.. நன்றி வெற்றி.

நன்றி anony.. விவகாரம் எதுலயும் மாட்டி விட்டுடாதிங்க..
எனக்கு கலகலப்ரியா அக்கா மாதிரி எனக்கு பேச தெரியாது..

மோகன் said..
தமிழில் வந்த செல்வ ராகவனுடைய அனைத்து படங்களுமே,18+ படங்கள்தான்.அதனால்,நீங்கள் படம் பார்க்க செல்வதற்கு முன்னாடியே கொஞ்சம் யோசித்திருந்திருக்கலாம்.

அவரின் பழைய படம் எல்லாம் இப்போ உள்ள கதை.. இது சரித்திரம் என்று சென்றேன். நன்றி மோகன்.

புலிகேசி said..
ரசிகர்கள் சில யதார்த்தன்கலையும் தவறான நோக்கிலேயே பார்ப்பதுதான் கொடுமை.....

நன்றி புலவரே.. படம் பார்க்க போனபோது அப்பாகிட்ட போய் பேசிட்டு தான் போனோம்..
சரியாக சொன்னீர்கள்.. இங்கு படம் எடுக்கப்பட்டதை விட, தவறான நோக்கத்தில் ரசிக்கப்படுவதே காரணம்.. அங்கு வெளிப்படையான விமர்சனங்கள் இல்லாது இருந்திருந்தால், எனக்கு இவ்வளவு பாதிப்பு இருந்திருக்காது என்றே நினைக்கிறேன்..

||| Romeo ||| said...

நான் படம் பார்க்கும் போது நிறைய பெண்கள் இருந்தார்கள். நான் சென்ற தியேட்டரில் சில பசங்க கத்திகொண்டே இருந்தார்கள். ஒரு வேலை அந்த பெண்களை பார்த்தோ என்னவோ !!!!

ரிஷபன் said...

சரியான கண்ணோட்டத்தில் விமர்சனம்.. ஆண்களுமே நெளிகிற இடங்கள்..வசனங்கள்..திறமை தவறாகப் பயன்படுத்தப்படுவது சினிமாவில் மட்டுமா?!

DHANS said...

you should have seen in some other theater.... female audience in some theater is totally nil.

satyam,inox,mayajaal is the right place for female audience but not for your purse.

sila scene la enakkum kooda thoniyathu ithai pengal eppadi edutthupaanga endru.

nice review...

துபாய் ராஜா said...

உங்கள் பார்வையில் தெளிவான நல்லதொரு விமர்சனம்.

சினிமா புலவன் said...

ம் விமர்சணம் நன்று

திவ்யாஹரி said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்..
நன்றி romeo..
நன்றி ரிஷபன்..
நன்றி துபாய் ராஜா..
நன்றி சினிமா புலவன்..

Dhans said..
"satyam,inox,mayajaal is the right place for female audience but not for your purse."

Am from mayiladuthurai.. thank u.. Dhans..

Anonymous said...

அந்த ரெண்டாவது பாதில எல்லாருக்கும் ஒரே ரத்தவெறி. நானும் கிட்டத்தட்ட உங்களை மாதிரித்தான்.

திவ்யாஹரி said...

நன்றி சின்ன அம்மிணி..

jailani said...

சென்சார் போர்டில் சரிபாதி பெண்கள் வரும்வரையில் எல்லா படங்களுமே ஏறக்குறையில் 18+ தான்.

திவ்யாஹரி said...

நன்றி jailani..

Post a Comment