Monday, February 8, 2010

காவிரி நதி குறித்து ஒரு சந்தேகம்?


நண்பர் பாலாசியின் புரையோடும் ஆலமரம் பதிவு ரொம்பவும் அருமை.. அதை படித்ததும் என் மனதை குடையும் (வலை தொடங்குவதற்கு முன்பிருந்து) சில சந்தேகங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.. தவறாக இருந்தால் சுட்டி காட்டவும்.. விளக்கம் தெரியாததாலே தான் அதை சந்தேகம் என்கிறேன்.. உங்களுக்கு விளக்கம் தெரிஞ்சா பின்னூட்டத்துல விளக்குங்க. தெரிஞ்சிக்கிறேன்..

நண்பர் பாலாசியின் பதிவில் அவர் சொன்னது.. இது தான்..

//அது அம்மா வந்தால் கொஞ்சம், அப்பா வந்தால் கொஞ்சம், இல்லையேல் கருநாடகத்தில் வெள்ளம் வந்தால் ‘மிகவும்’ கிடைக்கும் வரம். (அதேநேரத்தில் இங்கே மழை அடித்துப்பெய்து கொண்டிருக்கும்) என்றும் இந்த வரம் ‘கடையாது’ என்றும் தெரியும்.//

சரியாச் சொன்னீங்க பாலாசி.. நன்றி..

இப்போ என் சந்தேகங்கள்:-

1) சாதாரணமான நாட்கள்ல தண்ணி தரமாட்டேன்னு சொல்ற கர்நாடகம், மழை பெய்து, அவங்க ஊர் மூழ்குற சமயத்துல மட்டும் ஏன் நம்ம பக்கம் தண்ணி விடுறாங்க?..

2) அப்போ மட்டும் அது அவங்க காவிரி இல்லையா? அந்த சமயத்துல மட்டும் அது பொது காவிரியா ஏன் மாறுது?

3) மற்ற நேரத்துல தண்ணி தராதவங்க அவங்க ஊர் மூழ்குற நேரம் மட்டும் அணை திறந்து விட, இது (தமிழ்நாடு) என்ன திறந்த மடமா?

4) ஏன் இப்படி தமிழ் நாட்டுக்காரன் மட்டும் கர்நாடகம் நல்லா இருக்கணும்னு நெனச்சி, அந்த தண்ணிய ஊருக்குள்ள விட்டுக்கிட்டு, அதிக வெள்ளப் பெருக்கால தன்னை தானே அழிச்சிக்கிறான்..

5) அந்த மாதிரி சமயத்துல நம்ம அரசாங்கம் ஏன் ஒரு ஒப்பந்தம் போட கூடாது? அதாவது..

"இப்ப வரும் தண்ணி எப்போதும் வருமென்றால் மட்டும் வரட்டும். இல்லேன்னா, பரவாயில்லை எங்களுக்கு தண்ணியே வேண்டாம்", என்று ஏன் சொல்ல கூடாது? உரிமையா தண்ணி கேட்க தான் முடியவில்லை நம்மால், நம்ம பக்கம் தண்ணி வர வேண்டாம்னு சொல்ல கூடவா உரிமை இல்லை?"

6) ஏன் நம்ம அரசாங்கம் கூட இந்த விஷயத்த யோசிக்கல?

7) இல்லேன்னா அப்படி ஒப்பந்தம் போட சொல்லிக் கேட்டா, அதனால ஏதாவது பிரச்சனை வருமா?

8) அவங்க மக்கள் தண்ணில சாகக்கூடாதுன்னு நாம யோசிக்கிறா மாதிரி, தண்ணி இல்லாம நம்ம விவசாயிகள் படும் கஷ்டத்தை பத்தி கர்னாடக மக்கள் ஏன் யோசிக்கல?

9) குஜராத்துக்கு வந்த மாதிரி பூகம்பம் ஏதாவது, கர்நாடகத்துக்கு வந்தா முதல்ல உதவுறது தமிழ்நாடாக தானே இருக்கும்? இத கூட யோசிக்க மாட்டாங்களா அந்த மக்கள்?

10) காவிரிய பொதுவா பயன்படுத்த கூடாதுன்னா நாம தரும் மின்சாரத்த மட்டும் ஏன் ஏத்துக்கணும்? நாம ஏன் கொடுக்கணும்?

இல்லைன்னு வர்றவங்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்குறவன் தமிழன்னு வசனம் பேசி சமாதானம் ஆக முடியலைங்க.. எதையாவது செஞ்சி காவிரியை வரவைக்க முடியாதான்னு ஒரு ஆசை தான்.. இப்படி தான் செய்யணும்னு நான் சொல்லலைங்க.. இப்படி செஞ்சா என்னனு தான் கேட்குறேன்.. இப்படி செய்யலாமானு தான் கேட்குறேன்.. சொல்லுங்க நண்பர்களே?

குஜராத் பூகம்பம்..
அமெரிக்க விமான குண்டு வெடிப்பு..
அந்த்ராக்ஸ் பரவல்..
சுனாமி..
பன்றிக் காய்ச்சல்..
ஹைத்தி நிலநடுக்கம்..
மனிதனை அழிக்க
விதி பலவாறு வந்தாலும்..
வாழ்க்கை நிலையல்ல என்பது தெரிந்தாலும்..
மனித மனம் என்னவோ
தண்ணீரை கூட
விட்டுக் கொடுக்க நினைப்பதில்லை!!!!...

27 comments:

Madurai Saravanan said...

vittuk kotubbavarkal kettu povathillai. athanal thaan thamilakam amaithi poonkaavaka entha atchi vanthaalum irukkirathu. so thirunthuvaarkal nambuvom. ungkal niyaayamaana kelvi sevidan kaathil oothiya sanku/. nalla pathivu.

அண்ணாமலையான் said...

ஏன் ஏன் இத்தன கேள்வி கேக்கற தாயே, கேக்க வேண்டிய இடத்துல கேட்டா டான் டான்னு பதில் வருமே? அது எந்த இடமா? 1. சென்னை
2. பெங்களூரு..

Chitra said...

வாழ்க்கை நிலையல்ல என்பது தெரிந்தாலும்..
மனித மனம் என்னவோ
தண்ணீரை கூட
விட்டுக் கொடுக்க நினைப்பதில்லை!!!!


..............mmmmmmmm.......யோசிச்சிக்கிட்டு இருக்கேன்.

ரிஷபன் said...

காவிரில பிரச்னை இல்ல.. அதை பிரச்னையாக்கி குளிர் காயறவங்கதான்.. 50 வருஷ சரித்திரம் பார்த்தாலே புரிஞ்சிரும்.. நிஜ பிரச்னைகளிலிருந்து மக்களை திசை திருப்ப அவ்வப்போது இப்படி எதையாச்சும் கிளப்பி விட்டு அப்புறம் அதையும் ஒரு பிரச்னையாவே ஆக்கி விடுகிற மாய்மாலம்தான் இங்கேயும் நடக்குது..

ஸ்ரீராம். said...

இதுக்கு ஒரு சுலபமான வழி தோணுது...மேம்பாலம் கட்டறா மாதிரி வானத்துல ஒரு கூரை கட்டி விழற மழைத்தண்ணியை நைசா இந்தப் பக்கம் வந்து விழ வச்சுடணும்...அல்லது தமிழ்நாட்டு ஜனங்கள் ஒவ்வொருத்தரா போய் ஆளுக்கு ஒரு குடம் அங்கேருந்து கொண்டு வந்து நம்ம ஊரு அணையில கொட்டிடணும்.

புலவன் புலிகேசி said...

அய்யய்யோ திவ்யா இந்த பிரச்சினை த்ஈர்ந்துருச்சின்னா அப்புறம் எப்புடி அந்த குடும்பம் அரசியல் நடத்துறது?

தமிழரசி said...

மக்களின் சார்பாய் கேட்கப்பட்ட கேள்விகள்?
விடைகள் தெரிந்தும் தொடுக்கப்படும் கேள்விகள் மார்கமுண்டு மனசுண்டா?

ஜிஎஸ்ஆர் said...

”குஜராத் பூகம்பம்..
அமெரிக்க விமான குண்டு வெடிப்பு..
அந்த்ராக்ஸ் பரவல்..
சுனாமி..
பன்றிக் காய்ச்சல்..
ஹைத்தி நிலநடுக்கம்..
மனிதனை அழிக்க
விதி பலவாறு வந்தாலும்..
வாழ்க்கை நிலையல்ல என்பது தெரிந்தாலும்..
மனித மனம் என்னவோ
தண்ணீரை கூட
விட்டுக் கொடுக்க நினைப்பதில்லை!!!!.”

எதார்த்தமான உண்மைவாழ்க வளமுடன்


என்றும் அன்புடன்
ஞானசேகர்

ஜெய்லானி said...

அரசியல்வாதிகள் வீட்டில் எப்போது குழாய் நீர் குடிப்பார்களோ ( பாட்டில் மினரல் வாட்டர் இல்லை)அப்போது காவிரி என்ன.கங்கை,யமுனை ஆறே தமிழ்நாட்டில் ஓடும்.

malar said...

எல்லாவறிற்க்கும் ஒரு முடிவு உண்டு.இதற்க்கும் வரும் எப்போன்னு தான் தெரியல்ல...

Sangkavi said...

கேள்விகள் அனைத்தும் டெல்டா மாவட்ட விவசாயிகள் சார்பில் கேட்டது போல் இருந்தது ஆனால் பதில் சொல்ல வேண்டியது சென்னையும், பெங்களுரும் தான்...

கண்ணா.. said...

கேள்வி - எனக்கு தமிழ்ல பிடிக்காத ஒரே வார்த்தை

so...நான் எஸ்கேப்பு..

க.பாலாசி said...

//ஏன் இப்படி தமிழ் நாட்டுக்காரன் மட்டும் கர்நாடகம் நல்லா இருக்கணும்னு நெனச்சி, அந்த தண்ணிய ஊருக்குள்ள விட்டுக்கிட்டு, அதிக வெள்ளப் பெருக்கால தன்னை தானே அழிச்சிக்கிறான்..//

கருநாடகம் நல்லா இருக்கணும்னு நெனச்சி தண்ணியத்தெரந்து விடுறது இல்ல. அதவச்சி அரசியல் லாபம் தேடத்தான் இந்த பரதேசிகள் பாத்துகிட்டு இருக்குங்க... வேற வழியும் கிடையாதுங்க...

//7) இல்லேன்னா அப்படி ஒப்பந்தம் போட சொல்லிக் கேட்டா, அதனால ஏதாவது பிரச்சனை வருமா?//

ஏற்கனவே பண்ணின ஒப்பந்தங்களுக்கு எந்தவழியும் கிடைக்கலைங்க...

பல அரசியல் சிக்கல்கள், உள்நோக்கங்கள், சுயலாபதாபங்கள்....இப்படி உழன்றுகொண்டிருக்கிறது உழவனின் அடிவயிறு... பசியாற்றத்தான் விடியவில்லை....

நல்ல இடுகை...திவ்யா...

பேநா மூடி said...

ஒரு முறை கர்நாடகாவில் வந்த வெள்ள்த்தை தமிழகத்துக்கு விட இங்கும் நிறைய சேதம் ஏற்பட்டதாம் .., அதற்க்கு அவர்களிடம் நஷ்ட ஈடு கோரி வழக்கு பதிவு செய்தது தமிழக அரசு.., நஷ்ட ஈடை தருவதாக ஒத்துக்கொண்ட கர்னாடகா இனி வெள்ளம் வ்ராமல் இருக்க சில அணைகள் கட்டவும் அனுமதி பெற்றது..., அதில் இருந்து தான் நமக்கு சனியன் பிடித்தது...,

||| Romeo ||| said...

ஒரே வார்த்தை எல்லாம் அரசியல் தான் காரணம்.

S Maharajan said...

தோழி!

இனி எந்த ஒப்பந்தம் போட்டாலும் பயன் இல்லை.
இது முழுக்க முழுக்க அரசியலே!
ஒரு நல்ல மனிதன் ஆட்சி செய்ய வரும் போது தான் இதற்கு விடிவு காலம் வரும்.

YUVARAJ S said...

Good questions, unfortunately, they dont have any answers.

you can reach me at:

http://encounter-ekambaram-ips.blogspot.com/

happy blogging

Anonymous said...

/* 9) குஜராத்துக்கு வந்த மாதிரி பூகம்பம் ஏதாவது, கர்நாடகத்துக்கு வந்தா முதல்ல உதவுறது தமிழ்நாடாக தானே இருக்கும்? இத கூட யோசிக்க மாட்டாங்களா அந்த மக்கள்? */

இதற்கு காரணம் மனிதாபிமானம் இல்லை ஐயா. அந்த நிதியால் தமிழக அரசியல்வாதிகளுக்கு கிடைக்கும் லாபம்தான் காரணம்.

முரளி

பிரியமுடன்...வசந்த் said...

திவ்யா நெம்ப காலமா எல்லாரும் கேட்க நினைக்கிற கேள்வி அரசியல்வாதிகளின் மீதிருக்கும் கோபம் மட்டுமே இப்`போதை`க்கு பதில்...

பித்தனின் வாக்கு said...

திவ்யா நீ கேட்ட கேள்விகள் அனைத்தும் பின்னூட்டத்தில் பதில் சொல்ல முடியாது.பதிவுத் தொடர்தான் போட வேண்டும். அப்படிப் போட்டாலும் உண்மைகளைச் சொல்ல முடியாது.சொன்னால் நான் தமிழ்த்துரோகி ஆக்கப்படுவேன். இல்லாவிட்டால் ஆட்டோ அல்லது மணல் லாரிதான் (தண்ணி லாரி) வரும். இது நூடுல்ஸ்ஸில் விழுந்த முடிச்சு மாதிரிதான். நன்றி.

Anonymous said...

naஅன்பு சகோதரியே,
நானும் இதே கேள்வியே ஐந்து வருடம்மாக கேக்கின்றேன். ஆனால் எந்த கன்னட காரணம் பதில் சொல்வதை இல்லை பெங்களூரில்.

என்றென்றும் அன்புடன்,
மா.மது நெடுஞ்சாவடியார்,

திவ்யாஹரி said...

நன்றி சரவணன்..
நன்றி அண்ணா..
நன்றி சித்ரா..
நன்றி ரிஷபன்..
நன்றி ஸ்ரீராம்.. ஐடியா சூப்பர்..
நன்றி புலவரே சரியாக சொன்னீர்கள்..
நன்றி தமிழரசி..
நன்றி ஞானசேகர்..
நன்றி ஜெய்லானி.. அதுவேணா சரிதான் நண்பா..
நன்றி மலர்..
நன்றி சங்கவி..
நன்றி கண்ணா..
நன்றி பாலாசி.. ஆமாங்க..
நன்றி பேனா மூடி.. இது எனக்கு புது தகவல் நண்பா.. நன்றி..
நன்றி ரொமெஒ.. ஆமாம் நண்பா..
நன்றி மகாராஜன்.. எப்போ மழை வரும்னு உட்கார்ந்து இருந்தது போய்.. இப்போ எப்போ நல்ல ஆட்சி வரும்னு இருக்கிறோம்..
நன்றி யுவராஜ்..
நன்றி முரளி.. சரி தான் நண்பா..
நன்றி வசந்த்.. //இப்'போதை'க்கு// உண்மை vasanth..
நன்றி பித்தன் அண்ணா.. ஆட்டோ லாரியா? இந்த பதிவ யார் போட்டானு தெரியல அண்ணா.. யாரோ anony -ன்னு நெனக்கிறேன்.. ஹி ஹி ஹி..
நன்றி மது.. கேட்டுட்டே இருப்போம்.. விடை வரும் வரை..

சே.குமார் said...

//வாழ்க்கை நிலையல்ல என்பது தெரிந்தாலும்..
மனித மனம் என்னவோ
தண்ணீரை கூட
விட்டுக் கொடுக்க நினைப்பதில்லை!!!!... //

உங்கள் கேள்வி நியாயமானதே... இதே கேள்வியை நான் பலமுறை என் நண்பர்களிடம் கேட்டதுண்டு.

நட்புடன் ஜமால் said...

இந்த கேள்விகளை கேட்க்கவாவது நம்மள விடுறாய்ங்களேன்னு போக வேண்டியது தான்

----------------

எதுனா எதுனா செய்யனும் மொத்ததுக்கும்

நல்லபடியாக யோசிப்போம் ...

கமலேஷ் said...

ஏன்னா நாமதான் இழிட்சவயணுக...(வேறென்ன தோழி சொல்ல)....

Dr.P.Kandaswamy said...

சகோதரி (சரிதானே),
ரிஷபன் சொன்ன கருத்தை (காவிரில பிரச்னை இல்ல.. அதை பிரச்னையாக்கி குளிர் காயறவங்கதான்.. ) நான் ஆமோதிக்கிறேன். 1.இயற்கை வேறு - அரசியல் வேறு.
2.வெளியில் தெரிவது ஒன்று - உள்ளே நடப்பது வேறு.
3.உங்கள் கேள்விகள் அனைத்தும் பதில்கள் இல்லாதவை.
4.அரசியல் நடத்துவதற்கு வேறு பிரச்சினைகள் இல்லாதபோது என்றும் காவிரி பிரச்சினைதான் இரண்டு பக்க அரசியல்வாதிகளுக்கும் கை கொடுக்கும் வற்றாத அட்சயபாத்திரம்.

aambalsamkannan said...

//"இப்ப வரும் தண்ணி எப்போதும் வருமென்றால் மட்டும் வரட்டும். இல்லேன்னா, பரவாயில்லை எங்களுக்கு தண்ணியே வேண்டாம்", என்று ஏன் சொல்ல கூடாது? உரிமையா தண்ணி கேட்க தான் முடியவில்லை நம்மால், நம்ம பக்கம் தண்ணி வர வேண்டாம்னு சொல்ல கூடவா உரிமை இல்லை?"//


சரியான கேள்வி சகோதரி :)

Post a Comment