Sunday, February 7, 2010

சின்னச் சின்ன ஆசைகள்..


நான் கோபப்பட்டால்
நீ சமாதானம் செய்ய வேண்டும்..
நீ சமாதானம் செய்தவுடன் -நான்
உன் மார்பினில் ஒளிந்து கொள்ள வேண்டும்!!..

நான் சமைத்து வைத்தால்
நீ எனக்கு ஊட்டி விட வேண்டும்..
நீ ஊட்டி விடும் பொழுது -நான்
உன் விரல் கடிக்க வேண்டும்!!..

நான் பாய் விரித்தால்
நீ நானுறங்க உன் மடி தர வேண்டும்..
நீ மடி தந்து உறங்கும் பொழுது -என்
கனவிலும் நீ வர வேண்டும்!!..

நான் குளித்து விட்டு வந்தால்
நீ உடை தேர்வு செய்ய வேண்டும்..
உன் உயிரோடு கலந்த என்னை
நீ மட்டுமே ரசிக்க வேண்டும்!!..

நான் ஊர் சுற்றிப்பார்க்க நினைத்தால்
நீ நானறியாமல் அழைத்து செல்ல வேண்டும்..
நீ அழைத்து செல்லும் இடங்களில் எல்லாம்
நான் உன்னை மட்டுமே ரசிக்க வேண்டும்!!..

31 comments:

அண்ணாமலையான் said...

”உன்னை மட்டுமே ரசிக்க வேண்டும்” அப்டின்னா வீட்லே இருந்துருக்கலாமே?

angel said...

usssss appa mudiyalanga epdi ipdilam??????

க.பாலாசி said...

ஏனுங்க அம்மணி... இதெல்லாம் ‘சின்ன சின்ன’ ஆசைகளா???

ஆனாலும் காதலில் எல்லாமே சிறு ஆசைகள்தான்.

நல்ல கவிதை..ரசித்தேன்...

நாடோடி said...

கவிதை சூப்பர்...காப்பிரைட் வாங்கி வச்சிருக்கீங்களா..

Sangkavi said...

//நான் குளித்து விட்டு வந்தால்
நீ உடை தேர்வு செய்ய வேண்டும்..
உன் உயிரோடு கலந்த என்னை
நீ மட்டுமே ரசிக்க வேண்டும்!!..//

ம்ம்.... எனக்கு ரொம்ப புடிச்சிருக்குங்க....

யாதவன் said...

கடைசியில் ஒரு கவிதை சுப்பர் சுப்பர்

கிச்சான் said...

தோழர் திவ்யாஹரி அவர்களே !

~~நான் குளித்து விட்டு வந்தால்
நீ உடை தேர்வு செய்ய வேண்டும்..
உன் உயிரோடு கலந்த என்னை
நீ மட்டுமே ரசிக்க வேண்டும்!!..~~

ரொம்பவும் ரசித்து எழுதி இருக்கிறேர்கள்
அருமையான வரிகள்.
வாழ்த்துக்கள்


அன்புடன் கிச்சான்

Chitra said...

அக்கா, நீங்க கொஞ்சுங்க. டூயட் பாடுங்க. எல்லாம் Valentine's Day - ஒரு வாரத்துக்கு முன்னே வந்து சிலு சிலுக்குது.

.....ha,ha,ha,ha.....

malar said...

நடக்ற கதையா?

நிலாமதி said...

எல்லாமே .....நிறைவேற வாழ்த்துக்கள்.

பிரியமுடன்...வசந்த் said...

malar said...
நடக்ற கதையா?
//

ஏன்? உண்மையான அன்பு காட்டினா எல்லாமே கிடைக்கும்


திவ்யா நல்லா ரசனையா எழுதியிருக்கீங்க எல்லாம் கிடைக்கட்டும்..வாழ்த்துகள்

சின்ன அம்மிணி said...

நல்லா இருக்குங்க திவ்யா, காதலர்தினத்துக்கு இனி எல்லாரும் எழுதுவாங்க பாருங்க.

புலவன் புலிகேசி said...

சினேகிதனே பாடலில் சேர்த்து சாதனா சர்க்கத்த பாட்ச் சொல்லலாம் போல...நல்லாருக்குங்க

சே.குமார் said...

அட... அட..!

goma said...

நீ அழைத்து செல்லும் இடங்களில் எல்லாம்
நான் உன்னை மட்டுமே ரசிக்க வேண்டும்!

அடடா அற்புதம்

suganthan said...

நிறைய கவிதைகளை படித்தால்
உடனே கவிதை ஆசை வரும்

உங்கள் கவிதையை படித்தால்
காதலிக்க ஆசை வருகிறது.

நீங்கள் சொன்ன வார்த்தைகளை விட
சொல்லாமல் விட்ட வார்த்தைகளில்
பரவியிருக்கும் காதலால்
ஹரி க்கு எஅப்பவும்
.....
வாழ்த்துக்கள்

சினிமா புலவன் said...

:) good one

S Maharajan said...

"நான் கோபப்பட்டால்
நீ சமாதானம் செய்ய வேண்டும்..
நீ சமாதானம் செய்தவுடன் -நான்
உன் மார்பினில் ஒளிந்து கொள்ள வேண்டும்!!..

அசத்திடிங்க போங்க!!!

Sivaji Sankar said...

நல்லாருக்கு அக்கா..

தமிழரசி said...

உன் உயிரோடு கலந்த என்னை
நீ மட்டுமே ரசிக்க வேண்டும்!!..

நீ அழைத்து செல்லும் இடங்களில் எல்லாம்
நான் உன்னை மட்டுமே ரசிக்க வேண்டும்!

காதலில் மட்டுமே காதலால் மட்டுமே சாத்தியம்...

ஸ்ரீராம். said...

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் பாதிப்பா? காதல் பாதித்தால் எல்லா பாதிப்பும், ஆசையும் இருக்கும்தான்..

பித்தனின் வாக்கு said...

ஆனாலும் தங்கை நீ ரொம்ப சுயனலக்காரி இதையும் சேர்த்துக் கொள்,

ஆக மொத்தம் உனக்கு என்று ஏதும்
இல்லாமல் எனக்கு என்று அடிமையாய்
வாழவேண்டும்,என் அன்புச் சிறையில்.

இது எல்லாம் ஒன்னும் புரியவில்லை.ஒருவேளை கல்யாணம் ஆன புரியும் என்று நினைக்கின்றேன்.
நன்றி.

கண்ணா.. said...

கவிதையும் போட்டோவும் அழகு.

:)

kunthavai said...

அடடா உங்க கவிதையை படித்தவுடன் , காலத்தை கடன் வாங்கி இன்னொருதடவை காதலிக்கணும் போலிருக்கே .

||| Romeo ||| said...

இதை படிக்கும் போதே மனசு என்னவளை தேடி போகுதே ...

அடியே கொல்லுதே,
அழகு அள்ளுதே.... இந்த பாட்டு தான் உடனே நினைவுக்கு வருது..

சூப்பர் சூப்பர் .. அருமையான இருக்கு

Priya said...

//நீ மடி தந்து உறங்கும் பொழுது -என்
கனவிலும் நீ வர வேண்டும்!!..//....அழகா இருக்கு இந்த வ‌ரிகள் தோழி!

திவ்யாஹரி said...

நன்றி அண்ணா.. வீட்ல இருக்கும் போது 2 பேர் தான் இருப்போம்.. அப்போ ரசிக்கிறதை விட....
நன்றி angel.. தானா வருது..
நன்றி பாலாசி.. கையை மெதுவா கடிச்சா சின்ன ஆசை.. அழுத்தமா கடிச்சா பெரிய ஆசை.. போதுமா நண்பா விளக்கம்?
நன்றி நாடோடி.. ஏன் யாராவது சுட்டுடுவாங்களா?
நன்றி சங்கவி.. சரிங்க..
நன்றி யாதவன்..
நன்றி கிச்சான்.. நான் தோழி..
நன்றி சித்ரா.. அக்காவா? ஐயோ நான் சின்ன பொண்ணுங்க.. நான் காதலர் தினத்துக்காக எழுதலைங்க.. என் கணவருக்காக எழுதுனேன்..
நன்றி மலர்.. காதலில் அனைத்தும் சாத்தியம் தான் தோழி..
நன்றி நிலாமதி.. வாழ்த்துக்களுக்கும் நன்றி தோழி..
நன்றி வசந்த்.. //ஏன்? உண்மையான அன்பு காட்டினா எல்லாமே கிடைக்கும்// ஆமாம் நண்பா.. வாழ்த்துக்களுக்கும் நன்றி வசந்த்..
நன்றி சின்ன அம்மிணி.. நான் காதலர் தினத்துக்காக எழுதலைங்க.. என் கணவருக்காக எழுதுனேன்..
நன்றி புலவரே.. அவ்வளவு நல்லாவா இருக்கு.. ஆச்சர்யமா இருக்கு நண்பா..
நன்றி குமார்.. ம்ம் சொல்லுங்க நிறைய எதிர்பார்க்குறேங்க..
நன்றி கோமா..
நன்றி சுகுந்தன்.. ம்ம்.. செய்யுங்க.. வாழ்த்துக்கள்.. உங்கள் வாழ்த்துக்களுக்கு ஹரி நன்றி சொல்ல சொன்னாங்க..
நன்றி சினிமா புலவன்..
நன்றி மகாராஜன்..
நன்றி சிவாஜி சங்கர்..
நன்றி தமிழரசி.. உண்மைங்க..
நன்றி ஸ்ரீராம்.. அதெல்லாம் இல்லை.. தோணுச்சிங்க எழுதுனேன்.. அவ்வளவு தான்..

நன்றி பித்தன் அண்ணா..
//தங்கை நீ ரொம்ப சுயனலக்காரி இதையும் சேர்த்துக் கொள்,
ஆக மொத்தம் உனக்கு என்று ஏதும்
இல்லாமல் எனக்கு என்று அடிமையாய்
வாழவேண்டும்,என் அன்புச் சிறையில்.//

நான் சுயநலக்காரியாக இருந்தால்..

//நான் தேர்ந்தெடுக்கும் உடையை அவர் அணிந்து கொள்ள வேண்டும்னு சொல்லிருப்பேன்..
அழைத்து செல்லும் இடங்களில் எல்லாம் எனையே நீ ரசிக்க வேண்டும் என எழுதியிருப்பேன்..
நீ தூங்கும் போதும் உன் கனவில் நான் வர வேண்டும்னு எழுதிருப்பேன்.. //
நான் சுயநலக்காரியா அண்ணா?

நன்றி கண்ணா..
நன்றி குந்தவை.. கடன் வாங்க வேண்டாம் தோழி.. எல்லா வயதிலும் காதல் சாத்தியமே..
நன்றி romeo.. உங்களுக்கு திருமணம் ஆகிடுச்சா?
நன்றி பிரியா..

நட்புடன் ஜமால் said...

அழகு காதல்

இரசிச்சி சொல்லியிருக்கீங்க

காதலில் சுயநலமாக இருப்பதும் காதலே ...

R.Gopi said...

உங்க காதல் அப்புறம் அந்த சின்ன சின்ன ஆசைகள் ரொம்பவே அழகு...

காதலே அழகுதானே....!!! கூடவே அது தரும் சுகமான அந்த இனிய நினைவுகளும்....

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
r.v.saravanan kudandhai said...

உன் உயிரோடு கலந்த என்னை
நீ மட்டுமே ரசிக்க வேண்டும்

good

Post a Comment