Monday, January 11, 2010

போதும்!! போதும்!!


உன் கண்ணால்
காதலை கற்றேன்..

உன் உதட்டால்
மென்மையை கற்றேன்..

உன் நாவால்
கனிவை கற்றேன்..

உன் சிரிப்பால்
அழகை கற்றேன்..

உன் பேச்சால்
ரசிப்பை கற்றேன்..

உன் அன்பால்
நாணத்தை கற்றேன்..

போதும்.. போதும்..
நீ கற்றுக் கொடுத்தது.. -உன் பிரிவையும்
கற்றுக் கொடுக்க முயலாதே..
கற்க என்னால் முடியாது!!..

15 comments:

என் நடை பாதையில்(ராம்) said...

உங்களால் நான் கவிதை கற்றுவிடுவேன் போல...

திவ்யாஹரி said...

நன்றி ராம்..

கற்று கொடுக்குற அளவுக்கா இருக்கு.. என்னைய வச்சி காமெடி கீமடி பண்ணலையே..

அண்ணாமலையான் said...

கஷ்டமான பாடம்தான்..

மதுரை சரவணன் said...

irukkattum neengkal maranthuveetathir iththanaiyum karrapin!

ரிஷபன் said...

உறவும் வரும் பிரிவும் வரும் இதயம் ஒன்றுதான்..
அந்த இதயம்தான் எத்தனை மென்மை..மனசைத் தொடும் கடைசி வரி.

அரங்கப்பெருமாள் said...

கல்விக் கரை இல;கற்பவர் நாள் சில.

நிலாமதி said...

உள்ளத்தால் இணைந்து விடுங்கள் பிரிவு என்பது இல்லை.......பிரிவு வந்தால் அது உடல்களுக்கு தான்.உள்ளத்துக்கு இல்லை......

சினிமா புலவன் said...

ம் நல்ல பாடங்கள்

sathishsangkavi.blogspot.com said...

//உன் அன்பால்
நாணத்தை கற்றேன்..//

உண்மையாங்க....

திவ்யாஹரி said...

அண்ணாமலையான் said...

கஷ்டமான பாடம்தான்..
நீங்க சொன்ன சரிதான் அண்ணா..

காதலை மறப்பது எளிதல்ல நண்பா. வருகைக்கு நன்றி மதுரை சரவணன்.

நன்றி ரிஷபன். எவ்வளவு அழகான வரிகள்.. எனக்கு பழைய பாட்டுக்கள் என்றால் உயிர்..நினைவு படுத்தியமைக்கு நன்றி நண்பா..

நன்றி அரங்கப்பெருமாள்..

நன்றி நிலாமதி. உள்ளத்தால் இணைந்த பின், உடலால் பிரிவதும் கடினமே தோழி..

நன்றி சினிமா புலவன்.. நீங்க புலவன் புலிகேசியா?

நன்றி சங்கவி..

பித்தனின் வாக்கு said...

அது சரி, நீங்க எப்ப டீச்சர் ஆனீங்க. இது உங்களுக்கு அவர் எழுதுனதா இல்லை அவருக்கு நீங்க எழுதுனதா, எப்படியே யாராது எதையாது கத்துக்கிட்டா சரி. அது ஏங்க பிரிவுன்னா பயப்படுறிங்க. தற்காலிக பிரிவுதான் நிறைய அன்பைக் கெடுக்கும் தெரியுமா?
நன்றி.

திவ்யாஹரி said...

திருமணத்திற்கு முன் பிரிவு ஒரு பொருட்டில்லை.. திருமணத்திற்கு பின் பிரிந்தால் அது வாழ்க்கையே இல்லை.. விதிவசத்தால் கூட நான் பிரிய நினைக்க மாட்டேன்.. nanri nanba..

புலவன் புலிகேசி said...

//நன்றி சினிமா புலவன்.. நீங்க புலவன் புலிகேசியா?//

அது என் நண்பன் குமரன்..

கவிதை நன்று...

திவ்யாஹரி said...

நன்றி புலவரே..புலவன்னு இருந்ததும் சந்தேகம் வந்துடுச்சி.. அதான் கேட்டேன் நண்பா..

சு.செந்தில் குமரன் said...

'களவும்
கற்று மற '
என்றார்கள் .

பிரிவையும்
கற்று மறக்கலாம் .....
தற்காலிகப்
பிரிவுகளாய்!

Post a Comment