காலையில் உன்னை எழுப்பும் போது
நீ செய்யும் சிணுங்கல்கள்..
காய் நறுக்கும் போது
நீ செய்யும் சீண்டல்கள்..
உணவு பரிமாறும் போது
நீ செய்யும் சில்மிஷங்கள்..
உன் தாயுடனிருக்கும் போது
நீ செய்யும் ஜாடைகள்..
உன் தம்பி தங்கையுடன் அரட்டை
அடிக்கும் போது உன் செல்லக் கோபங்கள்..
நீ எனக்கு வாங்கி வந்த இனிப்பை
உன் தங்கைக்கு தரும்போது நீ படும் அவஸ்தைகள்..
அனைத்து வேலைகளையும் முடித்து..
களைத்து வரும் போது வருடி விடும் உன் கைகள்..
அனைத்தும் ரசிப்பேன்..
எத்தனை முறை.. எத்தனை விதமாக..
சொன்னாலும் காதல் சுகமானது தான்!!..
16 comments:
ஆமாமா.. ஹி ஹி ஹி..
//சொன்னாலும் காதல் சுகமானது தான்!!..//
சொல்லாவிட்டாலும் காதல் சுகமானதுதான்!! :)
ஒரு கேள்வி..
உலகத்துல எல்லா பெண்களும் ஐ மீன் காதலிகளும் ஒரே மாதிரிதான் இருப்பார்களா?
ம்ம்....அழகான ரசனைகள்...தொடர்ந்து ரசித்திட என் வாழ்த்துக்கள்!
ரசிக்க முடிந்த கவிதை..
என்ன திவ்யா எல்லாத்துலயும் இணைச்சிட்டீங்க போல. எல்லாத்துலயும் ஒட்டு போட்டாச்சு. நல்ல இருக்கு.
நல்லா இருக்குங்க..::))
என்னங்க...அவரைக் காட்டிக் கொடுத்துடுவீங்க போலேருக்கு...voted in both..
என்ன விட நல்லாவே எழுதறனால ஓட்டு போடறேன்....
நன்றி அண்ணா.. எங்க பதிவு எழுதவே காணும் ரொம்ப நாநாளாளா?
நன்றி வெற்றி.. எதற்காக இந்த கேள்வி நண்பா.. எனக்கு தெரியல.. இருக்கலாம்..
நன்றி பிரியா..
நன்றி ரிஷபன்..
நன்றி புலவரே.. நானே இணைச்சிட்டேன் நண்பா.. நீங்க சொல்லி கொடுத்தா மாதிரி..
நன்றி பலா பட்டறை..
நன்றி ஸ்ரீராம்..
"என்னங்க...அவரைக் காட்டிக் கொடுத்துடுவீங்க போலேருக்கு."
யாரை ஸ்ரீராம்..?
நன்றி ராம்..
கவிதை நன்றாக இருக்கிறது, வாழ்த்துக்கள்.
ஆகா அருமைன்னு சொல்றதா இல்லை அட்டகாசாம்ன்னு சொல்றதான்னு தெரியல்லையேம்மா. ரொம்ப நல்லாருக்கு. ஏங்க என்னை மாதிரி தனிமையில் இருக்கும் ஆளுகளை எல்லாம் இப்படிச் சொல்லி நேகடிக்கக்கூடாது. நன்றி. என் பதிவில் பதிவர்கள் ஸ்மையல் அறையில் என்று ஒரு பதிவு போட்டுள்ளேன். படித்து சிரிக்கவும். நன்றி,.
நன்றி சுபாஷ்..
நன்றி kggouthaman ..
நன்றி பித்தன் நண்பா.. நோகடித்ததற்கு மன்னிக்கவும்.. ம்ம்.. படிக்கிறேன் நண்பா..
ம்ம் நல்லாருக்கு
நன்றி கண்மணி..
ரெம்ப நல்லா இருக்குங்க .லவ் பண்ண தோணுது ..
நன்றி anony..
Post a Comment