Tuesday, January 12, 2010

நமக்கும் எப்போது?


நமக்கும் எப்போது?

எல்லா சுபயோக சுபதினத்திலும்

ஏதாவதொரு நட்ஷத்திரத்தில் அமைந்த

ஏதாவதொரு நல்வேளையில்

பெரியோர்கள் கூடி

திருமணங்களை நிச்சயித்துக்

கொண்டுதானிருக்கிறார்கள்..

நமக்கும் எப்போது?


வசந்தத்தை எதிர்நோக்கி..

பல பருவங்களையும் எதிர்பார்த்து தான்

காலமும், நேரமும்

மனிதர்களும், விலங்குகளும்

மரங்களும், மலைகளும் காத்திருக்கின்றன..

ஆனால் அன்பே நானோ..

உன் புன்னகையால் எனக்கு வரும்

வசந்த காலத்தை மட்டுமே எதிர்பார்க்கிறேன்..


நிவாரணம்..

செத்துக் கொண்டிருக்கும்

நம் உணர்வுகளுக்கு

உன் டெலிபோன்

முத்தம் தான்

..ஒரே நிவாரணம்

11 comments:

அண்ணாமலையான் said...

ரை ரைட்....

அண்ணாமலையான் said...

அட திவ்யாவ டிவில கூப்டுருக்காக.... (போன பதிவ பாத்துட்டுமா?)

ப்ரியமுடன் வசந்த் said...

நல்லாருக்குங்க...!

கண்ணா.. said...

//திருமணங்களை நிச்சயித்துக்

கொண்டுதானிருக்கிறார்கள்..

நமக்கும் எப்போது?//

அதான் ஹரியோட கல்யாணம் முடிஞ்சுதுல்ல...

ஓ...இது கல்யாணத்துக்கு முன்ன எழுதினதா..??


நடத்துங்க....நடத்துங்க.....

:))

கலகலப்ரியா said...

நல்லா வந்திருக்கு திவ்யா...

Priya said...

நல்லா இருக்கு!
என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

ரிஷபன் said...

துண்டு துண்டாய் கல்கண்டு கவிதைகள்

புலவன் புலிகேசி said...

என்ன இத்தனை எழுதிட்டிஏங்க. தாமதத்திற்கு மன்னிக்கவும். மூன்று கவிதையும் நல்லா இருக்கு...

புலவன் புலிகேசி said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

சினிமா புலவன் said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

திவ்யாஹரி said...

"அட திவ்யாவ டிவில கூப்டுருக்காக.... (போன பதிவ பாத்துட்டுமா?)"

அந்த கம்பெனிக்கு விவரம் பத்தலைன்னு நெனக்கிறேன் அண்ணா.. நன்றி அண்ணா.. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

நன்றி வசந்த்.. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

ஆமாம் கண்ணா.. வருகைக்கு நன்றி.. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

நன்றி கலகலப்ரியா அக்கா.. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

நன்றி பிரியா.. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

நன்றி ரிஷபன்.. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

நேரம் கிடைக்கும் போது வாங்க புலவரே.. என்னை மாதிரி நீங்க எல்லாரும் என்ன வெட்டி ஆபீசரா? நன்றி புலவரே. உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

நன்றி சினிமா புலவரே.. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

Post a Comment