Saturday, January 23, 2010

நல்லது நினைத்தால்..


"எல்லாம் சரியாகிடும் மாலினி. எவ்ளோ நாள் இப்படியே இருப்பாங்க.. அவங்களுக்கே ஒரு நாள் மனசு மாறும் உன்னை நல்லா வச்சிப்பாங்க" என்று மாலினிக்கு ஆறுதல் சொல்லி கொண்டு இருந்தாள் காவியா. அவள் பதிலுக்கு எவ்வளவு தான்டி பொறுத்து போறது?

"என்ன தான் பிடிக்காத மருமகளா இருந்தா கூட குடிக்கிற காபியில கூடவா தண்ணி ஊத்தி தருவாங்க.. குடிச்சா தண்ணில சீனி போட்டு குடிக்கிற மாதிரியில்ல இருக்கு.. தாங்க முடியலடி.. நானும் பார்க்கிறேன். எவ்வளவு நாள் இப்படியே அதிகாரம் பண்ணுவாங்கன்னு.. உடம்புல தெம்பு இருக்குற வரைக்கும் தானே.. கொஞ்ச நாளுல எல்லாம் ஆடி அடங்குனதும், நான் தானே எல்லாம் பண்ணனும்.. பார்த்துக்கறத்துக்கு யார் இருக்கா? ஒரே பையன் தானே என புருஷன்.. அதுக்கப்புறம் இந்த கிழவிக்கு காபிக்கு பதிலா கழனி தண்ணி கூட கொடுக்காம காய போடுறேன் பாரு" என்று அழுது கொண்டே புலம்பினாள்.

அதுவரை அமைதியாக கேட்டு கொண்டு இருந்த காவியா சிரித்தாள்.. "என்னடி என் வேதனை உனக்கு சிரிப்பா இருக்கா? காதலிச்சி கல்யாணம் பண்ணதுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் எனக்கு.. ஏன் நீ கூட தான் காதலிச்சி கல்யாணம் பண்ணிகிட்ட. உன்னை உன் மாமியார் நல்லா வச்சிக்கல? எல்லாத்துக்கும் கொடுத்து வச்சிருக்கணும்.." என்று விசும்பினாள் மாலினி..

நான் அதுக்கு சிரிக்கலடி. நீ சொன்னத கேட்டு சிரிச்சேன்.. உன் மாமியார் செஞ்சதெல்லாம், நீயும் செஞ்சா உனக்கும் அவங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கு? அவங்களுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்னு நெனச்சிட்டு, நீ நல்லாபார்த்துகிட்டா அவங்க மனசு மாறி அதுக்கப்புறமாவது உன்னை வாழ்த்துவாங்கல்ல? அப்போவாவது அவங்க திருந்த ஒரு சந்தர்ப்பம் கொடுடி என்றாள்.. நீ எது செஞ்சாலும் ஏன்னு கேட்க ஆள் இல்லாத போது கூட அவங்கள, நல்லா வச்சிகிறது தான் அவங்களுக்கு சரியான பாடமா இருக்கும் என்றாள்..

அழுது கொண்டு இருந்தவள் நிறுத்தி "நீ சொல்ற மாதிரியே இருக்கேன் காவியா.. என்ன நடக்கணுமோ நடக்கட்டும். சரிடி, நான் கெளம்புறேன்டி, இவ்வளவு நேரம் எங்கே போனேன்னு அதுக்கு வேற திட்டுவாங்க" என்றாள். அதற்குள் காவியாவின் அத்தை "இரும்மா காபி கொண்டு வந்திருக்கேன். குடிச்சிட்டு போ என்றார். இருவரும் வாங்கி குடித்தனர்.

காவியா யாரும் அறியாமல் மனதிற்குள், "என் அத்தை இவ்வளவு நேரம் நான் பேசுனதை கேட்டிருப்பாரோ? சில சமயம் பிறர் பேசுவதை ஒட்டு கேட்பதும் கூட நல்லதாய் தான் முடியும் போல" என்று நினைத்தாள். ஏனெனில் இன்று தான், காவியாவும் நல்ல காப்பி குடிக்கிறாள்.

14 comments:

sathishsangkavi.blogspot.com said...

//"என் அத்தை இவ்வளவு நேரம் நான் பேசுனதை கேட்டிருப்பாரோ? சில சமயம் பிறர் பேசுவதை ஒட்டு கேட்பதும் கூட நல்லதாய் தான் முடியும் போல" //

கேட்டாலும் கேட்டு இருக்கலாம்....

க.பாலாசி said...

அடடா..கதை நல்லாருக்குங்க..

//காதலிச்சி கல்யாணம் பண்ணதுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் எனக்கு.//

என் ஆபிஸ்ல ஒரு பொண்ணு இப்டித்தான் இருக்காங்க.. உங்க கதையை படிக்கச்சொல்லனும்...

தொடருங்கள்...

க.பாலாசி said...

அப்பறம் இந்த டெம்ப்ளேட்ஸ்சும் சிம்பிளா...நல்லாருக்கு....

அண்ணாமலையான் said...

நல்ல கதை.. வாழ்த்துக்கள்...

திவ்யாஹரி said...

சங்கவி said ..
//கேட்டாலும் கேட்டு இருக்கலாம்//

கேட்டுட்டு தானே திருந்தி இருக்காங்க..
வருகைக்கும்.. கருத்துக்கும் நன்றி சங்கவி..

பாலாசி said..
//என் ஆபிஸ்ல ஒரு பொண்ணு இப்டித்தான் இருக்காங்க.. உங்க கதையை படிக்கச்சொல்லனும்...//
//அப்பறம் இந்த டெம்ப்ளேட்ஸ்சும் சிம்பிளா...நல்லாருக்கு..//

சொல்லுங்க நண்பா.. வருகைக்கும்.. கருத்துக்கும் நன்றி..
நண்பர் ஒருவர் கருப்பு கலர் கண்ணை உறுத்துவதாக சொன்னார்.. அதான் மாற்றினேன்.. நன்றி நண்பா..

திவ்யாஹரி said...

வருகைக்கும்.. கருத்துக்கும் நன்றி அண்ணா..

வெற்றி said...

இதுல நீங்க காவியாவா மாலினியா :)

ஸ்ரீராம். said...

காவ்யாவுக்கு ஒரே கல்லுல ரெண்டு மாங்காய். காவ்யாவை இதே மாதிரி மாலினி வீட்டுல பொய் சொல்லச் சொல்லி வசனத்தை திருப்பச் சொல்லுங்க...அவளும் நல்ல காபி குடிக்கத் தொடங்கட்டும்...!

ரிஷபன் said...

பில்டர் காபி சுடச் சுட குடிச்ச திருப்தி

kunthavai said...

கதை நல்லாயிருக்குங்க திவ்யா .

புலவன் புலிகேசி said...

கதை நல்லா இருக்குஇ. ஆனா இன்னும் சிரப்பா வித்யாசமா சொல்ல முயற்சி பன்னுங்க

angel said...

nice story

துபாய் ராஜா said...

வீட்டுக்கு வீடு வாசல்படி.

கடைசி ட்விஸ்ட் அருமை. கதைக்கேற்ற படம்.

வாழ்த்துக்கள்.

திவ்யாஹரி said...

வெற்றி, இது கதைப்பா.. நன்றி வெற்றி..
நல்லா தான் ஐடியா பண்றீங்க.. நன்றி ஸ்ரீராம்..
நன்றி ரிஷபன்..
நன்றி குந்தவை..
நன்றி புலிகேசி.. உங்ககிட்ட தான் ஐடியா கேட்க நினைத்தேன். ஆனா நீங்க ஆன்லைன் வரவே இல்லை..
நன்றி angel..
நன்றி துபாய் ராஜா..

Post a Comment