Sunday, January 24, 2010

இதுவரை நம் காதலில்..


நீயும் நானும்
ஒரே நிற உடையெனும்
எண்ணம்..

பேருந்தில்
நசுங்களில் நிற்க
வேண்டுமென்ற ஆசை..

ஒவ்வொரு கோவிலாகச்
சென்று பார்க்க வேண்டும்
என்ற ஆவல்..

உனைப் பார்க்க நானும்
எனைப் பார்க்க நீயும்
துடிக்க வேண்டுமென்ற
நம் நினைப்பு..

உன்னருகில் நானும்
என்னருகில் நீயும்
ஒருவர் பேசுவதை
மற்றவர் ரசிக்க
வேண்டுமென்ற
நம் ஆசை..

ஒரு தினம்.. ஒரே அறையில்..
ஒரு முறையேனும்
நீயென் மடியில் படுக்க
வேண்டுமென்ற
உன் ஆசையும்..

உன் மீது சாய்ந்து
நான் மெய் மறக்க
வேண்டுமென்ற
என் தாகமும்..

தியேட்டர்க்குச்
சென்று
படம் பார்க்க மறந்து நான்
உனை ரசிக்க.. நீயும்
எனை ரசிக்க..

இப்படி
எல்லாமுமே
நிறைவேறியது
நம் காதலில்..

கொஞ்சி மகிழ
உன் சாயலில் நானும்
என் சாயலில் நீயும்
கேட்ட
மழலை மட்டும்
இன்னும்
நிறைவேறா ஆசையுடன்..

23 comments:

திருவாரூர் சரவணா said...

ஜாலியான காதல் கவிதைன்னு நினைச்சு படிச்சா நிறைய தம்பதிகளோட ஏக்கத்தைப் பிரதிபலிக்கிற கவிதையாயிடுச்சே. சொல்ல வந்த விஷயத்தை நல்லாவே சொல்லியிருக்கீங்க.

sathishsangkavi.blogspot.com said...

//கொஞ்சி மகிழ
உன் சாயலில் நானும்
என் சாயலில் நீயும்
கேட்ட
மழலை மட்டும்
இன்னும்
நிறைவேறா ஆசையுடன்..//

ஆமாங்க நிறைபேர்களின் ஏக்கம் உங்கள் கவிதையில்...

அண்ணாமலையான் said...

சீக்ரக புத்ரஹ ப்ராப்திரஸ்து... மழலைக்குரல் மனையில் கேட்கும் நேரம் வந்துவிட்டது.. சந்தோஷமா...

- இரவீ - said...

வாழ்த்துகள்!

வெற்றி said...

நல்லா இருக்கு..இதுல கடைசி பத்தி தவிர எல்லாத்தையும் நானும் உணர்ந்திருக்கிறேன்..

//கடைசி பத்தி தவிர //

ஏன்னா எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை.. :)))

வேலன். said...

தியேட்டர்க்குச்
சென்று
படம் பார்க்க மறந்து நான்
உனை ரசிக்க.. நீயும்
எனை ரசிக்க.//

நிறைய பேர் இப்படிதான் மெய்மறந்துவிடுகின்றனர்..
அருமையான கவிதை நண்பரே..

வாழ்த்துக்கள்
வாழ்கவளமுடன்,
வேலன்.

நட்புடன் ஜமால் said...

கவிதையாக இருக்கும் பட்ச்சத்தில் வலிகள் சொல்லும் அழகு வரிகள்

உண்மை எனும் பட்ச்சத்தில் எமது பிரார்த்தனைகள்.

ப்ரியமுடன் வசந்த் said...

//நட்புடன் ஜமால் said...
கவிதையாக இருக்கும் பட்ச்சத்தில் வலிகள் சொல்லும் அழகு வரிகள்

உண்மை எனும் பட்ச்சத்தில் எமது பிரார்த்தனைகள்.//

அண்ணா சொன்னதுதான்...!

ஸ்ரீராம். said...

ரசனையான் நினைவுகள்.... கடைசி வரி ஏக்கம் சீக்கிரமே தீர எங்கள் பிரார்த்தனையும்...

ரிஷபன் said...

கேட்ட வரம் தரும் கவிதை...

NAZAR said...

ஆறுமை நன்றாக இரூக்கிறது

சிவாஜி சங்கர் said...

கால தச்சன் ஆக்டோபஸ் கரம் சேர்க்கும் நல்முத்தை பரிசளிப்பான்.. உம் வெற்று திண்ணைகள் சொப்புகள் ரொப்பும்.. :)

கண்ணா.. said...

நல்ல கவிதை

கேட்ட வரம் விரைவில் கிடைக்க பிரார்த்தனையுடன் வாழ்த்துக்கள்.

க.பாலாசி said...

நண்பர் சங்கவி சொன்னதுபோல பலரின் பிரச்சனை இது. இதையே ஏன் எதிர்பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை.

நல்ல கவிதை.. தாக்கம் புதுமை...

Priya said...

உங்க‌ ஆசை சீக்கிர‌த்தில் நிறைவேறிட‌ என் பிராத்த‌னையில் நிச்ச‌ய‌ம் வேண்டிக்கொள்வேன்!

ஹேமா said...

காதல்,ஆசை,ஏக்கமாய் இருக்கிறது கவிதை.

Paleo God said...

அம்மா..மொதல்ல கவலைய விடுங்க..மகிழ்சியா இருங்க..எல்லாம் சரியாகும்.

திவ்யாஹரி said...

சரண் said..
//ஜாலியான காதல் கவிதைன்னு நினைச்சு படிச்சா நிறைய தம்பதிகளோட ஏக்கத்தைப் பிரதிபலிக்கிற கவிதையாயிடுச்சே//
ஜாலியா தாங்க எழுத ஆரம்பிச்சேன்.. எல்லாமே நிறைவேறியதுன்னு எழுத நினைக்கும் பொது மனம் மாறி விட்டது.. அதான்.. நன்றி சரண்..

சங்கவி said..
//நிறைபேர்களின் ஏக்கம் உங்கள் கவிதையில்..//
நன்றி சங்கவி..

அண்ணாமலையான் said..
//சீக்ரக புத்ரஹ ப்ராப்திரஸ்து... மழலைக்குரல் மனையில் கேட்கும் நேரம் வந்துவிட்டது.. சந்தோஷமா//
அண்ணா நீங்க சொன்னதே, நடந்தது மாதிரி சந்தோஷமா இருக்கு அண்ணா.. நன்றி அண்ணா.

நன்றி ரவி..

வெற்றி said..
//இதுல கடைசி பத்தி தவிர எல்லாத்தையும் நானும் உணர்ந்திருக்கிறேன்//
கல்யாணம் ஆகியும் உணர வேண்டாம் வெற்றி.. உணரும் முன்னரே குழந்தை பிறக்க வாழ்த்துக்கள்.. நன்றி வெற்றி.

வேலன் said..
//அருமையான கவிதை நண்பரே..//
நான் நண்பர் இல்ல. தோழி சார்.. நன்றி வேலன்.

நட்புடன் ஜமால் said..
//கவிதையாக இருக்கும் பட்ச்சத்தில் வலிகள் சொல்லும் அழகு வரிகள்
உண்மை எனும் பட்ச்சத்தில் எமது பிரார்த்தனைகள்.//
நன்றி நண்பரே..

ப்ரியமுடன் வசந்த் said..
//அண்ணா சொன்னதுதான்...!//
நன்றி வசந்த்..

ஸ்ரீராம் said..
//கடைசி வரி ஏக்கம் சீக்கிரமே தீர எங்கள் பிரார்த்தனையும்.//
நன்றி ஸ்ரீராம்..

நன்றி ரிஷபன்..
நன்றி நாசர்..
நன்றி சிவாஜி சங்கர்..
நன்றி கண்ணா..

பாலாசி said..
//இதையே ஏன் எதிர்பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை//
சுற்றி இருப்பவர்கள் அதையே கேட்டு இம்சிப்பதால்.. நன்றி நண்பா..

நன்றி பிரியா..
நன்றி ஹேமா..

பலாபட்டரை said..
//அம்மா..மொதல்ல கவலைய விடுங்க..மகிழ்சியா இருங்க..எல்லாம் சரியாகும்.//
சரிங்க அண்ணா.. நன்றி அண்ணா..

kunthavai said...

கவிதை நல்லாயிருக்கு....
கவலை நல்லாயில்ல...
கண்டிப்பா எல்லாம் நல்லபடியா நடக்கும்.

புலவன் புலிகேசி said...

அழகான காதல் கவிதை..கவலை தோய்ந்து..

துபாய் ராஜா said...

இனிமையான நினைவுகள் போல
இன்பமான நிகழ்வுகள் தொடர்ந்திட வாழ்த்துக்கள்.

திவ்யாஹரி said...

நன்றி குந்தவை..
நன்றி புலிகேசி..
நன்றி துபாய் ராஜா..

பித்தனின் வாக்கு said...

ஹா ஹா இந்தக் கவிதைக்கு காட்டமா பின்னூட்டம் போடலாம்ன்னு படிச்ச கடைசி வரிகளில் உன் ஆசையை வெளிப்படுத்திவிட்டாய். கவலைப்படாதே அந்த அய்யப்பன் உன் வேண்டுகோளை நிச்சயம் நிறைவேற்றுவார். விரைவில் ஒரு குட்டி திவ்யா வருவாள். நன்றி.

Post a Comment