உன் இதழ் மலர்ந்து கேட்கும் கேள்விக்கு
பதில் சொல்லக் காத்திருக்கும் அந்நேரம்..
உன் கண் பார்த்து என் கண் வெட்கப்பட
காத்திருக்கும் அந்நேரம்..
உன் செவிகள் நான் பேசுவதை கேட்காதோ
எனக் காத்திருக்கும் அந்நேரம்..
உன் சுவாசம் என் சுவாசத்தில் கலந்து எனை
இன்பப் படுத்தாதோ எனக் காத்திருக்கும் அந்நேரம்..
உன் கைகள் என் கன்னத்தில் காயம் செய்யாதோ
எனக் காத்திருக்கும் அந்நேரம்..
மட்டுமே.. நான் உன்னை
வெறுக்கிறேன்.. ஏனெனில்,
நான் இவ்வாறு ஏங்கும் வரை நீ
எனை விடுத்து தனித்திருக்கிறாயே என்று!!!..
21 comments:
வேலைக்காவது போக விடுறீங்களா இல்லியா?
அச்சோ...!
சீரியசா எடுத்துட்டுவந்து கடைசியில சீரியசாவே சீரியஸ் ஆக்கிட்டிங்க....
அடடா அடடா !
மொத்தத்தில் அடிமை தான். அய்யோ பாவம் அவர்.
வழமை போல் நண்று
ரொம்ப நல்லா இருக்கு
கவிதை அருமை தோழி.
:):) :)
"அணுதினமும் உனையே நினைத்துக் கொண்டிருக்கும் எனக்கு உன் மீது வெறுப்பு வரவைக்கின்றது உன் வரவுக்காக நான் காத்திருக்கும் அந்த கணம்"
அருமை தோழி
தொடருங்கள் வாழ்த்துக்கள்
அருமையான கவிதை வாழ்த்துக்கள்
ஆ...ஹா....சுகமான வெறுப்புதான்..
ஆகா கொன்னுட்ட திவ்யாஹரி. நல்ல காதலின் அடையாளம் பிரிவின் போதுதான் தெரியும். பிரிவுக்குப் பின்னர் வரும் கூடலில்தன் இறுக்கம் இருக்கும் என்பதை சொல்லாமல் சொல்கின்றது கவிதை. மிக நேர்த்தி நன்றி.
// வேலைக்காவது போக விடுறீங்களா இல்லியா //
// மொத்தத்தில் அடிமை தான். அய்யோ பாவம் அவர். //
ரீப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய் நன்றி.
நல்ல கவிதை... தொடருங்கள்...
எல்லாவற்றிலும் பெண் தான் முதல் என காத்திருந்திருப்பாரோ என்னவோ...
நன்றி அண்ணா.. போய் தான் ஆகணும் அண்ணா.. வேற வழி இல்லையாம் சொல்றாங்க..
வசந்த்.. சீரியசா நன்றிங்க..
நன்றி வெற்றி.. என்ன ஆச்சி? எங்கயோ கேட்ட மாதிரி இருக்கா?
நன்றி ஜெய்லானி. எதை வச்சி அடிமைன்னு சொல்றீங்க? பாசமா இருந்தா அடிமையா?
நன்றி புலிகேசி..
நன்றி maharajan..
நன்றி கண்ணா..
நன்றி சிவாஜி சங்கர்..
நன்றி சம்யுக்தா.. உங்கள் கவிதை அருமை..
நன்றி நான்ரசித்த..
நன்றி ஸ்ரீராம்..
நன்றி அண்ணா.. நீங்களுமா?
நன்றி பாலாசி..
நன்றி தர்மா..
உங்கள் கோபத்தையும் ரசிக்க இன்னும் என்னென்னவோ செய்யலாம்
ஹா..ஹா..ஹா.. நன்றி sugunthan..
அழகாக இருக்கு கவிதை வரிகள்
Mrs.Faizakader said...
அழகாக இருக்கு கவிதை வரிகள்
நன்றி நண்பா..
alagana varikal arumaiyana varthaikal
Post a Comment