Thursday, February 4, 2010

சுனாமிக்கு பிறகு..


பேனா பிடிக்க தெரியாத வயதில்
கிறுக்கியதை அழகு என்றாய்..

அ, ஆ எழுத தொடங்கும் வயதில்
கிறுக்கியதை ஓவியம் என்றாய்..

நான் ஒன்று நினைக்க
அது ஒன்றாக முடிந்த
வார்த்தைகளை கவிதை என்றாய்..

கிறுக்கிய கிறுக்கல் முதல்..
நேற்று வரைந்த ஓவியம் வரை..

பொக்கிஷமாய் பத்திரப்படுத்திய
அனைத்தும் உன்னால் என்னுடன்..

சந்தோஷமாய் இருக்க நினைத்து போன
கடற்கரை கூட முன்போல் உள்ளது
சுனாமிக்கு பிறகு..

உன் நினைவுளை மட்டும்
தந்துவிட்டு நீ எங்கு சென்றாய் என் அம்மா..

(பி.கு) அந்த புகைப்படம் பார்த்ததும் தோன்றியது. அவ்வளவே..

8 comments:

மதுரை சரவணன் said...

naala pathivu. sunaami suruttiyathu ammavai mattumaala ...ellaame thaan . aanaal manithanal erpatum intha iyarkai seerraththai thatukka enru maaruvaano manithan.

ப்ரியமுடன் வசந்த் said...

அழகா தூங்குறால்ல....

இப்படி ஒரு தூக்கம் வேண்டிய இரவின் தூக்கம் கலைக்கும் கவிதை....

அண்ணாமலையான் said...

நானும் தூக்க கலக்கத்துலே பின்னூட்டம் போட்டுட்டேன்...

vasu balaji said...

good one

goma said...

கூடவே வந்த அவள்
கூட இருக்க வேண்டிய சமயம் எங்கே போனாள்.
[உங்கள் கவிதை வாசித்ததும் எழுதத் தூண்டியது .அவ்வளவே]

பித்தனின் வாக்கு said...

நல்ல கவிதை, நல்ல கற்பனை. வாழ்த்துக்கள். வளருங்கள்.

எதோ அந்தப் பொண்ணு நிம்மதியா தூங்க நினைத்தால் விடமாட்டீர்கள் போல. ஹி ஹி ஹீ (நீங்க மட்டும்தான் சிரிப்பீர்களா. பழிக்குப் பழி, ஹா ஹா ஹா (இதை கொஞ்சம் பி எஸ் வீரப்பா ஸ்டைலில் சிரிக்கவும்).

Chitra said...

ம்ம்ம்ம்...... நல்ல கவிதை. அழகான புகைப்படம், ஒவ்வொரு மனதிலும் பட்டு வரும் போது, எப்படி வித்தியாச உணர்வுகளை வெளிப்படுத்துது.

திவ்யாஹரி said...

நன்றி சரவணன்..
நன்றி வசந்த்..
நன்றி அண்ணா.. (நானும் தூக்க கலக்கத்துலேயே நன்றி சொல்லிட்டேன் அண்ணா..)
நன்றி வானம்பாடிகள் அய்யா..
நன்றி கோமா..
நன்றி பித்தன் அண்ணா.. உங்க ஸ்டைல் ஹி..ஹி..ஹியே நல்லா இருக்கு அண்ணா.. பி.எஸ் வீரப்பா வேற எதுக்கு..?
நன்றி சிவாஜி சங்கர் :)
நன்றி சித்ரா.. ஒரே படம்.. பல கருத்துக்கள்.. ஆமாம் அக்கா..

Post a Comment