Saturday, February 6, 2010
இயலாமை..
ஆசிரியரின் கேள்விக்கு
பதில் தெரிந்தாலும்
சொல்ல விடாமல்
"சார் பொண்ணு மக்கு" என
கேலி செய்யும் ஆசிரியரை
"உங்கள் பெண் எப்படி?" என்று
கேட்க நினைத்தாலும் அழுவதை தவிர
எதுவும் செய்ய இயலவில்லை..
பழகிய தோழி பொய் சொல்லி
என்னிடம் அன்பளிப்பு பெற்றது
தெரிந்தும் சந்தோஷமே பட்ட நான்..
அதை அவள் இன்னொருத்திக்கு
பரிசளித்ததை அறிந்ததும்
துடிப்பதை தவிர
எதுவும் செய்ய இயலவில்லை..
பழகிய நண்பன் ஆறுதலாய்
இல்லாமல், காதல் என்று சொல்லி
கஷ்டப் படுத்தும் போதும்..
வேண்டாமென சொல்லி
மறுத்தாலும் மாறாத அவன்
காதலைச் சொல்லி இம்சிக்கும்
தோழியின் நட்பை இழப்பதை தவிர
எதுவும் செய்ய இயலவில்லை..
அத்தை வெளி வேஷமிட்டு
பல கஷ்டம் கொடுத்தாலும்
அன்புக் கணவனை
கொடுத்ததுக்காக அனைத்தும்
சகித்துக் கொள்வதை தவிர
எதுவும் செய்ய இயலவில்லை..
கொட்டிக்கொண்டே இருந்தால்
தலை தூக்கும் புழு போல
இன்று தலை நிமிர்ந்தேன்
அத்தையிடம்..
ஒரு கேள்வியே கேட்டு
வந்தாலும் பழக்க தோஷமோ
என்னவோ இப்போதும்
கண்ணீரே வருகிறது..
பெண்ணின் சுதந்திரம் வேண்டி
ஆண்களே போராட முன் வந்தாலும்
பெண்ணுக்கு எதிரி பெண்ணே..
கண்ணீருடன்..
(பி.கு) இது என் தோழியின் புலம்பல்..
Subscribe to:
Post Comments (Atom)
24 comments:
தோழியை ஆறுதல் படுத்துங்கள்..
கடக்கவேண்டிய தொலைவுகளில் அவரது பயணம் இனிமையாக அமையட்டும்...
கடேசி வரில தப்பிச்சுட்டீங்களா?
//பெண்ணின் சுதந்திரம் வேண்டி
ஆண்களே போராட முன் வந்தாலும்
பெண்ணுக்கு எதிரி பெண்ணே..//
இது தாங்க காலம் காலமா நடக்குது...
எங்கேயும் மாமியார் கொடுமை தான் இருக்கும் மாமனார் கொடுமை கேள்விப்பட்டது இல்லை....
கொஞ்ச நாள்ல சரியாப்போயிடும்னு சொல்லுங்க தோழிகிட்ட.
நிறைய பெண்களின் புலம்பல்கள்..:))
பெண்ணுக்கு எதிரி பெண்ணே..
கண்ணீருடன்..//
சொன்னதும் ஒரு பெண்ணே ..:)
ரைட்டு மா..
சுதந்திரம் என்பது என்ன என்ற தெளிவு கிடைத்திட்டால் இயலாமை இல்லாமை ஆயிடும்.
பெண்ணுக்கு சுதந்திரம் வேண்டுமென்பதே பெரும்பாலான இடங்களில் பெண்களிடமிருந்துதான்.
வேதனை தரும் கவிதை.
பெண்ணின் சுதந்திரம் வேண்டி
ஆண்களே போராட முன் வந்தாலும்
பெண்ணுக்கு எதிரி பெண்ணே..
கண்ணீருடன்..
பெண்ணுக்கு கண்ணீர் தான் முதல் எதிரி
புலம்பல்களிடமிருந்து புலம் பெயரச் சொல்லுங்கள் உங்கள் தோழியை..
வாழ்க்கை வாழ்வதற்கே.
//பெண்ணின் சுதந்திரம் வேண்டி
ஆண்களே போராட முன் வந்தாலும்
பெண்ணுக்கு எதிரி பெண்ணே..//
உண்மை தோழி. நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
இவ்வளவு கசப்பான அனுபவங்களை பகிர்ந்த தோழியிடம் உங்களுக்குள் உள்ள நல்ல அனுபவங்களை சொல்லி தேற்றுங்கள்.
///கொட்டிக்கொண்டே இருந்தால்
தலை தூக்கும் புழு போல///
பெண்களுக்கு இந்த ஒரு வரிப்போதுமே விழித்துக்கொள்ள. தனியாக எதற்கு ஆறுதல் தேவை.
அவரவர் இயல்பு படி அவரவர் இருந்து விட்டு போகட்டும். அனுபவமாக எடுத்து கொள்ளுங்கள். ஒரு இடுகை எழுத உதவியதே
முன்னெச்சிரிக்கையாக கடைசி வரி போல..... இது கூட ஒரு விதத்தில், உங்கள் கவிதையின் பொருளை உடைப்பதாக உள்ளது.
யாராகிலும், காலம் தான் மருந்து.!
நல்ல அர்ததமுள்ள கவிதை!!
தோழிக்கு இப்போ தேவை அறிவுரையல்ல அன்பும் அரவணைப்பும் அதை கொடுத்திடுங்கள்...
alukai anbathu iyalaamai alla. aluthaalum urimaikku poratuvathaal thappillai. mamiyaarai ammavaaka ninaithu porungkal , kavalai illai. pennukku pen adimai enbathau thaan iyalaamai. marri yosingka.
காலம் மாறிட, கவலைகள் குறைந்திட தோழிக்கு ஆறுதல்கள்.
பெண்ணின் சுதந்திரம் வேண்டி
ஆண்களே போராட முன் வந்தாலும்
பெண்ணுக்கு எதிரி பெண்ணே..
கண்ணீருடன்..
.................அந்த எதிரியை எதிர்ப்பதற்கு, கண்ணீர் ஆயுதம் இல்லை - அது அடிமையின் விலங்கு.
//(பி.கு) இது என் தோழியின் புலம்பல்.//
அதானப் பாத்தேன்..பதறி போய்ட்டேன்...
//ஆசிரியரின் கேள்விக்கு
பதில் தெரிந்தாலும்
சொல்ல விடாமல்
"சார் பொண்ணு மக்கு" என
கேலி செய்யும் ஆசிரியரை
"உங்கள் பெண் எப்படி?" என்று
கேட்க நினைத்தாலும் அழுவதை தவிர
எதுவும் செய்ய இயலவில்லை//
எனக்கும் அடிக்கடி இப்பிடி நடந்திருக்கு...ஆனா எனக்கு பதில் தெரியாததால் அழுகை வரலை.. :))
அவ்வ்வ்வ்..... முடியல.... நெஜமாவே ரொம்பவே பீல் பண்ணிட்டேன்.... ச்ச.... பாவங்க உங்க தோழி.... கவிதை ரொம்ப ஆழமான வலிகள் கொண்டதா இருக்கு.... அவர்கள் காயங்கள் ஆற என் பிரார்த்தனைகள்....
பழக்க தோஷமோ
என்னவோ இப்போதும்
கண்ணீரே வருகிறது..
மனசுக்குள்ள உறுதி வளர்த்துக் கொள்ள வேண்டும்.. கண்ணீர் வரலாம்.. அது இயல்பு. துடைத்தெறிந்து நடப்பதே சாலச் சிறந்தது..
இது எல்லாம் வாழ்க்கையில் சகஜம் அம்மா. பின்னாளில் அந்த அத்தையும் தோழியிடம் தான் அடைக்கலம் ஆகவேண்டும். முடிந்த வரை அனுசரிக்கச் சொல்லுங்கள். காலத்திற்க்கு எல்லாவற்றையும் மாற்றும் சக்தியுள்ளது. நன்றி திவ்யா.
நன்றி பாலாசி.. சொல்றேன்..
நன்றி சிவாஜி.. :)
நன்றி அண்ணா.. ஹி ஹி ஹி..
நன்றி சங்கவி.. சில இடங்களில் அதுவும் உள்ளது.. ஆனா மாமியார் தான் topல இருக்காங்க..
நன்றி சின்ன அம்மிணி.. சொல்றேங்க..
நன்றி அண்ணா..
நன்றி ஜமால் அண்ணா.. என்னனு கொஞ்சம் கொஞ்சமா இப்போ 1 வாரமா புரியுது அண்ணா.. தோழிக்கு..
நன்றி நவாஸுதீன்..
நன்றி தமிழரசி.. ஆமாம் தோழி..
நன்றி ஸ்ரீராம் சொல்றேங்க..
நன்றி குமார்..
நன்றி நாடோடி.. சரிங்க..
நன்றி ஜெய்லானி.. அட ஆமாங்க..
நன்றி தமிழ் உதயம்..
நன்றி பிள்ளையாண்டான்.. :) ..
நன்றி வசந்த்.. உங்களின் இந்த பின்னூட்டங்களே தோழிக்கு போதுமான ஆறுதல்கள் தான்..
நன்றி மதுரை சரவணன்.. என் தோழி அம்மாவாக மாமியாரை நினைத்ததாலேயே 3 வருடம் வரை அடங்கி இருந்தாள்..
நன்றி துபாய் ராஜா..
நன்றி சித்ரா அக்கா..
நன்றி புலிகேசி நண்பா :)..
நன்றி கண்ணா.. ஹா.. ஹா..ஹா.. சார் பையனா நீங்களும்?
நன்றி அன்பு தோழன்.. கவலை படாதீங்க.. கேட்ட ஒரு கேள்விக்கு நல்லாவே பலன் இருந்துச்சி..
நன்றி ரிஷபன்..
நன்றி பித்தன் அண்ணா..
நண்பர்களே.. உங்கள் பிரார்த்தனைகள் பலித்து இப்போது கொஞ்சம் நலமாக இருக்கிறாள் தோழி..
Post a Comment