Sunday, February 14, 2010

என் காதல்..


காதல் சொன்னதும்..
காதல் செய்ததும்..
திருமணம் நடந்ததும்..
காதலில் வாழ்வதும்..
மட்டும் போதுமென்று
நான் நினைக்கவில்லை..

உனக்கு முன் இறந்து
என் நினைவில்
நீ துடிக்கவும் விருப்பமில்லை..

உனக்கு பின் இருந்து
உன் நினைவில்
நான் தவிக்கவும் விருப்பமில்லை..

இயற்கை துணையிருந்தால்
இருவரும் மரணத்திலும்
சேர்ந்திருக்கவே வேண்டுகிறேன்..
சுயநலமாய் இருந்தாலும்!!!..



அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்..
காதலர் தினத்துக்காக எழுதவில்லை.
என் ஹரிக்காக..
உங்கள் தோழி - திவ்யாஹரி..

30 comments:

அண்ணாமலையான் said...

ஏங்க உங்க ஹரிக்காகன்னா ஏன் பப்ளிஷ் பண்ணீங்க? கைல கொடுக்க வேண்டியதுதானே? எந்த காதலர்களும், தம்பதிகளும் காதல் கடிதங்கள, இன்ன பிற சமாச்சாரங்கள பொதுல வைக்க மாட்டாங்க.... (நான் அப்டிதான் நெனைக்கிறேன்)

ஜெய்லானி said...

///உனக்கு முன் இறந்து
என் நினைவில்
நீ துடிக்கவும் விருப்பமில்லை..
உனக்கு பின் இருந்து
உன் நினைவில்
நான் தவிக்கவும் விருப்பமில்லை..////

இதுக்கு என்ன பதில் சொல்ல தெரியல
((குழந்தைகள் கதி ???????????))

வெற்றி said...

அருமை..உண்மையான காதலின் பிரதிபலிப்பு..காதலர் தின வாழ்த்துக்கள் :)

நாடோடி said...

உங்களுக்கும் உங்கள் ஹரிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்..

கலகன் said...

//இயற்கை துணையிருந்தால்
இருவரும் மரணத்திலும்
சேர்ந்திருக்கவே வேண்டுகிறேன்..//

புதிய சிந்தனை...

ஸ்ரீராம். said...

இருவரும் நூறாண்டுக்கு மேல் இணைந்து வாழ வாழ்த்துக்கள்.

சைவகொத்துப்பரோட்டா said...

அட! இந்த சுய நலம் கூட நன்றாக இருக்கிறது, வாழ்த்துக்கள்.

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துக்கள்..!

Chitra said...

உனக்கு முன் இறந்து
என் நினைவில்
நீ துடிக்கவும் விருப்பமில்லை..

உனக்கு பின் இருந்து
உன் நினைவில்
நான் தவிக்கவும் விருப்பமில்லை..

இயற்கை துணையிருந்தால்
இருவரும் மரணத்திலும்
சேர்ந்திருக்கவே வேண்டுகிறேன்..


........... so sweet! HAPPY VALENTINE'S DAY!

கண்ணா.. said...

//இயற்கை துணையிருந்தால்
இருவரும் மரணத்திலும்
சேர்ந்திருக்கவே வேண்டுகிறேன்..
சுயநலமாய் இருந்தாலும்!!!..//

அருமை...அருமை.....பிச்சு உதறீட்டீங்க...

உங்களுக்கும், உங்கள் ஹரிக்கும் காதலர்தின வாழ்த்துக்கள்

S Maharajan said...

இயற்கை துணையிருந்தால்
இருவரும் மரணத்திலும்
சேர்ந்திருக்கவே வேண்டுகிறேன்..
சுயநலமாய் இருந்தாலும்!!!..

அற்புதமான வரிகள் தோழி!
ஹரி ரொம்ப கொடுத்து வைத்தவர்.

க.பாலாசி said...

நல்லா எழுதியிருக்கீங்க... படமும் மிக பொருத்தம்... வாழ்த்துக்கள்...

ரிஷபன் said...

படம் மனசைப் படுத்துது.. கவிதையின் வரிகளோ மனசை அள்ளுது..

butterfly Surya said...

கவிதை நன்று.

வாழ்த்துகள் திவ்யா + ஹரி

கமலேஷ் said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு...படம் ரொம்ப திகிலா இருக்கு...வாழ்த்துக்கள்..தொடருங்கள்...

Anonymous said...

இயற்கை துணையிருந்தால்
இருவரும் மரணத்திலும்
சேர்ந்திருக்கவே வேண்டுகிறேன்..
சுயநலமாய் இருந்தாலும்!!!..

இது காதல் மனம் என்பதில் ஐயமில்லை
அவனுக்கு முன் மரணிக்க நினைப்பது மரணித்தாலும் நம் நினைவோடு வாழ்வார் என்ற நம்பிக்கை

படம் மனசை வலிக்கச் செய்கிறது...கவிதை உள்ளதை பேசியது...

திவ்யாஹரி said...

நன்றி வசந்த்.. காதலர் தின வாழ்த்துக்கள் வசந்த்..
நன்றி வெற்றி.. உங்க பின்னூட்டம் வரல.. காணும்.. sorry நண்பா ..
நன்றி சித்ரா.. உங்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்..
நன்றி கண்ணா.. உங்களுக்கும் எங்களின் (திவ்யா and ஹரி) காதலர் தின வாழ்த்துக்கள்..
நன்றி மகாராஜன்.. காதலர் தின வாழ்த்துக்கள் நண்பா..
நன்றி பாலாசி.. காதலர் தின வாழ்த்துக்கள் நண்பா..

ரிஷபன் said..
//படம் மனசை படுத்துது.. கவிதையின்
வரிகளோ மனசை அள்ளுது..//

"உங்கள் பின்னூட்டம் அனைத்தையும் சொல்லுது" நண்பா.. நன்றி ரிஷபன்.. காதலர் தின வாழ்த்துக்கள்.

நன்றி butterfly surya.. உங்களுக்கும் எங்களின் (திவ்யாஹரி) காதலர் தின வாழ்த்துக்கள்..
நன்றி கமலேஷ்.. படம் திகிலா இருந்தாலும் அதுல அவங்களின் காதல் தெரியுது தானே நண்பா?

தமிழரசி said..
//அவருக்கு முன் மரணிக்க நினைப்பது மரணித்தாலும் நம் நினைவோடு வாழ்வார் என்ற நம்பிக்கை//
அப்போ கூட கஷ்ட படக்கூடாதுன்னு நெனக்கிறேன் தோழி.. ஆறுதல் சொல்ல ஆளின்றி தவிப்பதை நான் விரும்பவில்லை. நன்றி..

டவுசர் பாண்டி said...

வந்தாச்சி , வந்தாச்சி உங்க ஏரியா பக்கம் மொத தபா வந்து கீரேன், உங்களோட சுனாமிக்கி பிறகு ...
படிச்சி ஒரு நிமிஷம் ஆடிப் பூட்டேம்பா !! நல்ல மேட்டர், அழகா அத சொல்லி இருக்கீங்க !!
தொடரட்டும் தங்கச்சி , உங்க கவிதைகள் , நனையட்டும் பதிவுலகம் . - அன்புடன் டவுடர் பாண்டி .

திவ்யாஹரி said...

//அண்ணாமலையான் said...

ஏங்க உங்க ஹரிக்காகன்னா ஏன் பப்ளிஷ் பண்ணீங்க? கைல கொடுக்க வேண்டியதுதானே? எந்த காதலர்களும், தம்பதிகளும் காதல் கடிதங்கள, இன்ன பிற சமாச்சாரங்கள பொதுல வைக்க மாட்டாங்க.... (நான் அப்டிதான் நெனைக்கிறேன்)//

ஒரு கணவன் மனைவிகிட்ட நடந்துக்குற (ரொம்ப sensitive ஆன) விஷயங்கள் கூட publish பண்றாங்க.. அதுக்கு நீங்களும் கமெண்ட் பண்ணிருக்கீங்க.. நான் just வாழும் போதும், சாகும் போதும் ஒண்ணா இருக்கணும்னு எழுதுனது தப்பா அண்ணா? இங்கே நான் எழுதி இருப்பது காதல் கடிதமோ, இல்ல இன்ன பிற சமாச்சாரங்களோ இல்ல.. வெறும் ஆசை தான்.. காதலர் தினத்துக்காக எழுதுனதானு நண்பர்கள் கேட்பார்களேன்னு தான் ஹரிக்காகன்னு எழுதுனேன்.. என்னோட personal என்றால் அதை டைரியில் எழுதனும்னு எனக்கும் தெரியும் அண்ணா..

திவ்யாஹரி said...

ஜெய்லானி said...

இதுக்கு என்ன பதில் சொல்ல தெரியல
((குழந்தைகள் கதி ???????????))
எனக்கு குழந்தை இல்லைங்க.. இருந்திருந்தால் இப்படி நினைக்க மாட்டேன்னு தான் தோணுது..

திவ்யாஹரி said...

நன்றி வெற்றி.. இப்போதான் கண்டு பிடிச்சேன் எங்க போச்சி உங்க comment -ன்னு..

திவ்யாஹரி said...

நன்றி நாடோடி.. உங்களுக்கும் எங்களின் காதலர் தின வாழ்த்துக்கள்..

திவ்யாஹரி said...

நன்றி தர்மா.. காதலர் தின வாழ்த்துக்கள்..

திவ்யாஹரி said...

நன்றி ஸ்ரீராம்..உங்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்..

நன்றி சைவகொத்துப்பரோட்டா..காதலர் தின வாழ்த்துக்கள்..

Unknown said...

நியாயமான ஆசை தான் வழ்த்துக்கள்

தாராபுரத்தான் said...

பத்து வயதுவரை தான் அம்மாவின் அரவணைப்பு. இப்பவெல்லாம் குளிக்கனுமுன்னா கூட இருந்தாத்தான் குளிக்கவே முடியுது.சாப்பாடு போட்டாத்தான் சாப்படவே முடியுது.உனக்கு முன் இறந்து....எங்களைப் போன்றவர்கள் வேண்டுவது அதுதான்.
.

'பரிவை' சே.குமார் said...

காதலை இருவருக்குள்ளும் சொல்லுங்கள்..! பொதுவில் சொல்லாதீர்கள்.. நல் ஆயுளுடன் குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள்.

திவ்யாஹரி said...

நன்றி பேநா மூடி
நன்றி தாராபுரத்தான் அய்யா..படிக்கிற சில பேர் எதற்கு சொன்னேன் என்று பார்க்காமல், என்ன தப்பா சொன்னேன்னு தான் முதலில் பார்க்கிறார்கள்.. வருத்தமாக இருக்கிறது.. புரிந்து கொண்டமைக்கு நன்றி அய்யா..
நன்றி சே.குமார்

வெற்றி said...

//காதலர் தினத்துக்காக எழுதவில்லை.
என் ஹரிக்காக..//

காதலர் தினத்துக்காக ஸ்பெஷலாக எழுதவில்லை..என்றும் காதலிக்கும் அவருக்காக எழுதியிருக்கிறேன் என்று சொல்லுகிறார்..எப்பொழுதும் காதலித்துக் கொண்டிருக்கிறோம் என்ற தொனியில் சொல்லியிருக்கிறார்..

ஏம்பா பின்னூட்டத்துல கேள்வி கேட்டவங்களுக்கு எல்லாம் இந்த மாதிரி சபீனா போட்டு விளக்குனாதான் புரியுமா :))

திவ்யாஹரி said...

ரொம்ப நன்றி வெற்றி.. சரியாய் புரிஞ்சிகிட்டதுக்கும், எனக்கு ஆறுதல் சொல்லும் விதத்திலும் அமைந்த உங்க பின்னூட்டத்திற்கு..

Post a Comment