Tuesday, February 23, 2010

யாரோ யாருக்காகவோ -2


எனைமறந்து வேலைகளில்
ஈடுபடும் பொழுது சத்தமே இல்லாமல்
மெதுவாக வந்து எனைச் சுமப்பாய்..

கெஞ்சலில் நீ கேட்டதை
நான் கொஞ்சமாய் கொடுத்தாலும்..
"துள்ளல்" துள்ளுவாய்..

உன்னை விட்டு விலகிச் செல்ல
நினைத்தால், மெதுவாக விடுவித்து, பின் வேகமாக
இழுத்து எனைக் கட்டிக் கொள்வாய்..

தோழியிடம் அலைபேசியில்
பேச விடாமல்.. முத்தம் கொடுத்தே
மனதை உன் வசமாக்குவாய்..

"தலைவலிடி" என்று பொய் சொல்லி
அலைபேசியை வைத்துவிட்டு பார்த்தால்..
தூங்குவது போல நடிப்பாய்..

"அதற்குள்ளே தூங்கிட்டியா திருடா"
என்றால்.. உண்மையாய் தூங்கியவன்போல
கோபம் கொள்வாய்..

உன்னை முறைத்துக் கொண்டே..
உன் செல்லக் கோபங்களை உன்னிடம் சொல்லாமல்
நான்மட்டும் சுயநலமாய் மனதினுள் ரசிப்பேன்..

36 comments:

S Maharajan said...

"உன்னை முறைத்துக் கொண்டே..
உன் செல்லக் கோபங்களை உன்னிடம் சொல்லாமல்
நான்மட்டும் சுயநலமாய் மனதினுள் ரசிப்பேன்.."

பெண்மையின் உண்மை...

கலக்கல் தோழி...

சைவகொத்துப்பரோட்டா said...

ஒரு நல்ல ரொமான்ஸ் படம் பார்த்த எபக்ட் இருக்கு இந்த கவிதையில, கலக்கல் :))

அகநாழிகை said...

நடத்துங்க..

Chitra said...

திவ்யா மனதில், "அலை பாயுதே......" :-)

ஸ்ரீராம். said...

எங்க வீட்டுல எட்டிப் பார்த்துட்டு எழுதிட்டீங்களா...!!

நினைவுகளுடன் -நிகே- said...

அழகான உணர்வு பூர்வமான கவி வரிகள்
வாழ்த்துக்கள் ....

ஹேமா said...

திவ்யா...அன்பும் காதலுமாய்
கலந்து கலக்குது கவிதை.

நட்புடன் ஜமால் said...

உண்மையா உறங்கியன் போல் கோபம் கொள்வேன் - எனக்கு மிகவும் பிடித்த ஊடல் ...

க.பாலாசி said...

ம்ம்ம்... ஆகமொத்தம் காதல்...

ரசித்தேன்...

கண்ணா.. said...

ம். கவிதையில் காதல் பொங்கி வழியுது


நடத்துங்க...நடத்துங்க..

ரிஷபன் said...

ஹை கொஞ்சல்ஸ்

Paleo God said...

ரைட்டு..:))

அண்ணாமலையான் said...

ரசிங்க...நல்லா ரசிங்க...

தமிழ் உதயம் said...

எல்லாமே பொய். காதல் மட்டுமே நிஜம்.

ப்ரியமுடன் வசந்த் said...

காதலனே கணவனாக இல்லை கணவனே காதலனாக ரெண்டும் அமைவது வரம்தான்... நல்லாருக்கு திவ்யா...

ஜெய்லானி said...

போட்டோவுக்கு ஏற்ற மாதிரி வரிகளும், செம கலக்கல்.

மதுரை சரவணன் said...

நல்ல வரிகள். பெண்மையை உணர்த்தும் உண்மைக் கவிதை. வாழ்த்துக்கள்.

பனித்துளி சங்கர் said...

உணர்வுகளை அழகாக உங்கள் பேனாவால் கசியவிட்டு இருக்கிறீர்கள் . வாழ்த்துக்கள் .

Thenammai Lakshmanan said...

நல்லாவே ரசிக்கிறீங்க திவ்யா

புலவன் புலிகேசி said...

காதல் சடுகுடு பாடலின் புகைப்படம் இக்கவிதைக்கு மிகப் பொருத்தம் திவ்யா

பித்தனின் வாக்கு said...

மிகுந்த பணிகளின் காரணமாய்,பதிவுகளைப் படிக்க முடியவில்லை. இன்று சேர்த்துப் படித்து விட்டேன். கவிதைகள் வழக்கு நடையில் இருந்தாலும்,சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள்.

Anonymous said...

யப்பா...............

vidivelli said...

உங்கள் கற்பனை மிகவும் பிடிச்சிருக்கு.
good....good.....

R.Gopi said...

பொதுவாகவே நம் கற்பனைக்கு வானமே எல்லை..

அதுவும் திவ்யாவின் கற்பனை வான்வெளியையும் தாண்டி போகிறது...

நல்லா ரசிக்கும் படியாக எழுதி இருக்கீங்க...

வாழ்த்துக்கள் திவ்யா....

ஆர்வா said...

ரொமான்ஸ் பொங்கி வழியுதுங்க

திவ்யாஹரி said...

நன்றி மகாராஜன்..
நன்றி சைவ கொத்துப்பரோட்டா..
நன்றி அகநாழிகை..
நன்றி சித்ரா..
நன்றி ஸ்ரீராம்.. இங்கே நடக்குறது தாங்க.. (அங்கேயும் அதே தானா?)
நன்றி நினைவுகளுடன் நிகே..
நன்றி ஹேமா..
நன்றி நட்புடன் ஜமால்.. (அங்கேயுமா??..)
நன்றி பாலாசி..
நன்றி கண்ணா..
நன்றி ரிஷபன்..
நன்றி சங்கர் அண்ணா.. அண்ணாமலையான் அண்ணா சொல்றத (ரைட்டு) நீங்க சொல்லிடீங்க..
நன்றி அண்ணா..

திவ்யாஹரி said...

தமிழ் உதயம் said...
எல்லாமே பொய். காதல் மட்டுமே நிஜம்.
பொய் இல்லைங்க.. நன்றி தமிழ் உதயம்..

பிரியமுடன்...வசந்த் said...
காதலனே கணவனாக இல்லை கணவனே காதலனாக ரெண்டும் அமைவது வரம்தான்..
சரிதான் வசந்த்.. நன்றி..

நன்றி ஜெய்லானி..
நன்றி மதுரை சரவணன்..
நன்றி வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர்..
நன்றி தேனக்கா..
நன்றி புலவரே..
நன்றி பித்தன் அண்ணா.. கவி நடைல எழுத தெரியல அண்ணா.. தப்பா நெனச்சிக்காதிங்க..
நன்றி தமிழரசி..
நன்றி விடிவெள்ளி..
நன்றி கோபி..
நன்றி கவிதை காதலன்..

வெற்றி said...

வொண்டர்புல்ங்க.. :)) ரசிச்சு எழுதிருக்கீங்க....

Unknown said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கிங்க...,

'பரிவை' சே.குமார் said...

பெண்மையின் உண்மை...

கலக்கல் தோழி...

சாமக்கோடங்கி said...

அருமை திவ்யா ஹரி...

தலைவன் மறுமொழியை நான் யோசிக்கட்டுமா தோழியே..?

"உன் முறைப்பைக் காணவே சில்மிஷம் செய்தேன்..

கள்ளி உன் மனதை திருடவே முத்த மழை பெய்தேன்..

சுயநலம் உனக்கேது பெண்ணே..

உன் சுயமே நானாகி விட்ட பின்னே..."
உங்கள் கவிதை மிக உணர்ச்சி பூர்வமா இருக்குது..

நானும் கொஞ்சம் உணர்ச்சி வசப் பட்டு எழுதிட்டேன்.. தவறு இருந்தால் மன்னிக்கவும்..

சாமக்கோடங்கி said...

உங்கள் மற்ற கவிதைகளையும் படித்து விட்டு (படித்து மட்டும்) வருகிறேன்,,

அன்புடன் மலிக்கா said...

இதோ வந்துட்டேன் திவ் வந்துட்டேன் திவ்..

திவ்யா. காதல் கவி அருமை
காதல் ரசம் சொட்டுது.

நம்ம சமையல் பக்கம் வரும்போது கவிபக்கமும் வாங்க

பித்தனின் வாக்கு said...

நல்ல கவிதைதான். இன்னமும் கொஞ்சம், சந்தம் அல்லது ஈற்று அடிகள்(கடைசி வார்த்தைகள்)ஒரே மாதிரி எழுத முயற்ச்சி செய்மா. முதல் பத்தியின் கடைசி வார்த்தைகள் அடுத்த பத்தியின் முதல் வார்த்தைகளாக வந்தால் அதுவும் நலம். முடிந்த வரையில் நாலு வரிகள் கொண்ட கவிதையாய் இருந்தால் சரி. கூடுமான வரை இவை உன் கவிதைகளில் வருமாறு பார்த்துக் கொள்ளுங்கள். நன்றி திவ்யாஹரி.

மாதேவி said...

காதல் பொழிகிறது.

விக்னேஷ்வரி said...

நல்ல காதல்.

Post a Comment