Wednesday, March 10, 2010

எனக்கு பிடித்த 10 பெண்கள்-சிறு குறிப்பு..

அன்னை தெரசா:-
ஏழைகளுக்கும், நோயில் கஷ்டப்படுபவர்களுக்கும், அனாதைகளுக்கும், வயதானவர்களுக்கும் தொண்டு செய்தார். நிர்மலா சிசு பவனையும், தி சில்ட்ரன்'ஸ் ஹோம் ஆப் தி இமாக்குலேட் ஹார்ட்டையும் அநாதை குழந்தைகளுக்காக தொடங்கினார்.
எம்.எஸ். சுப்புலட்சுமி :-
எம்.எஸ். சுப்புலட்சுமியின் முழு பெயர் "மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி". இவர் பிரபலமான கர்நாடக இசைப்பாடகி. ஒரு நடிகையும் கூட. இவரின் "பக்த மீரா" படம் மிகப் பிரபலம். கல்கி சதாசிவம் அவர்களை சுப்புலட்சுமி மணந்தார். 1997-ல் கணவர் இறந்த பின் பொது நிகழ்சிகளில் கலந்து கொள்ள வில்லை.
ஜான்சி ராணி லக்ஷ்மி பாய்:-
இவரின் இயற்பெயர் மணிகர்ணிகா. இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீராங்கனை. 22 வருடங்களே வாழ்ந்தாலும் சரித்திரத்தில் தன் பெயரை நிலைக்கச் செய்தவர். தன்னுடைய நாட்டை வெள்ளையருக்கு விட்டுக் கொடுக்காமல். தானே முன்னின்று படையை வழி நடத்தி துணிச்சலாக போரிட்டார். போர் புரியும் போது வீர மரணம் அடைந்தார்.
டயானா:-
இவரின் இயற்பெயர் ப்ரான்செஸ் ஸ்பென்சர். இளவரசர் "சார்ல்"சின் மனைவி. அனைவரிடமும் அன்புடன் இருப்பார். அழகானவர். இவரின் எளிமையே அனைவரையும் கவரும். ஊடகத்தில் அதிகம் பேசப்பட்டவர். விபத்தில் கொல்லப்பட்டார். உலகம் முழுவதும் அனுதாப அலை வீசியது..
ஹெலன் கெல்லர்:-
இவர் காய்ச்சல் காரணமாக சிறு வயதிலேயே கண் பார்வையையும், கேட்கும் சக்தியையும், பேசும் சக்தியையும் இழந்தவர். பிறர் பேசும் பொழுது அவர்களின் உதடுகளின் மேல் கை வைத்து அந்த அதிர்வுகளினால் அவர்கள் பேசுவதை புரிந்து கொள்ளும் கலையை(லிப் ரீடிங்) கற்று கொண்டார். இந்த முறையிலேயே படித்து பட்டமும் பெற்றார். பார்வையும் இன்றி, காதும் கேளாமல் முதலில் பட்டம் பெற்றது இவரே. 'ப்ரெயில்' முறை படித்தார். (அதை இவர் கண்டு பிடிக்கவில்லை) பின் ஊனமுற்றோருக்கென தன் வாழ்நாளை செலவிட்டார்.
கிரண் பேடி:-
இந்திய காவல் சேவைப் பணியில் (I.P.S) முதல் பெண் அதிகாரி இவர். டெல்லியில் உள்ள உலகின் மிகப் பெரிதாக கருதப் படுகிற "திகார்" சிறையில் இவர் செய்த சீர்திருத்தங்களும் முன்னேற்றங்களும் பலரின் பாராட்டை பெற்றது. தற்போது விருப் ஓய்வு பெற்று சமூக சேவகியாக தொண்டுகள் செய்து வருகிறார்.
சாந்தா-தனஞ்செயன்:-
வி.பி. தனஞ்செயன். சாந்தா தனஞ்செயன். இவர்கள் இருவரும் தம்பதிகள். இருவரும் பாரத நாட்டிய கலைஞர்கள். சர்வதேச புகழ் பெற்ற, வரலாற்று சிறப்பு கொண்ட சென்னை அடையாறு "கலாச்சேத்ரா" பாரத நாட்டிய பள்ளி இவர்களுடையது. சென்னை வாழ் மக்கள் கலாச்சேத்ராவில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க விரும்புவர்.
அருந்ததி ராய்:-
இவர் ஒரு எழுத்தாளர். இவரின் படைப்புகளில் பெண் அடிமைத்தனம், குழந்தை தொழிலாளர் பிரச்சனை போன்றவற்றை விமர்சித்து எழுதி இருப்பார். 1997-ல் தனது முதல் புதினம் "தி கட் ஆப் ஸ்மால் திங்க்ஸ்"க்கு "புக்கர்" பரிசு பெற்றார். "புக்கர்" பரிசு பெற்ற முதல் இந்தியர் இவர்.
இந்திரா காந்தி:-
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் ஒரே மகள் இந்திரா காந்தி. இந்தியாவின் மூன்றாவது முதல்வர். இந்தியாவின் "முதல் பெண் பிரதமரும்" இவரே. பெண்ணிடம் எதிர்பார்க்கப்படும் தன்மைகளுக்கு மாறாக வலுவான அதிகார பலத்துடன் நாட்டை வழி நடத்தினார். 1984-ல் சொந்த பாதுகாவலர்களாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.
பி.டி. உஷா:-
பி.டி. உஷா ஒரு சிறந்த ஓட்டப் பந்தய வீராங்கனை. அவர் இருந்த காலங்களில் தடகள ஓட்டப் பந்தயத்திற்கு முக்கியத்துவம் கிடையாது. அதுவும் பெண்கள் பங்கு பெறுவது அரிது. உஷா தான் இந்த துறையை பெண்கள் தேர்ந்தெடுக்க முன்னோடியாக இருந்தார். ஒலிம்பிக் ஓட்டப் பந்தய இறுதியில் கலந்து கொண்ட முதல் பெண் இவரே.

26 comments:

வெள்ளிநிலா ஷர்புதீன் said...

:)

சைவகொத்துப்பரோட்டா said...

நாளைக்கு நான் போஸ்ட் பண்ணபோறதா நினைச்சா உங்களையும், சித்ராவையும் காப்பி
அடிச்ச மாதிரி இருக்கும்போல......ஹையோ....ஹையோ..:)) குறிப்போட நல்லா இருக்கு.

அண்ணாமலையான் said...

ஆக உங்கள உங்களுக்கு பிடிக்காது?

Sangkavi said...

உங்களுக்குப்பிடித்த 10 பெண்களும் அவர்களைப்பற்றிய குறிப்பும் அருமை...

இதில் சாந்தா-தனஞ்செயன் எனக்கு புதிது....

கண்ணா.. said...

அருமை தோழி,

சிலரை பற்றி எனக்கு தெரியாமலிருந்தது. தெரிந்து கொண்டேன்.

நன்றி

க.பாலாசி said...

//சாந்தா-தனஞ்செயன்:-//

இதுவரை நான் அறிந்ததில்லை....அறிந்துகொண்டேன்....

கக்கு - மாணிக்கம் said...

எல்லாம் சரிதான் மிஸ்டர் , இந்த பத்து பெண்களில் தங்களின் அம்மாவை ஏன் கண்ணு அடையாளம் காட்ட வில்லை? முட்டாளே! நீயெல்லாம் ப்ளாக் எழுத வில்லை என்று யார் அழுதார்கள் ? you stupid guy.!

Chitra said...

Very nice!

Anonymous said...

Nice

நட்புடன் ஜமால் said...

நன்று :)

என் நடை பாதையில்(ராம்) said...

//சாந்தா-தனஞ்செயன்:-//

இதுவரை நான் அறிந்ததில்லை....அறிந்துகொண்டேன்....


repeat...

திவ்யாஹரி said...

//கக்கு - மாணிக்கம் said...

எல்லாம் சரிதான் மிஸ்டர் , இந்த பத்து பெண்களில் தங்களின் அம்மாவை ஏன் கண்ணு அடையாளம் காட்ட வில்லை? முட்டாளே! நீயெல்லாம் ப்ளாக் எழுத வில்லை என்று யார் அழுதார்கள் ? you stupid guy.!//

-------------------------------------
கக்கு மாணிக்கம் புத்திசாலி நண்பரே..

எதையுமே முழுசா படிச்சிட்டு பின்னூட்டம் போடணும்னு கூடவா உங்களுக்கு தெரியாது? "10 பெண்களில் சொந்தக்காரர்களை சொல்லக் கூடாதுன்னு" ஒரு நிபந்தனை இருக்கு.. எதையும் எழுதுறதுக்கு முன்னாடி முழுசா ஒரு முறை படிச்சிட்டு எழுதுங்க சார்.. நான் மிஸ்டர் இல்ல.. மிஸ்ஸஸ்..

முதல் பதிப்பின் சிறு குறிப்பு தான் இது.. முதல் பதிப்பிலேயே நிபந்தனைகள் இருக்கு.. முழுசா படிச்சவங்களுக்கு தெரியும்.. அது சரி நமீதா பேரும், ரம்பா பேரும் இல்லைன்னு கேட்ட பாசமுள்ள பிள்ளை தானே நீங்க.. உங்கள் முட்டாள் பட்டம் எனக்கு தேவை இல்லை.. நீங்களே வச்சிகோங்க..

திவ்யாஹரி said...

எனக்கு நீங்க பின்னூட்டம் போடுங்கன்னு நானும் அழவில்லை மிஸ்டர் கக்கு மாணிக்கம்..

பிரியமுடன்...வசந்த் said...

திவ்யா cool...

S Maharajan said...

(ஹெலன் கெல்லர்)

தெரிந்து கொண்டேன்
நன்றி தோழி

Priya said...

படங்களுடன் சிறு குறிப்பும் அழகு!

அன்புடன் மலிக்கா said...

அழகான அருமையான தேர்வு. தெரியாதவர்களை தெரிந்துகொண்டதில் மகிழ்ச்சி திவ்யா..

ஸ்ரீராம். said...

விளக்கங்களுடன் பதிவு நன்று.

thenammailakshmanan said...

திவ்யா பொண்ணே உன்னோட இடுகை அருமை நானும் இடுகை போட்டுடேன்டா வந்து பார்..

Sivaji Sankar said...

10 times :)

சே.குமார் said...

நல்ல இடுகை.
குறிப்புக்களும் அருமை.
என் இத்தனை கோபம். விட்டுத் தள்ளுங்கள் தோழி.

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

போட்டாச்சும்மா...:))

http://palaapattarai.blogspot.com/2010/03/blog-post_12.html

R.Gopi said...

திவ்யா

நான் எழுதினால் கூட, ஏறக்குறைய இதில் 7-8 பேர் கண்டிப்பாக இருப்பர்...

நல்ல லிஸ்ட்...

கோபம் சிறிது குறைக்கலாமே... தோழி...

ஹுஸைனம்மா said...

உங்களின் இந்தப் பதிவிலிருந்து சில விவரங்கள் என் இந்தப் பதிவில் பயன்படுத்திக் கொண்டேன், ஆட்சேபிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்!!

Kanchi Murali said...

இந்திரா காந்தி... நெ.1 தேர்வு....
"நேர்கொண்ட பார்வை... துணிவு..." போன்ற பாரதியின் கனவுப் பெண்மணியாக இருந்தவர். அதோடு இந்திய திருநாட்டை தலைநிமிரச் செய்தவர்.... இவர் சரியான தேர்வு...

ஆக....
பத்து பெண்மணிகளும் கண்மணிகளே......

வாழ்த்துக்கள்...'திவ்யா ஹரி'....

நட்புடன்.....
காஞ்சி முரளி..........

J.S.ஞானசேகர் said...

புக்கர் பரிசு பெற்ற முதல் இந்தியர் அருந்ததி ராய் அல்ல. அவருக்கு முன்னரே நைபாலும், சல்மான் ருஷ்டியும் வாங்கிவிட்டார்கள்.
இந்தியப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு முதன்முதலில் புக்கர் பரிசு பெற்றவர் என்பதே அருந்ததி ராய்க்குச் சரியாகும்.

- ஞானசேகர்

Post a Comment