Sunday, March 28, 2010

பிளாஸ்டிக் உபயோகத்தை தடுப்போம்..

சென்னைக்கு தங்கை வீட்டுக்கு சென்று வந்தேன்.. தங்கை புதிதாக இருசக்கர வாகனம் (scooty pep+) வாங்கியுள்ளதால் என்னை வண்டியில் அழைத்து செல் ஆசைப்பட்டாள்.. "போய் தான் பார்ப்போமே" என்று வண்டியில் சந்தோஷமாகத்தான் ஏறி உட்கார்ந்தேன்.. அவள் இருக்கும் தெருவை விட்டு வண்டி மெயின் ரோடுக்கு வந்தது.. அதுவரை பயந்த நான், இனி ரோடு நல்லா இருக்கும்.. ஜாலியா போகலாம்னு நெனச்சேன்.. ஏன்டா போனோம்ன்னு ஆகிடுச்சி அந்த பயணம்..

இது வரை சென்னை நகரி
ல் எங்கு சென்றாலும், பஸ்சில் மட்டுமே சென்று வந்ததால் வண்டி ஓட்டுபவர்களின் சிரமம் எனக்கு தெரிய வாய்ப்பில்லை.. பிளாஸ்டிக் பையை (carry bag) என்னென்ன காரணத்துக்காக பயன்படுத்தக்கூடாதுன்னு சொல்றாங்களோ தெரியல.. ஆனா ஒரே ஒரு காரணத்தை அன்று உணர்ந்தேன்..

நாங்கள் இருவரும் சிக்னலில் நிற்கும் போது, எங்
கயோ கிடந்த பிளாஸ்டிக் பை ஒண்ணு தூரத்துல பறந்து வந்தது.. என் தங்கையிடம் சொல்லி எச்சரிக்கையாக இருக்க சொன்னேன்.. ரொம்ப தூரத்துல பறந்துகிட்டு இருந்ததால தங்கை, "அதெல்லாம் இவ்வளவு தூரம் பறந்து வராதுன்னு" சொன்னாள்.. நான் உடனே, "வராது தான்.. இருந்தாலும் எதற்கும் தயாரா இரு.. நாம சிக்னலில் இருந்து வண்டியை எடுத்ததும் உன் பக்கம் வந்தா வண்டியை பதட்டப்படாமல் நிறுத்தி விடுன்னு" சொன்னேன்.. நினைத்தது போலவே அது பறந்து எங்கள் பக்கம் தான் வந்தது.. வண்டியை தங்கையும் நிறுத்தி விட்டாள்..

எங்களை
முந்திச் செல்ல வந்த ஒருவரின் முகத்தில் வந்து ஒட்டிக் கொண்டது.. அவர் சற்று வேகமாக வந்ததால் தடுமாறி விழ பார்த்தார்.. சட்டென்று பையை எடுத்துவிட்டு வண்டியை நிறுத்தி விட்டார். ரொம்ப பயந்துட்டார்.. நாங்களும்தான்.. நம்ம பதிவுலக நண்பர் "புலவன் புலிகேசி" சில நாட்கள் முன்னர் ஒருபட்டம் பறந்து வந்து முகத்தில் பட்டதால் விபத்து ஏற்பட்டதாக ஒரு பதிவில் டரியல் (06-மார்ச்-2010) கூறியிருந்தார்.. எனக்கு உடனே அதுதான் நினைவிற்கு வந்தது..

வண்டியில் வந்தவர் கொஞ்சம் நிதானிக்காவிட்டால் இன்று அவரின் கதி என்ன? அவர் குடும்பத்தின் கதி என்ன? மக்கள் தான் பொறுப்பாக இல்லையென்றால், அரசும் கூட ஏன் இதை பொறுப்பாக தடுக்க கூடாது? "தலைக் கவசம் அவரவர் உயிர்க்கு தான் பாதுக்காப்பு" என்றாலும் கூட மக்கள் அதை பின்பற்றுவதாயில்லை.. இங்கு எதையுமே அன்பாகவும், அறிவுரையாகவும் சொல்வதால் எந்த பயனும் இருப்பதில்லை.. தனக்கு என்று வரும் போது மட்டுமே அதை பற்றி நினைக்கிறார்கள்.. ஆனால் அப்போதும் மற்றவர்களை குறைசொல்லி அலைகிறார்கள்..

"தலைக் கவசம் போடாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்" என்று சொன்னதும்தானே, மக்கள் அதை வாங்கி அணிந்து கொண்டார்கள்? அன்பும், அறிவுரையும் செய்யாததை, கட்டணம் செய்கிறது.. இதையும் கட்டணத்தின் துணையை
கொண்டுக் கட்டுப்படுத்தலாமே.. பிளாஸ்டிக் பையை மட்டும் இல்லாமல் பிளாஸ்டிக் பொருட்களையே கட்டுப்படுத்தலாமே.. அவரவர் கடமையை செய்யக் கூட லஞ்சம் கொடுத்து பழக்கப்பட்ட மக்கள் தானே.. இதற்கும் கொஞ்சநாள் கொடுத்து விட்டு, திருந்தி விடுவார்கள் என்று நம்புவோம்!!..

28 comments:

padma said...

சரியான பதிவு .பல இடங்களில் தடை வந்தாயிற்று .இதுவும் நம் கையில் தான் உள்ளது

என் நடை பாதையில்(ராம்) said...

இதற்குத் தடை கொண்டு வந்தால் தடையையும் காற்றில் பறக்க விட்டுவிடுவார்கள்...

Dr.P.Kandaswamy said...

அதற்கு மாற்று கண்டுபிடிக்கப்படும் வரையில் பிளாஸ்டிக் பைகள் மறையாது.

கண்ணா.. said...

இது போன்ற விஷயங்களிலெல்லாம் தனி மனித ஓழுங்குதான் தீர்வு.

S Maharajan said...

//அவரவர் கடமையை செய்யக் கூட லஞ்சம் கொடுத்து பழக்கப்பட்ட மக்கள் தானே.. இதற்கும் கொஞ்சநாள் கொடுத்து விட்டு, திருந்தி விடுவார்கள் என்று நம்புவோம்!!//

நெத்தியடி! ஆனால் என்ன செய்ய தோழி,
நாம் தான் திருந்த வேண்டும்
பிளாஸ்டிக் பையை புறகணிக்க வேண்டும்

ஹுஸைனம்மா said...

பழையபடி துணிப்பைகள் புழக்கத்திற்கு வரவேண்டும். கண்ணா சொன்னதுபோல தனிமனித ஒழுங்குதான் தேவை.

மங்குனி அமைச்சர் said...

இனிமேல் கடைக்கு போகும் போது, எல்லாரும் கைல துணி பை எடுத்துட்டு போவோம்

துபாய் ராஜா said...

அருமையான கருத்து.அழகான பதிவு.

Sangkavi said...

நிச்சயம் தடுக்கனுங்க....

உங்கள் கருத்தை நான் வழிமொழிகிறேன்....

பிரியமுடன்...வசந்த் said...

சிறப்பான பார்வையில் எழுதியிருக்கிறீர்கள்

//அன்பும், அறிவுரையும் செய்யாததை, கட்டணம் செய்கிறது..//

காசுதான் கடவுள் திவ்யா....

ஜெய்லானி said...

வெளிநாட்டில் உள்ள மாதிரி குப்பை தொட்டி வைத்து அதை முறையாக பராமரித்தலே பாதி வியாதி( முக்கியமா கொசு வராது ) ,பிரச்சனைகள் தீரும். அதை விட்டு விட்டு பையை குறை சொல்வது.. எய்தவன் இருக்க அம்பை.....>>. இது என் தனிப்பட்ட் கருத்து.

Anonymous said...

ஜெய்லானி சொன்னதே சரியானது. குப்பை தொட்டியில் போடும் பழக்கமும் அதன் பராமரிப்பும் இல்லாததே பிரச்சனை.
பிளாஸ்டிக் பையையால் எந்த பிரச்சனையும் இல்லை. வெளிநாடுகளில் பிளாஸ்டிக் உபயோகம் மிக தாராளமாக இருக்கிறது. பாவித்த பிளாஸ்டிக் பைகள் குப்பை தொட்டியில் ஒழுங்காக முடங்கி கிடக்கின்றன.

ILLUMINATI said...

முன்ன எல்லாம் கடைகள்ல பொருள்கள் வாங்குறப்போ துணிப் பையிலையோ,இல்ல கூடையிலையோ தான் வாங்குவாங்க.ஆனா இப்போ கடைக்காரனே மறந்தாலும் நாம பிளாஸ்டிக் பை தான கேட்டு வாங்குறோம்.இத விட நாம பண்ற பெரிய தப்பு,இந்த பிளாஸ்டிக் எல்லாத்தையும் கண்டபடி தூக்கி வீசிடுறது தான்.நம்ம பங்குக்கு நாம பிளாஸ்டிக் உபயோகத்த குறைச்சுக்குவோம்.அரசாங்கத்தின் பங்கான,குப்பைத் தொட்டி அமைத்தலுக்கு நாம வலியுறுத்துவோம்.

புலவன் புலிகேசி said...

நிச்சயம் துணிப்பைக்கான அவசியம் இப்போது பலருக்குப் புரிந்திருக்கிறது. மாற்றம் வர வேண்டும்..

முகிலன் said...

ப்ளாஸ்டிக்கை ஒழிக்கிறதுங்கிறது இந்தக் காரணத்துக்காக - பறந்து வந்து முகத்தில் ஒட்டுகிறது - சரியில்லை. அப்படி சரின்னு நீங்க சொன்னீங்கன்னா... பொண்ணுங்களோட துப்பட்டா, தலைல கட்டுற ஸ்கார்ஃப், கழுத்துல வைக்கிற கர்சீஃப், சேலை கட்டியிருக்கிறவங்களோட முந்தானை.. இப்பிடி பல விசயங்கள் பறக்கத்தான் செய்யும், மத்தவங்க - அட்லீஸ்ட் பக்கத்துல இருக்கிறவங்க - முகத்துல ஒட்டத்தான் செய்யும்.

குப்பையை ஒழுங்க குப்பைத் தொட்டியில மட்டும் போடுற பழக்கம் நம்ம மக்கள் கிட்ட வந்தாலே போதும் இந்தப் பிரச்சனை ஒழிஞ்சிடும். ப்ளாஸ்டிக்கை சரியான முறையில் உபயோகிச்சா அது வரம். இல்லைன்னா சாபம். இந்தியர்களோட மனோபாவம் மாறுகிற வரைக்கும் ப்ளாஸ்டிக் மட்டுமில்லை, மனித வளர்ச்சிக்கு கொண்டு வரும் எந்தப் பொருளும் சாபம் தான்.

வடுவூர் குமார் said...

அன்பும், அறிவுரையும் செய்யாததை, கட்டணம் செய்கிறது.
சிங்க‌ப்பூரின் தார‌க‌ ம‌ந்திர‌ம்‍ -அப‌ராத‌ம் அப‌ராத‌ம்.

Chitra said...

பிளாஸ்டிக் பையை மட்டும் இல்லாமல் பிளாஸ்டிக் பொருட்களையே கட்டுப்படுத்தலாமே.. அவரவர் கடமையை செய்யக் கூட லஞ்சம் கொடுத்து பழக்கப்பட்ட மக்கள் தானே.. இதற்கும் கொஞ்சநாள் கொடுத்து விட்டு, திருந்தி விடுவார்கள் என்று நம்புவோம்!!..

....... மக்களாக பார்த்து திருந்தா விட்டால் ஒன்றும் நடக்காது. குப்பைகளை கண்ட இடத்தில் போடும் பழக்கத்தை முதலில் மாற்ற வேண்டும்.

பித்தனின் வாக்கு said...

மக்களின் அறியாமை மற்றும் பொறுப்பற்ற தனம் தான் காரணம். இதுக்கு குற்றம் சொன்னால் சங்கிலித் தொடர் மாதிரி சொல்லிக் கொண்டே போகலாம். நல்ல உபயோகமான பதிவு. நன்றி.

க.பாலாசி said...

நிச்சயம் தவிர்க்கப்படவேண்டிய பூதம்...இந்த பிளாஸ்ட்டிக் பைகள்....

நல்ல இடுகை... தொடருங்கள்....

சைவகொத்துப்பரோட்டா said...

நல்ல கருத்து கொண்ட பதிவு,
வாழ்த்துக்கள்.

Anonymous said...

Proper social education appears to be a MUST than banning plastic altogether. When one stops to think about it all complaints point to carry bags left helter skelter by irresponsible people. Then why lobby for total ban on plastics?

ரிஷபன் said...

நல்ல பதிவு..

ராம் said...

இந்த மற்றம் கண்டிப்பா நமக்கு தேவை. நாடெங்கிலும் பசுமை நுட்பம் ( Green Technologies) வளரவேண்டும் .

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல விசயம் சொன்னீங்க.. திவ்யா

ஸ்ரீராம். said...

ஜெய்லானி, மற்றும் அனானி கருத்தை ஆதரிக்கிறேன்.

வேலன். said...

அருமையான கட்டுரை..மக்களு்க்கு விழிப்பிணர்ச்சி வந்தால் சரி...வாழ்க வளமுடன்,வேலன்.

karthik said...

பதிவுகள் பயனுள்ளவை நன்றி

சக்தி said...

WEW HAVE TO STOP IT

Post a Comment