Saturday, March 13, 2010

மீண்டும்...!!! (படித்ததில் பிடித்தது)


பிடிக்கவில்லை
எனக்கு...
இந்த அரசியலும்
அதன் விஷ வேஷமும்...!


பிடிக்கவில்லை
எனக்கு...
இந்த நகரமும்
அங்கே தூசிக் காற்றும்...!


பிடிக்கவில்லை
எனக்கு...
இந்த பணப் பேய்களும்
மக்கிய மனித நேயமும்...!

பிடிக்கவில்லை
எனக்கு...
இந்த உழைக்காத வர்க்கமும்
அதன் உழைப்புச் சுரண்டலும்...!


பிடிக்கவில்லை
எனக்கு..
நான் வாங்கிய பட்டமும்..
அதன் மேல் சிலந்திக் கூடும்...!


பிடிக்கவில்லை
எனக்கு...
இந்த தியேட்டர் கூட்டமும்
வீணாகும் முயற்சியும்...!

பிடிக்கவில்லை
எனக்கு...
பாழும் வறுமையும்..
நொறுங்கிய மனங்களும்...!


பிடிக்கவில்லை
எனக்கு...
இந்த காதலும்
அதன் சதைக் கவர்ச்சியும்...!

பாதம் வருடி
கெஞ்சுகிறேன் அம்மா...
மீண்டும்
தாயேன் -உன்

கருப்பையில் இடம்...!!!



(பி. கு) இந்த கவிதை யாரால், எப்போது எழுதப் பட்டது என்பது எனக்கு தெரியாது.. சிறு வயதில் இருந்தே, படிக்கும் கவிதைகள் பிடித்திருந்தால் டைரியில் எழுதும் பழக்கம் உண்டு.. அப்படி எழுதி வைத்த கவிதை இது.. தலைப்பு (title) கூட எழுதி வைத்திருக்கிறேன்.. ஆனால் எழுதியர் பெயரை எழுதாமல் விட்டிருக்கிறேன்.. உங்களுக்கும் பிடித்துள்ளதா என பின்னூட்டத்தில் சொல்லுங்கள்..

18 comments:

Chitra said...

எதுவும் பிடிக்கவில்லை என்றால், கருவறையும் சிறைதான்.
Make a difference or be different. Life is too short to waste it complaining.

திவ்யாஹரி said...

நீங்க எல்லாத்தையுமே வித்தியாசமா பார்க்கிறீங்க சித்ரா.. கருத்துக்கு நன்றி தோழி.. உங்களுடன் நட்புகொள்ள ஆசை.. உங்கள் gmail id கிடைக்குமா தோழி..

Unknown said...

யார் எழுதினதுன்னு தேடிப் பாத்து சொல்றேன்.

Unknown said...

நல்ல கவிதையா இருக்கு திவ்யா..

Kandumany Veluppillai Rudra said...

மாதா உடல் சலித்தால்; வல்வினையேன் கால் சலித்தேன்;
வேதாவும் கைசலித்து விட்டானே -நாதா!
இருப்பையூர் வாழ் சிவனே, இன்னும் ஓர் அன்னை,
கருப்பையூர் வாராமற் கார்!

ரோஸ்விக் said...

மேலே சொன்ன பிடிக்காதவைகளை சமாளித்து வாழ்வது கஷ்டம் தான். ஆனால், அவையெல்லாம் இல்லாவிடின், வாழ்வில் ஒரு பிடிப்பு இல்லாமல் போகுமோ என்னமோ... :-)

புலவன் புலிகேசி said...

பிடித்திருக்கிரது...எனக்கு இந்தக் கவிதையை..இனிமே பேரையும் சேர்த்து எழுதி வைங்க

என் நடை பாதையில்(ராம்) said...

//*பிடிக்கவில்லை
எனக்கு...
இந்த உழைக்காத வர்க்கமும்
அதன் உழைப்புச் சுரண்டலும்...!*//


mmm great

செல்ல நாய்க்குட்டி மனசு said...

இது ஒரு விரக்தி நிலை, ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வயதில், நேரத்தில், அதில் இருந்து எப்படி வெளி வருகிறோம் என்பதில் தான் இருக்கிறது நம் வெற்றி.

சைவகொத்துப்பரோட்டா said...

இந்த கவிதையை எழுதியவருக்கு வாழ்த்துக்கள், கொடுத்த உங்களுக்கு நன்றி.

தமிழ் உதயம் said...

சித்ரா சொல்வதே சரி

பத்மா said...

எல்லாம் பிடிக்கறது நீ இருப்பதாலே மட்டும்ன்னு முடிச்சா ஒரே ரொமாண்டிக்கா இருக்கும் இல்ல

ப்ரியமுடன் வசந்த் said...

//பாதம் வருடி
கெஞ்சுகிறேன் அம்மா...
மீண்டும்
தாயேன் -உன்
கருப்பையில் இடம்...!!!//

ஆமாவா?

நல்லா இருக்கு திவ்யா...

R.Gopi said...

பிடித்திருக்கிறது எனக்கு

யாரோ எழுதிய இந்த கவிதை
உங்களால் இங்கு பிரசுரமானதை
படித்த போது...

ரிஷபன் said...

நல்லா இருக்கு.. ஒரு மாறுதலுக்கு பிடிச்சிருக்கு எனக்கு.. என்று உங்கள் பதிவையும் போடுங்களேன்

Thenammai Lakshmanan said...

பிடிச்சு இருக்குடா திவ்யா ஆனா பேர் தெரியல

காஞ்சி முரளி said...

சமுதாய சீர்கேடுகள்
அனைத்தையும் குறிப்பிட்டுவிட்டு
பிடிக்கவில்லை.... சரி...

இக்கவிதையின் ஹைலைட்டான
இவ்வரிகளை (////////பிடிக்கவில்லை எனக்கு...இந்த காதலும் அதன் சதைக் கவர்ச்சியும்...!///////)
இறுதியில் எழுதியதால்
இதுவே சமுதாய, காலச்சாரச் சீரழிவின் மணிமகுடம் என
சொல்லாமல் சொன்ன
அக்கவிஞருக்கும்....
அவ்வரிகளை எங்களுக்கு
அறிமுகப்படுத்திய
தங்களுக்கும் பாராட்டுக்கள்...!

இறுதியாய்....
///////பாதம் வருடி கெஞ்சுகிறேன் அம்மா...
மீண்டும் தாயேன் -உன் கருப்பையில் இடம்...!!!/////////
நெஞ்சைத் தொடும் வரிகள்....

வாழ்த்துக்கள் 'திவ்யா'....

நட்புடன்...
காஞ்சி முரளி..........

vidivelli said...

கவிதையை எழிதியவர்க்கும் உங்கள் தெரிவுக்கும் வாழ்த்துக்கள்...
நீங்களும் எழுதுங்கள்.......
தொடர்ந்து வருகின்றேன்....

Post a Comment