இப்போ இருக்குற பசங்களுக்கு தொலைக்காட்சி நிரம்ப பிடிக்கிறது அதில்வரும் நிகழ்ச்சிகளில் வரும் சாகசங்கள் மேஜிக் இதுபோலவே செய்து பார்க்கணும்ன்னு விரும்புவாங்க .. டான்ஸ் இருக்குற பாட்டு பார்த்தா அதே போல டான்ஸ் ஆடணும்ன்னு விரும்புவாங்க அதே போல ஆபாச காட்சிகள் பார்க்கும்பொழுது அதே போல ஒரு ஆளை கூட்டி வைத்து, அதே போல (விஷயமே தெரியாம) செய்து பார்க்கணும்ன்னு விரும்புவாங்க அது அவங்க மனசு..
சின்னஞ்சிறுசுக மனசு களிமண் மாதிரி நாம எப்படி பிடிச்சு வைக்குறோமோ அப்படியே அழகான வடிவமா உருவாக்குறதும் சிதைக்கிறதும் அவங்களுடைய பெற்றோர்களுக்கு கடமை. அதே போல கடமை தொலைக்காட்சிகளுக்கும் இருக்கு... இப்போ இதுல ஒரு சின்ன குழந்தை வரைஞ்சுருக்குற ட்ராயிங்க் இருக்கு அது பாத்தீங்கன்னா, அது என்னவெல்லாம் பார்த்ததோ அதையெல்லாம் அப்படியே வரைந்திருக்கு..
இன்னொரு படம் சின்ன வயசு காதல் சினிமால வர்ற ஹீரோ, ஹீரோயினுக்கு லெட்டர் தர்ற மாதிரியான சீன் பாத்து இவங்களுக்கும் அதே ஆசை. அதை அப்படியே செய்து பாக்குறாங்க.. இதுல சின்ன பசங்கள குறை சொல்ல முடியாது. அவங்களுக்கு முன்னாடி நாம எப்படி நடந்துக்கணும்ன்னு பெற்றவர்களும், சமூகமும் தான் புரிந்து நடக்க வேண்டும்..
பக்கத்து வீட்டு அக்கா, நேற்று மாலை வந்து பேசிக்கொண்டு இருந்தார்கள். ஏனோ முகம் மட்டும் வாடி இருந்தது.. கொஞ்சம் தனியாக அழைத்து விஷயம் என்ன வென்று கேட்க. அவர்கள் சொன்னதை கேட்டு அதிர்ந்தேன். அக்காவின் ஒரே பையன் இரண்டாம் வகுப்பு படிக்கிறான். எப்போதும் "சுட்டி டிவி" மட்டுமே பார்க்கும் பழக்கம் உள்ளவன். படிப்பிலும் படுசுட்டி..
ஒரு நாள் இரவு 8.15 -க்கு அவன் டிவி பார்த்து கொண்டிருக்க, அந்த பக்கம் வந்த அக்கா எதேச்சையாக டிவி பக்கம் கவனம் செலுத்தி உள்ளார். அதில் ஒரு கணவன் மனைவியுடன் படுக்கை அறையில் இருக்கும் காட்சி ஒளிபரப்பாகி கொண்டு இருந்திருக்கிறது. ஏதோ மொழி பெயர்ப்பு படம் என்று அக்கா புரிந்து கொண்டார். அதில் அடுத்த சீன்.. அவர்களின் குழந்தை வந்து கதவை தட்ட.. அந்த பெற்றோர் கதவை திறக்காமல் உள்ளேயே இருந்திருக்கிறார்கள்.
உடனே அந்த பையன் "ச்சீ.. இவர்களுக்கு கதவை திறக்க கூட நேரம் இல்லை" என்று கூறிவிட்டு போய் விட்டானாம்.. அவன் சலித்துக் கொண்ட விதமே அக்காவுக்கு விபரீதத்தை உணர்த்தி இருக்கிறது.. உடன் சென்று டிவியை அனைத்து விட்டு தூங்கு போய் என்று சொல்லிவிட்டு இனி மொழி பெயர்ப்பு படங்களை பார்க்க அனுமதிக்க கூடாது என்று முடிவு செய்து இருக்கிறார்கள்.
ஆனால் அதற்கு மறுநாள் மாலை அக்காவின் கணவர் உறங்கி கொண்டிருக்க. அக்கா ஒரு திருமணத்திற்கு போவதற்காக உடை மாற்ற கதவை தாழ் போட்டிருக்கிறார். பள்ளி விட்டு வந்த பையன் கதவை தட தட வென தட்டி இருக்கிறான்.. அக்கா இருடா வர்றேன் அம்மா டிரஸ் மாத்துறேன்னு சொன்னதும் பையன் "ச்சீ.. இவர்களுக்கு கதவை திறக்க கூட நேரம் இல்லை" என்று அதே வசனத்தை சொல்லி பின் அன்று முழுதும் கோபமாகவே இருந்தானாம்..
குழந்தைகளுக்கான சேனல் தானே என்று பார்க்க விட்டது தவறு என்று புலம்புகிறார். தவறு யார் மீது? சுட்டி டிவி மீதா? அதை பார்க்க அனுமதித்த பெற்றோர் மீதா? பார்த்து அதை அப்படியே செயல் படுத்திய குழந்தை மீதா? குழந்தைகளுக்கான படம் தான் எனினும், தேவை இல்லாத காட்சிகளை நீக்கி விட்டு ஒளிபரப்பு செய்யலாமே. செய்வார்களா?

31 comments:
சரி தான் .முதல்ல பெற்றோர் அந்த டிவி மாயைலேந்து வெளிய வரணும்
உண்மைதான்........தொல்லை காட்சிகளுக்கு சென்சார் இல்லாதது வசதியாகி விட்டது.
உண்மைதான். பெரியவர்களும் ஒரு காரணம்தான். ஆனால் இந்தக் காலத்து குழந்தைகள் என்று இல்லை மாறி வரும் உலகில் அடுத்த தலைமுறை என்பது எப்பவுமே ஃபாஸ்ட்தான்... நாங்கள் கூட இது போல 'மிரட்டும் காதல்' என்று ஒரு கதை கொஞ்ச நாள் முன்பு வெளியிட்டிருந்தோம்...!
குழந்தைகளின் கவனத்தை திசை திருப்ப டிவி பார்க்க வைப்பதால் வரும் வினை இது.
நல்ல பதிவு...
குழந்தைகளின் கவனத்தை திசை திருப்ப டிவி பார்க்க வைப்பதால் வரும் வினை இது.
அப்படியே உடன்படுகிறேன்.. சரவணகுமரன் கருத்தோடு.
//குழந்தைகளுக்கான படம் தான் எனினும், தேவை இல்லாத காட்சிகளை நீக்கி விட்டு ஒளிபரப்பு செய்யலாமே. செய்வார்களா?//
அப்படி செய்றவன் மனுசன்
செய்யாதவன் பணம் தின்னும் மிருகம்...
மிகவும் நல்ல பதிவு திவ்யாஹரி...
மிகவும் நல்ல பதிவு திவ்யாஹரி
நல்ல பதிவு..கவனிப்பார்களா?..
ின்னஞ்சிறுசுக மனசு களிமண் மாதிரி நாம எப்படி பிடிச்சு வைக்குறோமோ அப்படியே அழகான வடிவமா உருவாக்குறதும் சிதைக்கிறதும் அவங்களுடைய பெற்றோர்களுக்கு கடமை. அதே போல கடமை தொலைக்காட்சிகளுக்கும் இருக்கு...
...........தொலை காட்சி நிகழ்ச்சிகளுக்கு rating/ censorship கொடுப்பதோடு மட்டும் இல்லாமல், பெற்றோர்களும் தங்கள் பங்கை செய்ய வேண்டும். நல்ல பதிவு.
மற்ற சேனல்களுக்கு கொடுக்கிறாங்களோ இல்லையோ அட்லீஸ்ட் குழந்தைகள் சேனலுக்காவது கொடுக்கணும்..
நாம செக்ஸ் அப்பிடிங்கிற விசயத்தை மட்டும் பேசிக்கிட்டிருக்கோம். ஜெட்டிக்ஸ் அப்பிடிங்கிற பேர்ல வன்முறையையும் குழந்தைகள் மத்தியில தூண்டுறாங்களே? அதை யார் கேக்குறது?
நிச்சயம் அது போன்ற காட்சிகள் குழந்தைகளின் மனதை பாதிக்கும். சுட்டி டீவி தான் பொறுப்பு
சரி தான் .முதல்ல பெற்றோர் அந்த டிவி மாயைலேந்து வெளிய வரணும்
நல்ல பதிவு...காசு பார்க்க என்ன வேணா செய்வாங்க..
நல்ல பதிவு, குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளில் ஆவது நமது சென்ஷார் போர்டு மிகக் கடுமையாக இருக்க வேண்டும். மிக்க நன்றி. ஆமா மிக மட்டமான சீரியலைப் பக்கத்தில் குழந்தைகளை மற்றும் வயசுப் பசங்களை வைத்துக் கொண்டு பார்க்கும் பெற்றேரை என்ன செய்வது (குறிப்பாக, பிரபு தேவா, மானடா மயிலாட, ஜோடி 1)
அடப்பாவி மக்கா, நான் குழந்தைப் புள்ளையா இருக்கும் போதே இப்படி எல்லாம் படம் போட்டுருந்தா நான் கொஞ்சம் விவரம் ஆனா பையனா வளர்ந்துருப்பேன். இப்படிக் குழந்தைப் புள்ளையா இருக்க மாட்டேனே. அப்பப் போடாம உட்டுட்டாங்க தாயி. என்ன ஒரு பீலிங்ஸ்.
//ஒரு நாள் இரவு 8.15 -க்கு அவன் டிவி பார்த்து கொண்டிருக்க, அந்த பக்கம் வந்த அக்கா எதேச்சையாக டிவி பக்கம் கவனம் செலுத்தி உள்ளார். அதில் ஒரு கணவன் மனைவியுடன் படுக்கை அறையில் இருக்கும் காட்சி ஒளிபரப்பாகி கொண்டு இருந்திருக்கிறது. ஏதோ மொழி பெயர்ப்பு படம் என்று அக்கா புரிந்து கொண்டார். அதில் அடுத்த சீன்.. அவர்களின் குழந்தை வந்து கதவை தட்ட.. அந்த பெற்றோர் கதவை திறக்காமல் உள்ளேயே இருந்திருக்கிறார்கள்.//
One confusion. Was this shown in "Chutti TV"?
Due to the paucity of time, I think it is unrealistic to seek censorship for all TV programs.
What can be done is censor board can provide rating guidelines for channels to adopt self censorship. Any violation need to be dealt with severe penalty.
Also it is high time for Indian consumers to demand channel lock in TVs produced in India.
நல்ல பதிவு தோழி
நிச்சயமா இல்லை.!!
அக்கறையான பதிவு...
குழந்தைகள் ஒருநாளைக்கு எவ்வளவு நேரம் டிவி பார்க்கலாம்?
இந்த வரைமுறையை முதலில் பழகவேண்டும்... குழந்தைகளுக்கு மட்டுமென பிரதேகமாய் ஓர் 24 மணி நேர சேனலெல்லாம் தேவையா!! "சுட்டி டிவி" "ஜெட்டிக்ஸ்" மட்டும்தான் பார்ப்பான் என்னோட காம்ப்ளான் பாய் இல்லாட்டி ரிமோட்டைத் தூக்கியெறிஞ்சுடுவான்" என்று பெருமையாகப் பேசும் எத்தனையோ பெற்றோர்களைப் பார்க்கமுடிகிறது....
நம்ம வீட்டுக் குழந்தைகளுக்காக எல்லாம் யாரும் டிவி நடத்தவில்லை கல்லா கட்டுவதற்காகத்தான் எல்லாமும்.... இங்கே இவர்களிடம் எவ்வித அக்கறையையும் எதிர்பார்க்க முடியாது.. நம்மவீட்டுப் பிள்ளைகளை நம்மதான் கண்காணிச்சு வளக்கணும்....
அந்தக் காட்சியில் குழந்தைக்குக் கதவைத்திறக்காமல் இருக்கும் கணவன் மனைவிக்கும், குழந்தைக்கு சுட்டி டிவியைப் போட்டுவிட்டுத் தோழியிடம் அரட்டைஅடிக்கும் நம்ம வீட்டு அம்மாக்களுக்கும் ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை என்பது என் கருத்து....
ரொம்ப அக்கறையான கேள்வியை அழகாகப் பதிவு செஞ்சிருக்கீங்க :)
ஒரு விசயம் குழந்தைகள் மனதை எந்தளவிற்கு பாதிக்கிறது. பேசாம கார்ட்டூன் சேனல்களை பசங்களுக்கு ரெகமெண்ட் செய்யலாம்.
ம்.. சமூக அக்கறையுடைய நல்ல பதிவு.
ஆனா சேனல்காரங்களுக்கு இதெல்லாம் புரியுமா..???! புரிஞ்சா சரிதான்..............
சமூக அக்கறையுடைய நல்ல பதிவு.
என் அக்காவின் குழந்தை sanjay age 3
சேட்டிங் சுட்டி டிவியைப் என்ற காதல்கதை
பள்ளிகாதல்கதை.விரும்பி பார்பன் சேனலை மார்தினோ ஓஓ கத்துஎன்க்கு அவனுக்கு சண்டை வருன பாத்துக்க
சுட்டி டி.வி யில் பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் பார்க்கும் போது பெற்றோர்கள் அல்லது ஒரு கவனிப்பாலரின் மேற்பார்வையில் பார்க்கச் செய்வதே உகந்தது.தேவையற்ற சில விசயங்களை நம் குழந்தைகள் குழப்பிக் கொள்ளாமல் தடுக்கலாம்.எனக்கு வெறுப்பைத் தந்த ஒரு நிகழ்ச்சி "செட்ரிக் ".சிலருக்கு ஒன்றுமே இல்லை எனத் தோன்றும் பல விஷயங்கள் தான் பிற்பாடு பல சிரமங்களை உண்டாக்கி விடுகின்றன.எல்லா நேரங்களும் குழந்தைகளை நம் பார்வையில் வைத்துக் கொண்டிருப்பதும் முடியாத காரியமே!கூடுமான வரை நம்மால் ஆனதை சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கலாம்.எந்தெந்த நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம் எவை எவை தேவை இல்லாதவை என்று...
என்னங்க இப்படி சொல்றிங்க !!டிவி எந்த அளவுக்கு போய்ட்ருக்கு ....நீங்க வேற இன்னும் பழைய காலத்துல இருக்கீங்க ....சுட்டி டிவி மட்டும் தானா ?பொது அறிவை வளர்க்கும் News channel எப்படி போய்கிட்டு இருக்கு ??.24 hrs திரும்ப திரும்ப சாமியார் கசமுசா காட்டினாங்க இல்ல? குடிச்சா தானே ஹீரோ? பார் இல்லாத movie /TV சீரியல் நீங்க பார்த்தா என்கிட்ட சொல்லுங்க ..
ஆமாம் திவ்யா இனி டி விக்கும் சென் ஸார் வேண்டும்
சே......... பெரியவுங்க நீங்க இப்படி எல்லாத்தையும் கண்டுபிடிச்சுட்டா ? அப்புறம் கொயந்தைன்ங்க நாங்க என்னாதான் பன்றது
//ஆமாம் திவ்யா இனி டி விக்கும் சென் ஸார் வேண்டும்//
போறாம... போறாம.... போறாம....
!!
!!
சாரி மேடம் சும்மா காமெடிக்கு, அருமையான பதிவு மேடம்
திவ்யாஹரி அவர்களே...
முதலில்...
நாம திருந்தோனம்?....
பெரியவர்களாகிய நாமே இன்னும் 'அடுத்தவன் பொண்டாட்டிய/புருசன இழுத்துட்டு ஓடுற சீனையும்; விளக்கு வைக்குற நேரமான மாலைபொழுதுகளில் இழவு வீடுபோல சீரியலில் அழுகையும் பார்த்து நாமே ரசிக்கிறோம்... அப்புறமென்ன குழந்தைகளை குறை சொல்லிட்டு...!
என்றைக்கு நாம் நம் குழந்தைகளை, நாம் சிறிய வயதில் ஆடிய விளையாட்டுக்களை விளையாட பயிற்றுவித்தோமா? இல்லையே?
குழந்தைகள் பள்ளிவிட்டு வந்ததும், உடற்பயிற்சியுடன்கூடிய விளையாட்டுக்களை சொல்லிக்கொடுப்பதில்லை நாம்.
டி.வி. பார்க்க அனுமதிப்பதே நாம்தான்..
பணம், பணம் என்று அலையும் இன்றைய டி.வி. நிறுவனத்தினர், சமுதாய சீர்கேட்டினை பார்த்தால்....
அவர்கள் உலக பணக்காரர்கள் ஆவது எப்படி...?
முதலில் நாம் திருந்துவோம்...
பின் குழந்தைகளை திருத்துவோம்....
ஆனால் டி.வி. நிறுவனத்தினர் திருந்துவர் என்று எதிர்பார்த்தால்...
அதைவிட முட்டாள்தனம் ஏதுமில்லை....
நட்புடன்...
காஞ்சி முரளி...........
அட!டிவி பார்த்துதான் கெட்டு போகனுமா என்ன?இதெல்லாம் எல்லார் வாழ்விலும் நடப்பதுதான்..tak it easy :)
திவ்யாஹரி...
உங்களை என் தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன். தொடர் பதிவை எழுத வேண்டுகிறேன்....
http://sangkavi.blogspot.com/2010/03/blog-post_19.html
சமூக அக்கறையுடன் கூடிய நல்ல பதிவு...
டி.வி. நிகழ்ச்சிகளுக்கும் கண்டிப்பாக சென்சார் தேவை...
அரசு இப்போது தான் அந்த ஃபேஷன் டி.வி. விஷயத்தில் கொஞ்சம் முழித்து கொண்டு, தடை செய்ய நினைக்கிறது...
சீரியல்கள் எல்லாம், ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல...
Post a Comment