Saturday, March 13, 2010
ஐ.என்.எஸ்.விக்ரமாதித்யா-தேவை(யா)!?
ரஷ்யப் பிரதமர் புதின் இந்தியா வந்து சென்றிருக்கிறார். இரு நாடுகளும் பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. எப்படியும் 15 அல்லது அதற்கு மேல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதெல்லாம் வழக்கம் போல் நடைபெறும் சம்பிரதாயங்கள் தான் என்கிறீர்களா.
ஆனால் இதில் ஒன்று மிக முக்கியமானது. "அட்மிரல் கோர்ஷ்கோவ்" சம்பந்தப்பட்டது. அது யாரு புதுசா இருக்காருன்னு யோசிக்கிறீங்களா. சில பேருக்கு தெரிந்திருக்கும். பல பேருக்கு தெரிந்திருக்காது. அவர்களுக்காக தான் இந்த பதிவு. "அட்மிரல் கோர்ஷ்கோவ்" ஒரு கப்பலோட பேரு. ரஷ்ய நாட்டு விமானம் தாங்கி கப்பல். ரஷ்ய கடற்படைக்கு சொந்தமானது. 1987 ஆம் ஆண்டு ரஷ்ய கடற்படையினரால் உருவாக்கப்பட்டது. அது அதிகம் உழைத்ததால் அதற்கு ஓய்வு கொடுக்க நினைத்தனர் ரஷ்யர்கள். ஆனால் நம் இந்தியாவோ அதனை எங்களுக்கு கொடுத்துவிடுங்களேன் எனக் கேட்க ரஷ்யாவும் தருவதாக கூறி, அதற்கு 150 கோடி டாலர்கள் விலை சொன்னது.
இந்தியாவில் இந்த அளவு பெரிய விமானம் தாங்கி கப்பல் கிடையாது. கட்டுவதற்கு வசதியும் இல்லை. அதனால் இந்தியாவும் அதற்கு சம்மதித்து ஒப்பந்தம் போட்டு விட்டது. இதில் கப்பலில் இருக்கும் விமானங்களும் அடங்கும். பின்னர் கப்பலை புதுப்பித்து தருவதாக கூறி விலையை 290 கோடி டாலர்கள் உயர்த்தியது. இந்தியா இதற்கு சம்மதிக்கவில்லை. எனவே ஒப்பந்தம் ஏற்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. பல ஆண்டுகள் பேரத்துக்கு பிறகு 235 கோடி டாலர்கள் என்று முடிவானது.
கப்பலுக்கு இந்தியா "ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா" என்று பெயரும் சூட்டி விட்டது. கப்பல் இன்னும் இந்தியா வந்து சேரவில்லை. அதை எப்போது சீரமைத்து இந்தியாவிற்கு வழங்க போகிறார்கள் என்றும் தெரியவில்லை. ஆனால் இந்தியா 2012 இல் இந்திய கடற்படையில் இந்த "விக்ரமாதித்யா" சேர்க்கப்படும் என தெரிவித்துள்ளது.
இது ஒரு புறம் இருக்க.. ஏற்கனவே ரஷ்யா 1993 இல் கூட "அட்மிரல் இசசென்கோவ்" (Admiral Isachenkov) என்ற கப்பலை இந்தியாவில் scrap-க்கு அனுப்பிவைத்தது. (scrap என்றால் ஒதுக்கிய மீதிப் பொருள், பயனற்ற பொருள் என்று அர்த்தம்.)
இதெல்லாம் சரிதான் ஆனால் எனக்கு ஒரு சிறிய சந்தேகம். ஒரு நாடு உழைத்ததுபோதும் என ஒதுக்கிய ஒரு கப்பலை அதுவும் 23 வருட பழமை வாய்ந்த கப்பலைஇவ்வளவு விலை கொடுத்து வாங்க வேண்டுமா? இது லாபகரமான திட்டம் தானா? இது பற்றி உங்களுக்கு தெரியுமா? வாங்கலாமா வேண்டாமா என்று உங்கள் கருத்தை சொல்லுங்கள் நண்பர்களே..
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
இருங்க கேட்டு...யோசிச்சு சொல்றேன்..
விக்ரமாதித்யா பெயர் வருவதால் வேதாளம்தான் பதில் சொல்லணும் என்கிறார் கௌதமன்.
இது லாபகரமான திட்டம் தானா? இது பற்றி உங்களுக்கு தெரியுமா?
கண்டிப்பா லாபகரம்தாம்மா..:) யாருக்கு என்பது வேற..:)
politicianuuku lapam thana
இதுல மன்மோகன்சிங், சோனியா காந்தி, அப்புறம் ராணுவ அமைச்சர் இவங்களுக்கு எவ்வளவு கட்டிங் போச்சுனு தெரிஞ்சா நீங்க இந்தக் கேள்வியக் கேக்க மாட்டீங்க..
கண்டிப்பா மேல சொன்னவங்களுக்கு இது லாபகரமான திட்டம்தான்.. :))
நாங்கலாம் ஏற்கனவே ஆளுக்கு ரெண்டு கப்பல் வச்சிருக்கிற அனுபவத்துல சொல்றோம், வேனுன்னா வாங்கலாம், வேனான்னா வேண்டாம்...
கேட்டீங்களே ஒரு கேள்வி. யாரால பதில் சொல்ல முடியும்
No idea
கப்பலை வாங்குவதை தவிர வேறு வழி இல்லைங்க,,,,,உள்நாட்டில் தயாரிப்பு செலவு இதவிட அதிகம் பிடிக்கும்
23 வருட உழைப்புன்னாலும் அதோட கம்பீரம் போகாம அப்டியே இருக்கு பாருங்க அதான்ஸ்பெசல்
பின்ன அனுபவம்ன்றது மனுசனுக்கு மட்டுமா? 23 இயர்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் நம்ம வாங்கலாம் சரிதான்...
சங்கர் சொல்றது சரி.எல்லாம் பணம் படுத்தும் பாடு.
http://illuminati8.blogspot.com/2010/03/classic.html
நாம் நாட்டுக்கு பலம் தானே!
வாங்கலாம்,இதை இங்க தயாரித்தால் செலவு அதிகம்
இன்றைய தேதியில் தமிழகத்தின் திருப்பி செலுத்தா கடன் 73 ஆயிரம் கோடியாம்.. பேப்பர்ல போட்ருந்தாங்க...
இது மாதிரில்லாம் வாங்கியும், பல இலவச கலர் டிவிக்களை வழங்கியும்தான் இது மாதிரி கடனை அதிகப்படுத்த முடியும்
நல்ல பதிவு தோழி
தாரளமா வாங்கலாம். இதுக்கு முன்னாடி நாம ஜ.என்.எஸ் விக்ரந்த் என்னும் பழைய கப்பலை வாங்கி, சுமார் பதினைந்து வருடம் பயன்படுத்தினேம். பின்னால் அது பயிற்சிகளுக்கு உபோயகப் பட்டது. அதன் பின்னர் வாங்கிய பழைய கப்பல் ஜ.என்.எஸ், வீராட் இன்னமும் பணியில் உள்ளது. ஒரு விமானம் தாங்கிப் கப்பல் என்பது ஒரு பெரிய பலம். இதில் தாக்க வேண்டாம். நிறுத்தி வைத்தால் போதும், எதிரிகள் பயப்படுவார்கள். இது போன்ற கப்பலைப் பாதுகாக்க, ஒரு டெஸ்ட்ராயர், இரண்டு ஏவுகணைப் கப்பல்கள், நாலு பாதுகாக்கும் சின்ன கப்பல்கள் இருப்பதைப் பார்த்தால் ஒரு மிகப் பெரிய கோட்டை மாதிரி இருக்கும். முப்பக்கமும் கடலால் சூழப் பட்டு இருக்கும் நமது நாட்டிற்கு இது மிகவும் அவசியம். என்னதான் ஊழல் இருந்தாலும் பாதுகாப்பு விஷயத்தில் நம்ம ஆட்கள் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். நன்றி.
அநியாயம்தான் திவ்யா என்ன செய்ய அரசாங்கம் செய்வதை நாம் வேடிக்கை பார்க்க் வேண்டியதுதான்
Post a Comment