Tuesday, March 23, 2010
கல்விக் கடன்..
+2 தேர்வுகள் முடிந்து விட்டன. மற்றவர்களுக்கும் கூடிய விரைவில் தேர்வுகள் முடிந்து விடும். அனைத்து மாணவர்களும் மேற்கொண்டு என்ன படிப்பது, எங்கு படிப்பது என முடிவு செய்து இருப்பார்கள். ஆனால் பல பேருக்கு படிப்பதற்கு பணம் ஒரு தடையாக இருக்கும். எனவே அவர்களுக்கு உதவ எனக்கு தெரிந்த சில கல்விக் கடன் வழிமுறைகளைப் பற்றி சொல்வதற்காகதான் இந்த பதிவு.
முதலில் கல்விக் கடனுக்கான அடிப்படை தகுதிகள் என்னவென்றால் விண்ணப்பிப்பவர் இந்தியராக இருக்க வேண்டும். வயது வரம்பு கிடையாது. அனைத்து இளங்கலை, முதுகலை, டிப்ளமோ, மருத்துவம், பொறியியல் போன்ற அனைத்து படிப்புகளுக்கும் கடன் வழங்கப்படும். செக்யூரிட்டி, ஜாமீன், அடமானம் எதுவுமின்றி நான்கு லட்சம் வரை கடன் பெறலாம். நான்கு லட்சம் முதல் ஏழரை லட்சம் வரையிலான கடனுக்கு வருமான வரி செலுத்தும், மாணவரின் உறவினர் எவரேனும் உத்தரவாதம் அளிக்க வேண்டும். ஏழரை லட்சத்துக்கும் மேலான கடன்களுக்கு ஏதேனும் சொத்துக்களை உத்தரவாதமாக கொடுக்க வேண்டும். ஆனால் இவை எல்லாம் அண்ணா பல்கைகழக கவுன்சிலிங் மூலமாக அனுமதி பெற்ற மாணவர்களுக்குத்தான். நிர்வாக ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரியில் அனுமதி பெற்ற மாணவர்களுக்கு நான்கு லட்சத்தை விட குறைவான கடனுக்கே வருமானவரி கட்டும் ஒருவரின் உத்தரவாதம் வேண்டும்.
வங்கிக் கடன் பெற விண்ணப்பிக்கும் பொழுது +2 மதிப்பெண் சான்றிதழ், டி.சி, கல்லூரியில் இடம் கிடைத்ததற்கான அனுமதி கடிதம், செமெஸ்டர் வாரியாக கல்லூரிக் கட்டணங்களின் விபரங்கள் அடங்கிய சான்றிதழ் ஆகியவற்றை கடன் பெறும் மாணவர் முக்கியமாக கொடுக்க வேண்டும். சில வங்கிகள் ஒவ்வொரு செமெஸ்டர் மதிப்பெண் சான்றிதழையும் கேட்பார்கள். ஏனென்றால் ஒரு செமஸ்டரில் அரியர் வைத்தாலும் அந்த மாணவரின் அடுத்த செமஸ்டருக்கான கட்டணத்தை அந்த வங்கி கொடுக்காது. அதனால் வங்கி கடன் தான் கிடைத்து விட்டதே என்று சரியாக படிக்காமல் இருந்தால் கல்விக் கடன் பெற்ற மாணவரின் படிப்பு கனவு சிதைய நேரிடும்.
படிப்பு காலம் முடியும் முன்னரே கடனை திரும்பச் செலுத்த நிர்பந்திக்கக் கூடாது என்பது இந்திய வங்கி சங்க விதிகளில் ஒன்று. அதை மீறும் வங்கிகள் பற்றி ரிசர்வ் வங்கியில் புகார் செய்யலாம். ரிசர்வ் வங்கியில் புகார் தெரிவிக்க இங்கு கிளிக் செய்யவும்.
அப்துல் கலாமை அமைப்பாளராகக் கொண்ட இளைஞர்களின் அமைப்பு 'action 2020 '. இவர்கள் கல்விக் கடன்களை எளிதாக பெறுவதை சாத்தியப்படுத்த சமீபத்தில் 'எஜுகேஷன் லோன் டாஸ்க் போர்ஸ்' (E.L.T.F.) என்ற குழுவை அமைத்துள்ளனர். உரிய மதிப்பெண்கள் இருந்தும் வறுமை காரணமாக உயர் கல்வியை எட்ட முடியாத நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு, குறிப்பாக கிராமப் புற மாணவர்களுக்கு கல்விக் கடனில் ஏற்படும் சிக்கல்களை தீர்த்து வைப்பது தான் E.L.T.F - ன் நோக்கம்.எவருக்கேனும் கல்விக் கடன் பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் இந்த அமைப்பினை 'action2020eltf@gmail.com' என்ற ஈமெயில் முகவரியில் தொடர்புக் கொள்ளலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
24 comments:
Me First......
அவசியமான பதிவு....
எஸ் தராமல் இருந்தால் புகார் செய்யலாம் .அனால் பெரும்பான்மையான வாராகடனில் முதன்மையானது கல்விகடன்தான் தெரியுமா ?பலர் வாங்கும் போதே கட்ட வேண்டாம் என்ற நினைப்பில் தான் வாங்குகின்றனர் .
நல்ல உபயோகமான தகவல்.. நிறைய பேருக்கு பயன்படும்....
இது போலவும் அடிக்கடி எழுதுங்கள் தோழி
பயனுள்ள தகவல் தோழி!
இப்ப வாங்க ஆரம்பிக்கற கடன், தள்ளுபடி கடைசி வரைக்கும் வாழ்க்கைல உதவும்
மாணவர்களூக்கும் பெற்றோருக்கும் பயன் தரும் பதிவு...நல்லது
நல்ல பதிவு..
பத்மா சொல்வதையும் மனதில் கொள்ள வேண்டும். கடன் வாங்கித்தான் படிக்கிறோம், அந்தக் கடனைத் திருப்பித்தர வேண்டும் என்பதும் மாணவர்களுக்கு மனதில் இருக்கவேண்டிய நினைவு. அப்போதுதான் அவர்களுக்குப் பிறகு வரும் மாணவர்களுக்கும் இந்த நல்ல உதவி சென்று சேரும்.
மாணவர்களுக்கு பயனுள்ள பதிவு. வேலை கிடைத்ததும் திருப்பி செலுத்தும் பொறுப்பும் இருக்க வேண்டும். இல்லை என்றால், விரைவில், உண்மையில் தேவைப்படும் மாணவர்களும் பயன் பெறும் வண்ணம் வழி இல்லாமல் போய் விடும்.
நல்ல உபயோகமான தகவல்!
Education Loan Task Force is an useful information. congrats.continue sharing such useful info.
பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்களுக்கு உபயோகமான பதிவு..வாழ்த்துக்கள்.
திவ்யா மிகவும் பயனுள்ள பதிவு
நிறைய பேருக்கு இந்த விஷயம் சென்று சேரவேண்டும்...
நானெல்லாம் படிக்கிறப்போ இப்பிடி ஒரு லோன் இருக்குறதே தெரியாதுப்பா....
திருப்பி கொடுக்கனுமா - அப்படின்னு தான் யோசிக்க தோனுது
நல்ல பகிர்தல்
good sharing DhivyaHari...
and Useful too..
நல்ல தகவலுங்க... நிறைய நண்பர்கள்ட சொல்லணும்...
காலத்திற்கு ஏற்ற பதிவு.. பலருக்கு பயன்படும்
ஒரு பொறுப்புள்ள போலீஸ் அதிகாரியா இருக்கீங்க மேடம்
அறிந்து கொள்ள வேண்டிய அவசியமான தகவல்கள், நன்றி.
புதிய தலைமுறை :)
பெரும்பாலும் வங்கிகளில் உண்மையிலேயே தேவைப்படுபவர்களுக்கு கல்வி கடன் வழங்கப்படுவதில்லை என்பதுதான் உண்மை. அதனால்தான் கடன்கள் வராகடன்களாக மாறிவிடுகிறது. பாவப்பட்டவர்களை அலைக்கழிக்கும் விதமே தனி. நானே நேரிடையாக கண்டிருக்கிறேன். எனக்கு ஏற்பட்ட எரிச்சலில் ஒரு முன்னனி வங்கி, தாங்களாகவே என்னென்ன தகுதி வேண்டும் என நிணயம் செய்து,சேலம் வட்டத்தில் உள்ள விண்னப்பதாரர்களை விரட்டியடித்துக்கொண்டிருந்தது. இதற்கான தகுதியை ரிசர்வ் வங்கி நிணயித்துள்ள பொழுது அதை மாற்றும் அதிகாரம் வங்கிக்கு கிடையாது என்பதால், பெறப்பட்ட கடன்விண்ணப்பங்கள், அனுமதிக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை, நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் பற்றிய தகவகவல்களை கேட்டு, மேற்படி வங்கிக்கும், ரிசர்வ் வங்கியின் சென்னை கிளைக்கும் விண்ணப்பித்தேன். அதன் பின்பு வங்கி தன் நிலைபாட்டை மாற்றி, தகுயுள்ளவர்களுக்கு வழங்கியது. இது எனக்கு கிடைத்த வெற்றி. மக்களிடையே சட்டம் , தனது உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாததே காரணம். இதற்காகவே நான் " சட்டம் நம் கையில்" என்ற வலைப்பூவில் எழுதிவருகிறேன். அதன் முகவரி http://lawforus.blogspot.com.சென்று பாருங்கள்.
உங்களுடைய தகவலில் ஒரு பிழை உள்ளது. ஒரு செமஸ்டரில் பெயிலாகிவிட்டால், பணம் தருவதை நின்றுவிடும் என்பது தவறு. ஒரு மாணவருக்கு கடன் வழங்கட்டு விட்டால், படிப்பு முடியும் வரை அதாவது எல்லா செமஸ்டருக்கும் கொடுக்க வேண்டிய பொறுப்பு வங்கிக்கு உண்டு.
நன்றி
நல்ல தகவல் பகிர்விற்கு நன்றி
மிக உபயோகமான பதிவு. நல்ல நேரத்தில் போடப் பட்டுள்ளது.
Education Loan Task Force *ELTF) has opened a new blog site, where all information about Education loan are made available. Even the students can download the model scheme of IBA. Please visit http://action2020eltf.blogspot.com .When the students do not get justice, they can also complain to higher authorities. The procedures are also given there.
kadan kudutha bankkukku podu namam
Post a Comment