கனவாக..
காற்றாக..
வெயிலாக..
துயிலாக..
இரவாக..
பகலாக..
எதிலும் - உன்
நினைவாகஇருக்கச் செய்தவனே..
உன்னில் மட்டும் - நான்
கானலாக இருப்பது ஏன்?..
இமைக்க மறந்து விட்டேன் - உன்
கண்களின் விசை ஈர்த்ததால்..
உறங்க மறந்து விட்டேன் - உன்
நினைவு உசுப்பியதால்..
உண்ண மறந்து விட்டேன் - உன்
விரல்களின் தீண்டுதலால்..
பேச மறந்து விட்டேன் - உன்
மௌனம் கலங்கடித்ததால்..
ரசிக்க மறந்து விட்டேன் - உன்னையே
நான் ரசித்துக் கொண்டிருப்பதால்..
மொத்தத்தில்
இவ்வுலகையே மறந்து விட்டேன்
அதனால் தானோ நீ என்னை மறந்து விட்டாய் ..!!
27 comments:
பகிர்வுக்கு நன்றி!! அருமையான கவிதை!!
கவிதை யில் காதல் தெரிகிறது. வாழ்த்துக்கள்
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
//உன்னில் மட்டும் - நான்
கானலாக இருப்பது ஏன்?..//
//மொத்தத்தில்
இவ்வுலகையே மறந்து விட்டேன்
அதனால் தானோ நீ என்னை மறந்து விட்டாய் ..!!//
உண்மை காதல்வலி உணர்த்தும் உன்னத வரிகள்.
மொத்தத்தில்
இவ்வுலகையே மறந்து விட்டேன்
அதனால் தானோ நீ என்னை மறந்து விட்டாய் ..!!
...... சரி, சரி...... கானல் காதல்......!
காதல் கவிதைகள் அருமை..
நத்திங் ஸ்பெசல் வழக்கம்போலவே அருமை...
இன்னும் கவிதைக்கு நிறைய வடிவம் கொடுக்கலாம்... ஒரேமதிரியான கவிதைகளை தவிர்த்து விடலாம்....
ஒவ்வொரு வரிகளும் ரசித்து ரசித்து எழுதியிருப்பீங்க போல..........
ஹ்ம்ம் எத்தனை வடிவில் படித்தாலும் காதல் கவிதைகள் அலுக்காது .
nice
மொத்தத்தில்
இவ்வுலகையே மறந்து விட்டேன்
அதனால் தானோ நீ என்னை மறந்து விட்டாய் ..!!
சோகமா முடித்து விட்டீர்களே :(
காணவாக = பார்ப்பதற்கு ஏதுவாக (வசதியாக) என்று கொள்ள வேண்டுமா? 'கனவாக' = அபபடி வந்து விட்டதா?
மொத்தத்தில்
இவ்வுலகையே மறந்து விட்டேன்
அதனால் தானோ நீ என்னை மறந்து விட்டாய் ..!!//
அச்சச்சோ...
வசந்த் சொன்னதுதான் ..::))
//ஸ்ரீராம். said...
காணவாக = பார்ப்பதற்கு ஏதுவாக (வசதியாக) என்று கொள்ள வேண்டுமா? 'கனவாக' = அபபடி வந்து விட்டதா?//
கனவாக தான் ஸ்ரீ ராம் தட்டச்சில் ஏற்ப்பட்ட பிழை. திருத்திவிட்டேன்.சுட்டிக் காட்டியதற்கு நன்றி.
நல்ல காதல் கவிதைகள்....
நல்ல காதல் கவிதைகள். நல்ல புகைப்படங்கள்.
கடைசி வரியில் காதலின் வலி புரிகிறது..
gud one...
இரண்டிலும் கடைசி வரிகள் சோகம்
கவிதை அருமையா இருக்கு திவ்யா மேடம்..
//உன்னில் மட்டும் - நான்
கானலாக இருப்பது ஏன்?..//
super.....
கவிதை அருமையா இருக்கு தோழி
//கனவாக..
காற்றாக..
வெயிலாக..
துயிலாக..
இரவாக..
பகலாக..
எதிலும் - உன்
நினைவாக
இருக்கச் செய்தவனே..
உன்னில் மட்டும் - நான்
கானலாக இருப்பது ஏன்?..//
இருவர் படத்தில் அரவிந்த் சாமி வாய்ஸில் வரும் கவிதை குரலில் கற்பனை பண்ணி பார்த்தேன்..
மிக அருமையாக உள்ளது தோழி.
இடைவெளிக்கு பிறகு காதல் கவிதை...
ஆனால் எப்போதும் உங்கள் காதல் கவிதை மகிழ்ச்சியை, ஏக்கத்தை விவரிக்கும்.. இதில் சற்று மாறுபடுகிறதே.....!!
நன்று.
ரோம்ப பீல் பண்ணி எழுதி இருகிங்கபோல இருக்கு
நன்று.. தொடர்ந்து எழுதுங்கள்
வாழ்த்துகள்
மிக அருமை தோழி.
வாழ்த்துக்கள்.
நல்லதொரு கவிதை.. தொடருங்கள்.
Post a Comment