Wednesday, March 31, 2010
எனக்கு பதிலாக நீங்கள் சொல்லுங்கள் நண்பர்களே..
எனக்கு தெரிந்த ஒரு பையன் ராஜா. சிறு வயதில் இருந்தே பொறுப்புள்ளவன்.. பாசமிக்கவன். நான்காம் வகுப்பு படிக்கும் போதே அன்னைக்கு உடல் நலமில்லை என்றால், தானே தண்ணி எடுத்து, பாத்திரம் விளக்கி, துணி துவைத்து என அனைத்து வேலைகளையும் செய்து விடுவான். ஏழாம் வகுப்பு படிக்கும் போது சமைக்கவும் செய்தான்.
கிராமத்தில் உள்ள மற்ற பசங்களை விட இவன் நல்லா இருப்பான். அதனால் கிராமத்திற்கே உரிய கிண்டலில் பெண்கள் அவனை எப்போதும் சுற்றிச் சுற்றியே வருவார்கள். இவனோ யாரிடமும் நின்று பேச கூட மாட்டான். காதல் பற்றி நினைத்தது கூட இல்லை. எட்டாம் வகுப்பு படிக்கும் போது அவனை சுற்றி வந்த பெண்ணில் ஒரு பெண்ணை விரும்ப ஆரம்பித்து விட்டான். அடுத்த சில வருடங்களில் அவனின் குடும்ப சூழ்நிலை காரணமாக அவனை படிப்பை நிறுத்தி.. வெளிநாடு அனுப்பி வைத்தனர் அவன் பெற்றோர்.
வெளிநாடு சென்றும் காதல் தொடர்ந்துள்ளது. முதல் இரண்டு வருடங்கள் பேசிக்கொண்டிருந்த அந்த பெண், பின் "தொடர்பு எல்லைக்கு வெளியில்" போனாள்.. யாரிடமும் விசாரிக்க இயலாத நிலையில், தன் காதலை நம்பி வாழ்ந்து வந்தான் ராஜா.
அதன்பின் 3 வருடம் கழித்து ஊர் திரும்பியவன் 1 மாதத்திற்கு பிறகு எனக்கு போன் செய்தான். நான் எப்போதும் போல "எங்கடா இருக்க" என்று கேட்க "சுடுகாட்டுல இருக்கேன்" என்று சொன்னான்.. எனக்கு ஒன்றுமே புரியல. "என்னடா ஆச்சி" என்றால், "நான் லவ் பண்ணவ என்னை ஏமாத்திட்டா அக்கா" என்றான். இவ்ளோ வருஷம் "i love u" சொன்னவ இன்னிக்கு "i hate u" சொல்லிட்டு போயிட்டா அக்கானு புலம்புறான். அவனை தேற்றி, வீடு திரும்ப வைக்க நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும்.
அந்த குழப்பத்திலும் அந்த பெண்ணின் நம்பரை வாங்கிக் கொண்டு, அவனிடம் ரொம்ப நேரம் கெஞ்சி, அறிவுரை வழங்கிய பிறகுதான் வீட்டுக்கு போக சம்மதித்தான். எப்போதோ "காதலிக்கிறேன்" என்று கூறிய பெண்ணை இன்றும் ராஜா காதலிப்பது எனக்கு கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது. மறுநாள் விடிந்ததும் அந்த பெண்ணை தொலைபேசியில் அழைத்து என்ன விவரம் என்று கேட்ட பின் தலை சுற்றியது எனக்கு.. இதை படித்த பின் உங்களுக்கும்..
நடந்தது இது தான். ராஜா வெளிநாடு சென்ற இரு வருடத்திற்கு பிறகு அவளுக்கு திருமணம் நடந்து விட்டது. திரும்பி வந்த ராஜா அந்த தோல்வியை கூட அவளிடம் வெளிப்படுத்தாது ரொம்ப நாகரிகமாக நடந்துள்ளான். எங்கேயாவது பார்க்க நேர்ந்தால் கூட காதலை நினைவுபடுத்தாது சாதாரணமாக பேசியிருக்கிறான்.
ஏற்கனவே ராஜாவின் நல்ல குணம் அந்த பெண்ணுக்கு தெரிந்திருந்தாலும்.. காதலி ஏமாற்றியதை கூட பொறுத்து கொள்ளும் அவன் மனம், இவளை தடுமாறச் செய்ததால், மீண்டும் ராஜாவிடம் "உன்னை நான் இப்போதும் காதலிக்கிறேன்" என்று உளறி வைத்துள்ளாள். அத்தோடு அந்த பெண்ணின் கணவன் வெளிநாடு சென்றுள்ளதாகவும், வரும் போதெல்லாம் எதிர்த்து பேசினால் அடிப்பார் என்றும் (கவனிக்கவும் வேறு எதற்காகவும் அடித்ததில்லையாம்) சொல்லியிருக்கிறாள்.
ராஜா உடனே கஷ்டப்படும் அவளுக்கு ஆறுதல் அளிக்கிறேன் பேர்வழி என்று "நானே உன்னை கட்டிக்கிறேன்" என்று சொல்லி, மீண்டும் தொடர்ந்தது இவர்களின் காதல் தொலைபேசியில்..
இதற்கு பின் ராஜா "திருந்தாத ச்சீ.. தீராத விளையாட்டு பிள்ளை" பார்த்து விட்டு, "எனக்கு எதிலும் best வேணும்" என்று ஆரம்பித்து அவன் பின்னால் சுற்றிய இருவரை, ஒரு வாரம் காதலித்து பார்த்து விட்டு, இவளிடம் நடந்ததை விளக்கி "நீ தான் best-ன்னு" சொல்லி மறுபடியும் பெருமையாய்(?) "I love u" சொல்ல, அந்த பெண் "i hate u" என்று ஓடியே போய்விட்டாள்.. இதுக்கு தான் நம்ம தம்பி சுடுகாட்டுல வந்து படுத்துக்கிச்சி..
நீ இன்னும் ராஜாவை காதலிக்கிறியான்னு அந்த பொண்ணுகிட்ட கேட்டதுக்கு "ஆமா"ன்னு வேற சொல்லுது.. புருஷன் வேணுமா, ராஜா வேணுமான்னு கேட்டா, ரெண்டு பேரும் வேணும்னு சொல்லுது அந்த லூசு. அவன்கிட்ட, "கல்யாணம் ஆகிடுச்சின்னா தொல்லை பண்ண கூடாதுடா விடுடா"ன்னு சொன்னா, "கட்டுனா அவளை தான் கட்டுவேன்னு" ஒத்தை காலுல நிக்கிறான்.
இதுக்கு நான் ரெண்டு பேர்கிட்டயும் என்ன பதில் சொல்லிருப்பேன்?.. நான் என்னை சொன்னேன்னு அடுத்த பதிவில் சொல்றேன்.. நீங்க என் இடத்தில் இருந்தால் அவங்களுக்கு என்ன சொல்லி இருப்பீங்கன்னு மட்டும் சொல்லுங்க.. நிறைய பேர் இப்படி தான் "எது வாழ்கைன்னு" தெரியாம தடுமாருறாங்க.. அவங்களுக்காக நாம பேசுவோம்..
Subscribe to:
Post Comments (Atom)
26 comments:
அந்த 'ராஜா' நான் இல்லைப்பா... :))
// "கட்டுனா அவளை தான் கட்டுவேன்னு" ஒத்தை காலுல நிக்கிறான்.//
அந்த காலையும் வெட்டிடலாம் திவ்யா...
இதுக எல்லாம் திருந்தாத கேசுக பட்டாத்தான் தெரியும்....
திவ்யா நான் இந்த ஆட்டைக்கு வரல
ஏன் ரெண்டு பேரும் போட்டுக் குழப்புறாங்க
ரெண்டு பேருக்கும் அதிர்ச்சி வைதியம்தான் பெஸ்ட்
கொடுமையடா சாமி... என்னத்த சொல்லுவது...
கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்திகிட்டு இருக்கிற வீட்டில் போய் குழப்பம் பண்ணாம போய் வேலையைப் பார்க்கச் சொல்லுங்க.
ரெண்டு பேரையும் கவுன்சிலிங்குக்கு அனுப்புங்க
Dhivya, "April Fool's Day" க்கு முன்னோட்டம் பார்க்கிறீர்களா? விட்டு தள்ளுங்க. :-)
April Fool ஜோக் இல்லையே?
அப்படியென்றால் என் கருத்து: இந்த மாதிரி கீழ்ப்பாக்கம் கேஸுகளில் தலையிட்டால் நாமும் கீழ்ப்பாக்கம்தான் போகவேண்டும். மனநிலை கோளாறான கேஸ்கள் இரண்டும். எந்த புத்திமதியும் காதில் ஏறாது. திருத்த முயற்சிப்பது வீண் வேலை.
அந்தப் பொண்ணோட புருசன் கிட்ட போட்டுக் குடுத்துருங்க. ஒண்ணு அவன் அவளுக்கு ரெண்டு அறை குடுத்து, ராஜாவையும் ஆள் வச்சித் தூக்கிட்டு ஒழுங்கா குடும்பம் நடத்துவான். இல்லை அந்தப் பொண்ணை அத்து விட்டுருவான். அவளும் ராஜாவும் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இருக்கலாம். இன்னா சொல்றீங்க?
நல்லா மாட்டிடீங்க.
ஐயோ பாவம்
பாத்து கல்யானம் செஞ்சு வைங்க... உங்கள சங்கததலைவியா போட்டு உங்க தலைமையில கல்யானம் செஞ்சுக்க இன்னும் ஏகப்பட்ட ஜோடி வெயிட்டிங்.... ம்ம்ம் ஆரம்பிங்க... மனிதர் உனர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல....
அந்த ரெண்டு பேருக்கும்
பித்து பிடிச்சிருச்சி,
தெளிய வையுங்கள்.
பல பய புள்ளிக இப்புடித்தான் தலைகால் புரியாம திரியிதுக திவ்யா... எது வாழ்கை-நு நிறைய பேருக்கு குழப்பம்.
இது உண்மை கதை..
ரெம்ப நல்ல இருக்கு இவங்க ரெண்டு பேர் உடைய விளையாட்டு... ஏம்பா அந்த பொண்ணோட புருசனின் நிலைமையை நினைச்சி பார்த்தீங்களாப்பா?.. அவன் என்ன பாவம் செய்தான்.. வெளிநாட்டில் கஷ்டபடுவது யாருக்காக?.. இதையும் மனசுல வச்சு தீர்ப்பை சொல்லுங்க..
//இது உண்மை கதை..///
கிராமத்தானாக இருந்தால் இரண்டு கொலை விழுவது உறுதி..
ரெம்ப குழப்பமா இருக்கு. நீங்களே தீர்ப்பை சொல்லுங்க.
நம்ம துபாய் ராஜா முதல்ல வந்து நான் இல்லன்னு சொல்லுறத பாத்தா... எனக்கென்னமோ.. அவரு மேலதான் சந்தேகம் வருது..
:)
மற்றபடி மேற்படி சம்பவம் குறித்து நோ கமெண்ட்ஸ்
//Chitra said...
Dhivya, "April Fool's Day" க்கு முன்னோட்டம் பார்க்கிறீர்களா? விட்டு தள்ளுங்க. :-)///////
ஆஹா சித்ரா மேடம் , அது எப்படி கரக்டா நெத்தி அடி அடிச்சிங்க , நானும் இதேதான் சொல்ல வந்தேன்
உனக்கு உன் புருஷன் தான் முக்கியம்
அப்படின்னு அந்த பொன்னுகிட்டேயும்,
உனக்கு அவளை மாதிரியே ஒரு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன் அப்படின்னு ராஜாகிட்டேயும் சொல்லிருபிங்க.
sevinila palarnu oru arai vittu poi polappa parudanu anupunga. inniku neraya tharuthalainga ippadithan suthutunga
Whats her openion is correct.She can ask her husbend to stay out of country and she can live with raja in india.Ora kallula rendu mangai.Ladies mindset ithuthane.
எல்லா பெண்களும் அப்படி இல்லை நண்பா..
நீங்க இதை உண்மை கதை என்பதனால்:
அந்த பொண்ணோட கணவன்கிட்ட போட்டு கொடுத்துருங்க...இந்த மாதிரி வாழ்க்கைன்ன என்னன்னு தெரியாத மனித பிறவிகள் இருந்தா என்ன...இல்ல செத்தா என்ன......??..இந்த மாதிரி பையன்களுக்கும் ,பொண்ணுகளுக்கும் என்ன புத்திமதி சொன்னாலும் மண்டையில ஏறாது.....
ஒன்னு அந்த பொண்ணோட கணவன் (அவன் வாழணும்ன்னு நினைச்சா) இவள அத்து விட்டுருவான்... இல்ல "வெட்டி" விட்டுருவான்....
என்றும் நட்புடன்
சிங்கை கருப்பு,,,,
நான் கொஞ்சம் லேட் திவ்யா..
ஆனாலும் முடிவை நான் இன்னும் படிக்கவில்லை..
இந்த ரெண்டு பேரிடமும் கொஞ்சம் சிறுபிள்ளைத் தனமும், முடிவெடுக்கத் தெரியாத குழந்தைத்தனமும் தெரிகிறது..
இவர்களைச் சேர்த்து வைத்தாலும் அவர்கள் தானாகப் பிரிந்து விடுவார்கள்.. பின்பு உங்கள் பெயர் ரிப்பேர் ஆகி விடும்..
இதனால் தான் பல இடுங்களில் பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணங்கள் பலிக்கின்றன...
என்ன சரியா...? (ஏப்ரல் பூல் செய்து விடாதீர்கள் திவ்யா..)
சரி இப்போது போய் நான் உங்கள் பதிலைப் படிக்கிறேன்..
நன்றி..
நான் ரொம்ப லேட்டா வந்துட்டனோ ....சரி உங்களை நம்பி என்னோட கருத்த சொல்றன் .மசக்கவுண்டேர் ஐயா கந்தசாமி சொன்னாப்ல கிழ்பாக்கம் கேசோ என்னமோ... பொண்ணோட புருசனின் நிலைமையை நினைச்சி பார்த்தீங்களாப்பா?.. அவன் என்ன பாவம் செய்தான்.. வெளிநாட்டில் கஷ்டபடுவது யாருக்காக?.. இதையும் மனசுல வச்சு தீர்ப்பை சொல்லுங்க..நாடோடி சரியாய் சொல்லறாரு எல்லாத்தையும் அலசி ஆராஞ்சி பாத்தா ஒரு பொண்ணுக்கு முக்கியம் கட்டுன புருசந்தானுங்க.கலாச்சரம் கெடக்கட்டும் கழுத, பெண்ணியம் பேசுனாலும் பேஸ்டு கண்ணா பெஸ்ட் இன்னுட்டு போனபய கடைசிவரைக்கும் கண் கலங்காம பத்துக்குவானா சந்தேகம் தானுங்க.இன்னொன்னு பையனுக்கு நல்ல கொணந்தான் சிருசிலையே கெரகம் கோலம்புவது காதல் இல்ல
இனக்கவர்ச்சி தான் .நாம நல்லா புரிய வக்கொனுமுங்க.அப்புறம் வெளிநாட்டுல இருக்குற புருசனுக்கு இப்போதைக்கு விவரம் தெரியவேணாம். வந்த பொறவு நிச்சயம் புரியவச்சிடலாம்.பையனுக்கு பொண்ணு பாத்து கட்டி வைக்கோணும் மொதல்ல.பொன்னட புருசனுக்கு புத்தி சொல்லி நம்முர்லையே வேல பாக்க வக்கொனுமுங்க.
எம்ஜியார் கண்ணதாசன்சொன்னது தானுங்க என்ன வளம் இல்ல இந்த திருநாட்டில் என் கையை ஏந்த வேணும் அயல் நாட்டில்.சரி பாத்து முடிவு பண்ணுங்க,மூணு ஊசுரு சம்மதப்பட்டது மட்டுமுள்ள கலச்சாரமுங்கோ புதுமை பொண்டுவலா.எல்லாம் மனம் இருந்தா மார்க்கம் உண்டுங்கோ .
Post a Comment