Wednesday, March 31, 2010
முந்தைய பதிவின் முடிவு..
இதற்கு முந்தய பதிவை படிக்காதவங்க படிச்சிட்டு வாங்க.. தில் இருந்தா.. ஹி.. ஹி.. முந்தய பதிவில் சஸ்பென்ஸ் வைக்கும் எண்ணம் இல்லை. இடம் பற்றாத காரணத்தால் அதை பாதியிலேயே முடிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு.
அந்த பெண்ணிடம் கல்யாணம் பற்றி, காதல் பற்றி அறிவுரை சொன்னதும்.. கடைசியாக நடந்த உரையாடல்..
அந்த பெண்: ராஜா என்னை ரெண்டாவதா திருமணம் பண்றதை எதிர்க்குறீங்களா..
நான்: அப்போ புருஷன விட்டுட்டு வரியா?
அந்த பெண்: அது முடியாது. ரெண்டு பேருமே வேணும். (இதுதான் அவள் நினைப்பது)
நான்: நீ குழப்பத்துல இருக்க.. அதனால அவனையும் சேர்த்து குழப்புற. இரண்டாவதா கல்யாணம் பண்ணலாம். தப்பு இல்ல. ஆனா அதுக்கு முதல் புருஷன் குடிகாரன், கொடுமைக்காரன், இல்லை சந்தேகப்பட்டே சாகடிக்கிறவன் இப்டி ஏதாவது ஒண்ணு பண்ணனும். அட்லீஸ்ட் உனக்கு பிடிக்காமயாவது இருக்கணும். எதுவுமே இல்லாத பட்சத்தில், அவனை விட்டுபோக நீ நெனக்கிறது சரி இல்லை. உன் புருஷன் உன்னை கட்டியத தவிர வேற என்ன தப்பு பண்ணாரு. இந்த விஷயம் தெரிஞ்ச அவர் துடிச்சி போக மாட்டாரா? உனக்கும், உனக்கு பிறக்கப் போற குழந்தைக்கும் தான சம்பாதிக்க போய் இருக்காரு. ராஜா இன்னிக்கு இந்த படம் பார்த்துட்டு, 2 பேரை காதலிச்சி பார்க்குறவன் நாளைக்கு வேற படம் பார்த்து உன்னை விட்டுட்டு போயிட்டான்னா என்ன பண்ணுவ?
அந்த பெண்: அதான் அக்கா எனக்கும் சந்தேகமா இருக்கு. அதனால தான் நேத்து சண்டை போட்டுட்டு வந்தேன். ஆனா இன்னிக்கு கோபம் இல்லை. அவன் எப்படி இருந்தாலும் எனக்கு பிடிக்கும்.
நான்: சரி உன் இஷ்டம். நல்ல வாழ்க்கை கிடைச்சும் அருமை புரியாம கெடுத்துக்க போற. அவ்ளோ தான். இனி இது விஷயமா என்கிட்டே வராதிங்க. இதுக்கு பேர் மட்டும் காதல்னு சொல்லிட்டு திரியாத.. காதலுக்கே கேவலம்.. good bye.
ராஜாவிடம் நான்: (அந்த பொண்ணு மனசுல உள்ளதை முழுவதும் சொல்லி) கல்யாணம் ஆன பிறகு தொல்லை பண்ண கூடாதுடா. அவளுக்கு ரெண்டு பேருமே வேணுமாம்டா. புரிஞ்சிக்கோ. உனக்கு வேற பொண்ணு கிடைக்கும். அவளை மறந்துடு. அந்த பொண்ணோட புருஷன் வந்தபின் பொண்டாட்டி இப்டி என்று பேச்சு வந்தால் தாங்க மாட்டார்டா.. பாவம்டா அவரு. அதோட இன்னிக்கு தன் புருஷன் வெளிநாடு போயிட்டான்னு மாறிட்டா. நாளைக்கு நீயும் வெளிநாடு போவ.. நெனப்பு வச்சிக்கோ.
ராஜா: அதை பத்தி எனக்கு கவலை இல்லை. யார் என்ன சொன்னாலும் கட்டுனா அவளை தான் கட்டுவேன். இல்லேன்னா கல்யாணமே வேண்டாம்.
நான்: ரொம்ப சந்தோசம்.. எக்கேடும் கேட்டு போங்க. இனி இது விஷயமா நான் ஏதும் தலையிட மாட்டேன்.. அக்கானு சொல்லிட்டு, தொலைபேசியில் தொல்லை பண்ணாத. good bye.
அதன்பின் அவங்க அம்மா 15 நாள் கழித்து தொலைபேசியில் அழைத்தார்கள். அவனை பற்றி புலம்பினார்கள். இன்னமும் அப்டியே தான் அலையிறானாம் அவள் பின்னாடி.
இங்கு அவளால் அவன் கெட்டானா? அவனால் அவள் கெட்டாளா? ஒன்று மட்டும் நிச்சயம். இவர்களால் அந்த பெண்ணின் புருஷன் வாழ்க்கை போனது. வெளிநாடு செல்லும் சில ஆண்களின் வாழ்க்கை இப்டி கூட கேட்டு போகுதுங்க. பாவம்..
காதல் தப்பு இல்லை. விண்ணைத் தாண்டி வருவாயாவில் த்ரிஷா மாதிரி காதல் இருந்தும், ஏத்துக்கவும் முடியாம, மறுக்கவும் முடியாம இருக்குறது கூட காதல் தான்.. இது காதலா? எனக்கு புரியல.
Subscribe to:
Post Comments (Atom)
33 comments:
:))))
இது காதலா? எனக்கு புரியல.
.....சம்பந்தப்பட்டவர்களுக்கே என்ன என்று தெரியவில்லை. அப்புறம், நாம் ஏன் தலையை உருட்டி கொள்ள வேண்டும்?
s....ss.....sss.....
திவ்யாக்கா.. நான் சொன்ன ஐடியாவை செயல் படுத்திப் பாருங்க..
முகிலன் அவர்களை வழிமொழிகிறேன்... இரண்டுல ஒண்ணு நடக்கும்..
நல்லா கெளப்பறாங்க பீதியை....
"தூ" அதுங்க ரெண்டு பேரு முஞ்சிலையும் துப்பனும் போல இருக்கு ..
//உன் புருஷன் உன்னை கட்டியத தவிர வேற என்ன தப்பு பண்ணாரு//
சரியாக சொன்னிங்க திவ்யா!
சிலருக்கு ஜென்ம புத்தி
செருப்பால அடித்தாலும் போகாது.
விட்டு தொலைங்க தோழி எப்படியும் போகட்டும்!
முகிலன் சொன்னது சரியா இருக்கு. மூணு பேரும் நிம்மதியா இருப்பாங்க.
//இவர்களால் அந்த பெண்ணின் புருஷன் வாழ்க்கை போனது//
நிதர்சனமான உண்மை....
கலாச்சார சீரழிவாகவே இதை நான் நினைக்கிறேன். தயவு செய்து இதில் நீங்கள் தலையிடாதீர்கள்
விஜய்
இது காதலே இல்லை.
எனக்கும் கூடத்தான்... ஒன்னும் தோனல
இந்த மாதிரிக் காதல் பற்றி எல்லாம் எனக்கு சத்தியமாய் தெரியாதுங்க...
தலை சுத்துது..
//*காதல் தப்பு இல்லை. விண்ணைத் தாண்டி வருவாயாவில் த்ரிஷா மாதிரி காதல் இருந்தும், ஏத்துக்கவும் முடியாம, மறுக்கவும் முடியாம இருக்குறது கூட காதல் தான்.. இது காதலா? எனக்கு புரியல.*//
இது காதல் தான்... ஆனால் மானம் கெட்ட காதல்.
உண்மை இதில் நாம் தலையிட்டு சொல்ல ஒண்ணுமிலை அவர்களா திருந்தணும்
சொல்புத்தியும் இல்ல, சுயபுத்தியும் இல்ல...விட்டுத்தள்ளுங்க
இது ஒரு விதமான அட்ராக்ஷன். சப்போஸ் கல்யாணம் பண்ணினால் கொஞ்ச நாள் கூடத் தாங்காது. மனமுதிர்ச்சி இல்லாதவர்கள். விட்டுத்தள்ளுங்க. நாம கவலைப்பட வேற விஷயமா இல்லை.
/// பித்தனின் வாக்கு said...
இது ஒரு விதமான அட்ராக்ஷன். சப்போஸ் கல்யாணம் பண்ணினால் கொஞ்ச நாள் கூடத் தாங்காது. மனமுதிர்ச்சி இல்லாதவர்கள். விட்டுத்தள்ளுங்க. நாம கவலைப்பட வேற விஷயமா இல்லை.///
ஆமா சார் ஆமா
விட்டு தள்ளுங்க.... அனுபவபட்டுதான் திருந்துவாங்க..
//உன் புருஷன் உன்னை கட்டியத தவிர வேற என்ன தப்பு பண்ணாரு//
சரியாக சொன்னிங்க திவ்யா!
சிலருக்கு ஜென்ம புத்தி
செருப்பால அடித்தாலும் போகாது.
விட்டு தொலைங்க தோழி எப்படியும் போகட்டும்!
எஸ்.மகாராஜன் கருத்துதான் என் கருத்தும் திவ்யா
உங்களுக்கு விருது கொடுத்து
உள்ளேன், பெற்று கொள்ளவும், நன்றி.
வாதத்திற்கு மருந்து உண்டு பிடிவாதத்திற்கு மருந்து கிடையாதுன்னு சும்மாவா சொன்னாங்க. விடுங்க.... இந்த மாதிரி ஆட்களையெல்லாம் பற்றி நாம் யோசிக்கவே கூடாது.
விருது கொடுத்து பாராட்டியதற்கு மிக்க நன்றி. தாமதமாக நன்றி சொல்வதற்கு மன்னிக்கவும்.
திவ்யா ஹரி ..
முதல் முறையாக உங்கள் பதிவுகளை பார்க்கிறேன்.
இந்த காதல் பக்குவபடாத நிலையில் இருக்கிறது.. கண்டிப்பாக நிலைக்காது.
என்னதான் நாம் முன்னேறினாலும் சில அடிப்படை விசயங்களை மாற்ற முடியாது.. அதுபோல தான் வாழ்கையும்.. இவர்கள் சேர்ந்தாலும் கண்டிப்பாக வருத்தம் தான் படுவார்கள். அந்த பெண்ணின் கணவன் நிலை தான் (நல்லவனாக இருக்கும்பட்சத்தில்) பரிதாபமானது..
madam, now i am from this site., RASEAKAN.BLOGSPOT.COM ( send one hi mail to my mail id mam)
Thozhi,
எனக்கு கிடைத்த விருதுவினை உங்களுடன்
பகிர்ந்து இருக்கிறேன் பெற்றுகொள்ளவும்
http://maarasa.blogspot.com/2010/04/blog-post_11.html
நீங்கள் வாங்கிய அனைத்து விருதுகளுக்கும் எனது உளம் கனிந்த வாழ்த்துகள்..
நான் முந்தைய பதிவில் இட்ட பின்னூட்டத்தை படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்..அவர்களை அவர்கள் போக்கிலேயே விட்டு விடுங்கள்.. ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேன்.. தமிழ் நாட்டில் இது போன்ற ஆசை கலந்த உணர்வைத்தான் நிறைய பேர் காதலாக உணர்கிறார்கள்.. திரையில் உருக்கமான காதலைக் காண்பித்தாலும் அவர்கள் கவனிப்பது என்னமோ, காமத்தையும் பின்னர் உடல் அழகையும்.. வெளிப்படையாகத் தூற்றும் எல்லோரும் அவர்கள் மன நிலையில் நின்று யோசித்து பாருங்கள்... அவர்கள் செய்யும் தவறுக்கு யார் காரணம் என்று.. அறிவிழந்த அந்த பையனை அடித்துத் திருத்த வேண்டிய பெற்றோர் அவன் அடம்பிடிக்கிறான் என்று புலம்புகின்றனர்.. இதிலிருந்தே தெரிகிறது அவன் எப்பிடிப்பட்ட செல்லம் கொடுத்து வளர்க்கப் பட்டிருப்பான் என்று.. பெண்பிள்ளை வளர்ப்பும் அப்பிடித்தான் ஆனால் சற்று மாறுபட்ட சூழ்நிலை.. ஆகவே அவர்களின் இந்த நிலைக்கு அவர்கள் பாதி காரணம் என்றால் சமூகம் பாதி காரணம்.. அவர்களை மட்டும் இடிப்பது எந்த விதத்தில் ஞாயம்..? அவர்கள் உங்களிடம் சொன்னதால் இந்த ஒரு விஷயம் மட்டும் நமக்கு வெளிச்சத்தில் வந்துள்ளது.. இது போல் எத்துனை கள்ளத் தனமான விஷயங்கள் நடந்து கொண்டிருகின்றன என்று நினைத்த்ப் பார்க்கவே பயமாக இருக்கிறது.. எத்தனை இல்லங்களில் இந்த ரகசியத்தை மூடி மறைத்து வாழ்க்கை நடத்துகிறார்களோ... அண்ணாமலையானுக்கே வெளிச்சம்...
நன்றி..
என்ன ஆச்சு, திவ்யா, திரும்பவும் சென்னை போயிட்டீங்களா? மறுபடியும் சைலண்ட் ஆகிட்டிங்க. உடல் நலன் இல்லையா?
வணக்கம் அக்கா......
உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.. :)
நான் ரொம்ப லேட்.
நீங்க செஞ்சது சரி.அறிவு வளராத இந்த மாதிரி ரெண்டும்கெட்டானுங்க கூட பழகாம இருக்குறது தான் நமக்கு நல்லது.இல்ல இவங்க பஞ்சாயத்த தீர்க்குறதே நமக்கு வேலையா ஆய்டும்.
அப்புறம்,அடுத்த பதிவு எப்போ?
முதல் பதிவையும் படித்தேன் தோழி...
இரண்டு லூசு சேர்ந்து உங்களை லூசாக்க
முயற்சி பண்ணி இருக்கு
வேறென்ன சொல்ல...
///வெளிநாடு செல்லும் சில ஆண்களின் வாழ்க்கை இப்டி கூட கேட்டு போகுதுங்க. பாவம்..///
சரியா போச்சி...
எங்க போனீங்க. ஆளையே காணோம். எழுதுங்க.
Post a Comment