என்னையும் (நம்பி) அழைத்த கண்ணாவுக்கு நன்றிகள் பல.. பதின்மம் குறித்து நினைத்து பார்த்தால்..
முதலில்..
எனக்கு ஒரே ஒரு தங்கை மட்டும் தான்.. but இருவரும் சண்டை போட்டுட்டே இருப்போம் எப்போதும்.. குறிப்பா சாப்பிடும் போது. எதையும் ரசித்து சாப்பிடும் பழக்கம் உள்ளவள் நான்.. (மறுபடியும் வாங்குவதற்காகவே) சீக்கிரமாக சாப்பிடும் பழக்கம் உள்ளவள் தங்கை.. ஒரு நாள் அம்மா ஜாங்கிரி வாங்கிட்டு வந்து தந்தார்கள்.. நான் வழக்கம் போல ரசித்து கொண்டு கொஞ்சம், கொஞ்சமாக ருசிக்க.. தங்கையோ இருமுறை வாங்கி சாப்பிட்டு கொண்டிருந்தாள்.. நான் எப்போதும் அம்மா கொடுத்ததோட போதும்னு நெனக்கிற ஆளு.. மீண்டும் வாங்கவும் விரும்ப மாட்டேன்..
அன்னிக்கு அவ.. எங்க அம்மா கைல உள்ளதெல்லாம் முடிச்சிட்டு கடைசியா என் கைல உள்ள ஜாங்கிரிக்கு தாவினாள்.. அம்மாவும் "ஏன் இவ்ளோ நேரம் வச்சிருக்க? வச்சிருந்ததால தான் சின்னகுட்டி கேட்குது.. நம்ம பாப்பா தானே கொடுன்னு" சமாதானம் செய்ய.. நானும் கொஞ்சம் கொடுத்தேன்.. அவ அதையும் ஒரே வாயில் போட்டு கொண்டு மீண்டும் கை நீட்ட எனக்கு அழுகையே வந்து விட்டது.. அழ ஆரம்பித்ததும் அம்மா "வேற வாங்கி தரேன்.. பாப்பாட்ட கொடுன்னு" சொல்ல என் அழுகை அதிகமானது.. கைல உள்ளதை கொடுத்தாலும்.. அழுகை நின்ற பாடில்லை..
எங்க அப்பா (ஆசிரியர்) பள்ளி விட்டு வந்ததும் என் சோகத்திற்கான காரணம் கேட்க அம்மா.. ஜாங்கிரி பிரச்சனையை சொல்லி, "ரெண்டு பேரும் வேணும்னு கேட்டா நான் எங்க போறது?.. வேற ஏதாவது வேணுமான்னு கேட்டா வேணாம்னு அழ ஆரம்பிச்சிடுச்சி.. ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் விட்டு கொடுத்தால் தானே பிரச்சனை தீரும்" என்று சொன்னார்கள்.. நான் அவர்கள் சொன்னதையே நினைத்து கொண்டு படுத்திருந்தேன்.. இரவு முழுதும் தூங்க வில்லை.. தூக்கம் வரவும் இல்லை.. வடிவேலு மாதிரி, "ஜாங்கிரி போச்சே"ன்னு மனதினுள் புலம்பிட்டே இருந்தேன்..
இது ஒன்றும் முதல் முறை அல்ல.. அவள் விரும்பி சாப்பிடும் எது வாங்கினாலும் பிரச்சனை தான்.. விட்டு கொடுன்னு தினம் சொல்லி, சொல்லியே அம்மாவுக்கு அலுத்து விட்டிருந்தது.. அம்மா அடிக்கடி "விட்டு கொடுடா உனக்கு தேவையானது தானாவே கிடைக்கும்ன்னு தான் எப்போதும் சொல்வாங்க.. போதும் என்ற மனமே பொன் செய்யும மருந்துன்னும்" அடிக்கடி சொல்வாங்க.. அதையெல்லாம் யோசிச்சிட்டு படுத்து கிடந்தேன்.. எதனால இவ்ளோ பிரச்சனை? ஜாங்கிரிக்காகவா? இல்லை அவ சாப்ட்டுட்டாலேன்னு பொறாமையான்னு யோசிச்சேன்.. இல்லை என் தங்கச்சி.. அவளுக்கு பிடிச்சதால தானே அவ சாப்பிடுறான்னு தோணுச்சி..
கடைசியா ஒரு முடிவு பண்ணதும் நிம்மதியா இருந்துச்சுங்க.. இனி அவளுக்கு பிடிச்ச இனிப்பை நான் சாப்பிட மாட்டேன்னு முடிவு பண்ணேன்.. இதுவரை (2010 ஜனவரி 1 வரை) நான் சாப்பிடுவது இல்லை.. அவளுக்கு இந்த விஷயமே தெரியாது.. நான் முடிவு பண்ணது யாருக்குமே தெரியாது.. அதுக்கு அப்புறம் நான் எல்லார்கிட்டயும் எனக்கு "ஸ்வீட்ஸ் பிடிக்காது"ன்னு சொல்லிடு சாப்பிட மறுத்துடுவேன்.. கொஞ்ச நாள் முன்னாடி அம்மா ரொம்ப வற்புறுத்தி "ஏன் சாப்பிடுவது இல்லை" என்று கேட்டு கண் கலங்குனதும்தான் உண்மையை சொன்னேன்.. புலம்பி தள்ளிட்டாங்க.. இது இப்போ எல்லார்க்கும் தெரியும்.. எனக்கு பிடிக்கும் என்பதால் சாப்பிடாமல் இருக்காதே என்று தங்கை கேட்டுக்கொண்டதால்தான் இப்போ நான் இனிப்பு சாப்பிடுகிறேன்..
அடுத்து..
இந்த உலகத்துல உண்மை பேசினால் கூட அடிதாங்க வாங்க வேண்டி இருக்கு.. எப்படின்னு கேட்குறீங்களா? ஸ்கூல்க்கு ஒரு முறை கட் அடிச்சிட்டேன்.. மறுநாள் ஸ்கூல்க்கு போனதும் தான் வினையே ஆரம்பிச்சுது.. லீவ் போட்டே பழக்கம் இல்லாததாலேயும்.. புதுசா ஸ்கூல் மாறுனதாலேயும்.. எனக்கு லீவ் லெட்டர் எழுத தெரியல.. தோழிகிட்ட அட்வைஸ் கேட்க.. அவளோ எனக்கு உடல் நிலை சரி இல்லாத காரணத்தினால்ன்னு ஆரம்பிச்சி முழுசா ஒரு முறை சொல்லிட்டு (ஒப்பிச்சிட்டு) என்ன காரணமோ அதை போட்டு எழுத கூட உனக்கு தெரியாதான்னு கிண்டல் பண்ணிட்டு போய்ட்டா.. நானே எழுதுவதுன்னு முடிவெடுத்து, எழுதி.. வருகை பதிவேட்டில் வைத்து விட்டு எனக்கு நானே வேட்டு வைத்து கொண்டேன்.. சிறிது நேரத்தில் வந்த ஆசிரியை என்னை அன்புடன் அழைத்து "முதுகில் ஒன்று" வைத்து, உடம்பு சரி இல்லைன்னு எழுதி கொடுன்னு சொல்லிட்டாங்க.. எழுதி கொடுத்தேன்.. அடிச்சதுக்கு காரணமா? "சினிமாவுக்கு சென்ற காரணத்தினால்"ன்னு எழுதுனது தாங்க.. பொய் சொன்னா திட்டுற உலகம் உண்மைசொன்னாக் கூட திட்டும்ன்னு அன்னிக்கு தாங்க தெரிஞ்சிகிட்டேன்.
அடுத்து..
ஒரு முறை டிவியில்.. ரமண மகரிஷி வாழ்க்கை வரலாறு விளக்கப் படமாக ஒளிபரப்பாகியது.. வாசலில் விளையாடிக் கொண்டு இருந்த என் காதில் அப்பப்போ வந்து விழுந்தது.. அதில் ரமணருக்கு சுய கட்டுப்பாட்டை உணர்த்த யாரோ ஒருவர் (பெயர் நினைவில் இல்லை) ரமணரின் நாக்கில் வெள்ளம் வைத்து கொஞ்ச நேரம் சாப்பிடாமல் இருக்க சொன்னாராம்.. ரமணரும் சாப்பிட கூடாது என நினைத்து கொண்டே இருந்தாராம்.. சிறிது நேரம் கழித்து பார்த்தால் வாயில் இருந்த வெள்ளம் கரைந்து போய்விட்டிருந்ததாம்.. ரமணரிடம் அவர், "இது தான் உன் நிலை.. உன் நாவை கூட, உன்னால் கட்டுப்படுத்த முடியவில்லை" என சொல்லி அனுப்பி வைத்தாராம்.. அதன் பின் ரமணர் தாமாக பழகி, வெள்ளம் நாவில் வைத்தால் கரையாத அளவுக்கு நாவை கட்டுப்படுத்தினாராம்.. அதன் பின் ஐம்புலனையும் அடக்கி வாழ்ந்தவர் அவர்.. இதைக் கேட்டதும் நானும் வைத்து பார்த்தேன்.. அடுத்த நொடி வெள்ளம் காணாமல் போய் விட்டது.. சில முறை பழகியதில் என் நா என் சுய கட்டுப்பாட்டில் வந்தது அன்றே.. இது மாதிரி நிறைய ட்ரை பண்ணிருக்கேன்.. முடிந்த வரை வெற்றியும் கண்டிருக்கிறேன்..
அடுத்து..
கல்லூரி படிக்கும் போது அலைபாயுதே சினிமாவுக்கு தோழிகள் மூவர் எனக்கும் தெரியாமல் அழைத்து சென்று விட்டனர்.. தியேட்டர் வாசலுக்கு போகும் வரை எனக்கு தெரியாது.. எனக்கு கிளாஸ் கட் அடிக்க தெரியலையாம். இவர்கள் என்னை திருத்துறாங்கலாம் (?!).. படம் ஆரம்பிக்கும் நேரம் ஆனதால் என்னை பேச விடாமல் உள்ளேயும் அழைத்துச் சென்று விட்டனர்.. (அவங்களுக்கு கேட்ட நேரம்) ஆனா உள்ள போனதும் தான் தெரிஞ்சிது, மூவருக்கும் துணையாக உள்ள பசங்க இருக்காங்கன்னு.. யார் எப்படி இருந்தா நமக்கென. நம்ம பயம்.. நமக்கு.. ஒருத்தியையும் படம் பார்க்கவோ.. அவங்க ஆள் கூட உட்காரவோ விடவில்லை.. ஒருத்தி தப்பித்து கொண்டாள்.. மற்ற இருவரையும் என்னுடன் தான் இருக்கணும்னு பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டேன்.. ஆனால் அப்போதும் படம் பார்க்க மனம் ஒப்பாமல் "வீட்டுக்கு போகணும் அம்மா திட்டுவாங்க" என்று 16 வயதினிலே கமல் மாதிரி புலம்பிட்டே இருந்தேன்.. என்னை திட்டி கொண்டே இருந்தார்கள் படம் முடியும் வரை.. வீட்டுக்கும் கூட்டிட்டு வந்த விட்டு சென்றார்கள்.. அம்மா கிட்ட எக்ஸ்ட்ரா கிளாஸ் இருந்துச்சினு, அவங்களே பொய் சொல்லி சமாளித்து சென்றார்கள்.. அதன்பின் நிறைய முறை கட் அடித்தார்கள். எனக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டுட்டு போவாங்க..
இந்த தொடரை தொடர.. நான் அழைக்கும் நண்பர்கள்..
ப்ரியமுடன்.. வசந்த்..
பித்தனின் வாக்கு..
அண்ணாமலையான்..
s.மகாராஜன்..
மோகனன்..
சங்கவி..
வெற்றி..
இன்னும் யாராவது நண்பர்கள் இந்த தொடரை தொடர நினைத்தால் அவர்களும் தொடரலாம்.. எனக்கு இது மாதிரி எழுதி பழக்கம் இல்லை.. ஏதும் தப்பாக இருந்தால் நண்பர்கள் மன்னிக்கவும்..
45 comments:
Wt a long... story.. :) so..nice :)
அட அதுகுள்ள பதிவா.....உங்க சுறுசுறுப்பு அசர வைக்குது. தங்கை, பள்ளி, ரமணர், அலைபாயுதேன்னு கலந்துகட்டி அடிச்சிட்டீங்க.. அருமை..
திவ்யாஹரி ரெம்ப நல்ல பிள்ளை போல் இருக்கு... பதின்ம காலங்களில்
"உண்மை விளம்பி" என்ற பட்டத்தை உங்களுக்கு அளிக்கிறேன் :))
இயல்பாக எழுதி இருக்கிறீர்கள்.
என்ன திடீர்னு ஆஃப்டர் அப்ரூவல்... எனி பிராப்ளம்...
தங்கச்சிக்கு சுவீட் புடிக்கும்ணு சுவீட்டே சாப்பிடாம இருந்த அக்காவ இப்பத்தான் பாக்குறேன்...நல்லவேள அக்கா தங்கச்சியா பொறந்தீங்க... அண்ணன் தம்பியா இருந்திருந்தீங்க..அடிதடியால்ல ஆயிருக்கும்.... லீவ்லட்டர்... மகரிஷி.... ம்ம்...இனிமையான நினைவுகள்....ரசித்தேன்.....
ஆத்தாடி!!நீங்க இந்த அளவிற்கா அப்பிராணியா இருந்திருக்கீங்க ??
ரொம்ப பாவம்...
கண்ணு படப் போகுது..!
நினைவுகள் சுகமானவை தோழி!
"பதின்ம காலங்களில் ரெம்ப நல்ல பிள்ளையா நீங்க!
// நம்ம பயம்.. நமக்கு.. ஒருத்தியையும் படம் பார்க்கவோ.. அவங்க ஆள் கூட உட்காரவோ விடவில்லை //நல்ல வேலை பண்ணிருக்கிங்க கா ஹி ஹி ஹி !!!!!!
உங்க தங்கை மாதிரிதான் என் அண்ணாவும்... ஆனா நா உங்கள மாதிரி தியாகம் பண்ணல! என் அண்ணன விட வேகமா சாப்பிட பழகிட்டேன்...
இப்பவே என் ரெண்டு புள்ளைங்களும் இப்படித்தாம்மா இருக்குங்க..:) அதென்னவோ மூத்ததுன்னாலே விட்டுத்தான் கொடுக்கணும் போல..:)
கலக்கலா இருக்கு..நானும் மூத்த பையன் தான்..ஒரு தம்பி..நான் மெதுவாய் சாப்பிடுவேன்..அவன் வேகமாய் சாப்பிட்டு விட்டு என் பங்கிலும் கை வைப்பான்..உங்கள் தங்கையை போல் :))
நானும் உங்களை போல தான் தோழிகளுடன் படம் பார்க்கபோனால் வீட்டுக்கு போகணும் அம்மா திட்டுவங்கனு படம் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை சொல்லுவேன் அக்கா!!!!! நாம் இருவரும் ஒரே மாதிரி அக்கா !!!!!! ;)
தங்கை பாவம் திவ்யாஹரி..இவ்வளவு நாள் கழித்து அம்மாவையும் சேர்த்து வருத்தப் படுத்திட்டீங்களே...காரணம் சொல்லாமல் இருந்திருக்கலாம் இல்லை..?
என்னடா நம்மை இந்த தொடர்பதிவு எப்போ தாக்க போகுதோன்னு நினைச்சிட்டிருந்தேன்..இப்போ தாக்கிடுச்சு..கொஞ்சம் லேட் ஆகும்(அநேகமாக இம்மாத மத்தி அல்லது இறுதி)..பரவாயில்லேல?
நம்ம பயம்.. நமக்கு.. ஒருத்தியையும் படம் பார்க்கவோ.. அவங்க ஆள் கூட உட்காரவோ விடவில்லை.. ஒருத்தி தப்பித்து கொண்டாள்.. மற்ற இருவரையும் என்னுடன் தான் இருக்கணும்னு பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டேன்.. ஆனால் அப்போதும் படம் பார்க்க மனம் ஒப்பாமல் "வீட்டுக்கு போகணும் அம்மா திட்டுவாங்க" என்று 16 வயதினிலே கமல் மாதிரி புலம்பிட்டே இருந்தேன்.. என்னை திட்டி கொண்டே இருந்தார்கள் படம் முடியும் வரை..
.................ha,ha,ha,ha,ha.....சிரிச்சு முடியலை. நல்லா மாவு கிரைண்டர் (a.k.a. கொசுவத்தி சுருள்) சுத்தி இருக்கீங்க.
சுவாரஸ்யம்...
விட்டுக்கொடுத்துப்போவார் கெட்டுப்போவதில்லை நிஜம்தான்...
பதிவு போட்டாச்சு திவ்யா & ஹரி
தங்கச்சிக்காக விட்டுக் கொடுத்தது சூப்பர்...அப்பறம் அந்த அலைபயுதே (என்னா வில்லத்தனம்..?)
nalla irukkungaa.
\\"சினிமாவுக்கு சென்ற காரணத்தினால்"ன்னு எழுதுனது தாங்க.//
என்ன கொடுமையங்க இது.
me too have plan to write nostalgia., but ther is lot of untolerable fun, so i hesitate...
wishes thiyahari!
//Sivaji Sankar said...
Wt a long... story.. :) so..nice :) //
இன்னும் இருக்குங்க.. போதும்னு விட்டுட்டேன்..
//கண்ணா.. said...
அட அதுகுள்ள பதிவா.....உங்க சுறுசுறுப்பு அசர வைக்குது. தங்கை, பள்ளி, ரமணர், அலைபாயுதேன்னு கலந்துகட்டி அடிச்சிட்டீங்க.. அருமை.. //
என்னை நம்பி கூப்பிட்டதுக்கு மரியாதை கொடுக்கணும்ல கண்ணா.. அதான் இவ்வளவு fast post.
//தமிழ் உதயம் said...
திவ்யாஹரி ரெம்ப நல்ல பிள்ளை போல் இருக்கு... பதின்ம காலங்களில் //
நீங்க சொன்ன சரிதான்..
//சைவகொத்துப்பரோட்டா said...
"உண்மை விளம்பி" என்ற பட்டத்தை உங்களுக்கு அளிக்கிறேன் :)) //
ஹா..ஹா..ஹா..
//க.பாலாசி said...
அண்ணன் தம்பியா இருந்திருந்தீங்க..அடிதடியால்ல ஆயிருக்கும்..//
இருந்திருக்கலாம்ங்க.. என் தங்கை என் மேல ரொம்ப பாசமா இருப்பா.. அவளுக்காக எதுவும் செய்யலாம்.. நான் இதை மட்டும் தான் செஞ்சேன்..
//என்ன திடீர்னு ஆஃப்டர் அப்ரூவல்... எனி பிராப்ளம்..//
ஆமாங்க பாலாசி.. சின்ன பிரச்சனை அதான்.. இப்போ எடுத்துட்டேன்..
//ஜெய்லானி said...
ஆத்தாடி!!நீங்க இந்த அளவிற்கா அப்பிராணியா இருந்திருக்கீங்க ?? //
ஆமாங்க.. இப்போ நெனச்சா அந்த தோழிகள் பாவம்னு தோணுது..
//அண்ணாமலையான் said...
ரொம்ப பாவம்...//
அப்டியா? //
//மோகனன் said...
கண்ணு படப் போகுது..! //
எதுக்கு? யாருக்கு?
//S Maharajan said...
"பதின்ம காலங்களில் ரெம்ப நல்ல பிள்ளையா நீங்க! //
அப்படி தான் சொல்லிக்கிறாங்க..
BONIFACE said...
// நம்ம பயம்.. நமக்கு.. ஒருத்தியையும் படம் பார்க்கவோ.. அவங்க ஆள் கூட உட்காரவோ விடவில்லை //நல்ல வேலை பண்ணிருக்கிங்க கா ஹி ஹி ஹி !!!!!! //
என்ன வேலை பண்ணிருக்கேன்னு இப்போ புரியுது.. அப்போ புரியலைம்மா.. ஹி.. ஹி.. ஹி..
//என் நடை பாதையில்(ராம்) said...
உங்க தங்கை மாதிரிதான் என் அண்ணாவும்... ஆனா நா உங்கள மாதிரி தியாகம் பண்ணல! என் அண்ணன விட வேகமா சாப்பிட பழகிட்டேன்... //
என்னோட interest ரசிச்சி சாப்பிடனும் .. வேகமா சாப்ட்டா ரசிக்க முடியாதே.. அதான் இப்படி..
//♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
இப்பவே என் ரெண்டு புள்ளைங்களும் இப்படித்தாம்மா இருக்குங்க..:) அதென்னவோ மூத்ததுன்னாலே விட்டுத்தான் கொடுக்கணும் போல..:) //
நாங்க பயன்படுத்துன எல்லாத்தையும் (உடை முதல் நடை வண்டி வரை..) சின்னவங்க பயன்படுத்துவதால்.. அவங்களுக்காக விட்டு கொடுக்கலாம்னு தோணுச்சி அண்ணா..
//வெற்றி said...
கலக்கலா இருக்கு..நானும் மூத்த பையன் தான்..ஒரு தம்பி..நான் மெதுவாய் சாப்பிடுவேன்..அவன் வேகமாய் சாப்பிட்டு விட்டு என் பங்கிலும் கை வைப்பான்..உங்கள் தங்கையை போல் :)) //
same blood..
//Saraj said...
நானும் உங்களை போல தான் தோழிகளுடன் படம் பார்க்கபோனால் வீட்டுக்கு போகணும் அம்மா திட்டுவங்கனு படம் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை சொல்லுவேன் அக்கா!!!!! நாம் இருவரும் ஒரே மாதிரி அக்கா !!!!!! ;) //
"உன்னவர்" கூட போய் பாரு.. சொல்ல மாட்டேன்னு நெனக்கிறேன்.. நானும் அப்படி தான்.. ஹி ஹி ஹி..
//ஸ்ரீராம். said...
தங்கை பாவம் திவ்யாஹரி..இவ்வளவு நாள் கழித்து அம்மாவையும் சேர்த்து வருத்தப் படுத்திட்டீங்களே...காரணம் சொல்லாமல் இருந்திருக்கலாம் இல்லை..?//
சொல்லுவதாக எண்ணம் இல்லை ஸ்ரீராம். நான் ஏதோ ஸ்டைல்க்கு சொல்வது போல தங்கை திட்டினாள். அதான் சொல்ல வேண்டியதாய் போச்சி..
//வெற்றி said...
என்னடா நம்மை இந்த தொடர்பதிவு எப்போ தாக்க போகுதோன்னு நினைச்சிட்டிருந்தேன்..இப்போ தாக்கிடுச்சு..கொஞ்சம் லேட் ஆகும்(அநேகமாக இம்மாத மத்தி அல்லது இறுதி)..பரவாயில்லேல? //
எவ்வளவு நாள் ஆனாலும் பரவாயில்லை .. ஆனா எழுது வெற்றி..
//Chitra said...
...ha,ha,ha,ha,ha.....சிரிச்சு முடியலை. நல்லா மாவு கிரைண்டர் (a.k.a. கொசுவத்தி சுருள்) சுத்தி இருக்கீங்க.
நன்றி சித்ரா.. உங்க followernu சொல்லிக்கிற மாதிரி இருந்தா சரி தான் அக்கா..? //
//பிரியமுடன்...வசந்த் said...
பதிவு போட்டாச்சு திவ்யா & ஹரி//
ரெண்டு பேரும் உங்களை follow பண்றதாலேயா வசந்த்? ஓகே.. ஓகே.. //
//புலவன் புலிகேசி said...
தங்கச்சிக்காக விட்டுக் கொடுத்தது சூப்பர்...அப்பறம் அந்த அலைபயுதே (என்னா வில்லத்தனம்..?) //
என்ன வில்லத்தனம் பண்ணிருக்கேன்னு இப்போ புரியுது.. அப்போ புரியலை புலவரே.. ஹி.. ஹி.. ஹி..
//ILLUMINATI said...
nalla irukkungaa. //
சரிங்க.. வந்து பார்க்கிறேன்..
//ROMEO said...
\\"சினிமாவுக்கு சென்ற காரணத்தினால்"ன்னு எழுதுனது தாங்க.//
என்ன கொடுமையங்க இது. //
உண்மை பேசணும்னு சின்ன வயசுல சொல்லிக் கொடுத்ததால வந்த பாதிப்பு.. வேற ஒன்னும் இல்லை..
//வெள்ளிநிலா ஷர்புதீன் said...
me too have plan to write nostalgia., but ther is lot of untolerable fun, so i hesitate...
wishes thiyahari! //
thank you sir..
எனக்கு ஓட்டு போட்ட அனைவருக்கும் நன்றி..
உங்களுக்கும் எனக்கும் இரண்டு ஒற்றுமை இருக்கு நானும் மிக மெதுவா தான் சாப்பிடுவேன் ,மற்றொண்டு என் தம்பிக்காக ஆறு வருடம் இப்படி சாப்பிடாமல் இருதேன், இப்போ இல்ல....
அதென்ன கா //புரியலைம்மா//நான் பையன் கா
இவ்வளவு வெள்ளந்தியா இருக்கீங்களே திவ்யா ரொம்ப அருமை இடுகை
ரெம்ப யதார்த்தமா எழுதியிருக்கீங்க.
ஆகா திவ்யா, உன்னை மாதிரியே எனக்கும் தியேட்டருக்கு போய் வெறுப்பேத்திய சம்பவம் இருக்கு. எழுதுகின்றேன்.
இந்த பதின்ம வயது தொடர் வரும் போதே என்னை யாரும் கூப்பிடக் கூடாது என்று நினைத்துக் கொண்டு இருந்தேன், ஆனால் கூப்பிட்டு விட்டாய். என்ன பண்ணுவது அழைப்பது தங்கை ஆயிற்றே. எழுதுகின்றேன் (எப்படி நீயும் சுசியும் ஒரே மாதிரி இருக்கீங்க,மாட்டி விடுவதில்). நன்றி அழைப்பிற்கு.... கீர்ர்ர்ர்ர்ர் கிர்ர்ர்ர்ர்ர். இப்பவே கண்ணைக் கட்டுதே.
மனதைத் தொட்ட நடை..
நல்ல நினைவுகள்
அலை பாயுதே சமயத்துல கல்லூரில படிச்சிட்டு இருந்தீங்களா?
ஹ்ம்ம் ஓகே
ஹிஹிஹிஹி..
//"சினிமாவுக்கு சென்ற காரணத்தினால்"ன்னு எழுதுனது தாங்க.. பொய் சொன்னா திட்டுற உலகம் உண்மைசொன்னாக் கூட திட்டும்ன்னு அன்னிக்கு தாங்க தெரிஞ்சிகிட்டேன்.//
ஆனாலும் நீங்க ரொம்பவே நல்லவருங்க...
//எனக்கு ஒரே ஒரு தங்கை மட்டும் தான்//
”
இந்த இடத்தில் “அவளுக்கும் ஒரே ஒரு அக்காதான்” என்று சேர்த்து பாருங்கள். மொக்கை தானாக வந்துவிடும் :)))
ada... school, colege-nnu asathitinga ponga.
ada school collegennu asaththitinga ponga
Hi friend,why no new posts?
I've posted one.Please come and comment.And please do post quickly. :)
http://illuminati8.blogspot.com/2010/03/my-little-bride-review.html
திவ்யாஹரி said...
//Sivaji Sankar said...
Wt a long... story.. :) so..nice :) //
இன்னும் இருக்குங்க.. போதும்னு விட்டுட்டேன்..திவ்யாஹரி said...?????????????????????????
//
நல்லாயிருக்கு
உங்க அனுபவங்கள் படிக்க நல்லாருக்குங்க ...
Post a Comment